Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 6 டிசம்பர், 2012

ஓராண்டாக முடங்கி கிடக்கும் குத்தாலம் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம்


இயந்திரம் பழுது காரணமாக, குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும், இதுவரை பழுது நீக்கும் பணியை, மின் வாரியம் துரிதப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, 101 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின், மொத்த உற்பத்தி திறன், 516 மெகாவாட். இவற்றில், நாகை மாவட்டம் குத்தாலம் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில், 101 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரே யூனிட் உள்ளது. இந்த யூனிட்டில், கடந்தாண்டு மின் உற்பத்திக்கான இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாகியும், இதுவரை பழுதான இயந்திரத்தை மாற்ற, மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், 101 மெகாவாட் மின் உற்பத்தி முடங்கியுள்ளது.

 குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலைய, இயந்திரம் பழுதாகவில்லை; மாறாக, வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலைய,"ஜெனரேட்டர்' தான் பழுதாகியது. குத்தாலம் நிலையத்தில் உள்ள, "ஜெனரேட்டரை' எடுத்து, வழுதூர் நிலையத்தில் பொருத்தப்பட்டது. இதன் காரணமாக, குத்தாலம் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்றும், மின் வாரிய உயர் அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். குத்தாலம் மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயுவை, தனியார் நிறுவனத்திற்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதே, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்றும், வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக