Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 8 டிசம்பர், 2012

மோடிக்கு விசா இல்லை,தடை தொடரும் : அமெரிக்கா


 குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குஜராத்தில் கலவரத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றம்சாட்டி மோடிக்கு விசா மறுப்பு கொள்கையை அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியது: அமெரிக்க எம்.பி.க்கள் எழுதிய கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற அமெரிக்காவின் கொள்கையிலும் மாற்றம் இல்லை.

குஜராத் மாநிலத்துடன் வர்த்தக உறவு, முதலீடு, பல்கலைக்கழகங்கள் அளவிலான தொடர்புகள் தொடரும். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்து விட்டதா என்ற கேள்வியை இந்திய அரசிடம்தான் கேட்க வேண்டும் என்றார் மார்க் டோனர்.

எஃப்டிஐ விவகாரம்: தொடர்ந்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) அனுமதிப்பது தொடர்பாக நிலவும் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, எனவே எஃப்டிஐ குறித்து அங்குள்ள அனைவரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதன் சாதக, பாதகங்களை ஆய்வு செய்யவும், பொருளாதார நன்மைகளை அளவிடவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக