பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற எங்களது முயற்சிக்கு பஞ்சாப் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் சிறந்த ஆதரவு அளித்தன. அன்னிய முதலீடு, நமது விவசாயிகளுக்கும், நுகர்வோர்க்கும், நமது மக்களுக்கும் நிச்சயம் பயனளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
12வது ஐந்தாண்டு திட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக வும், விவசாய வளர்ச்சி 4 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடையவும், விவசாய துறையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் மேலாண் அனுபவங்கள் பெறவும் அன்னிய முதலீட்டை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அன்னிய முதலீட்டின் மூலமாக விவசாயத்துறையில் புதிய முதலீடுகள் செய்யப்படும். கடினமாக உழைக்கும் பஞ்சாப் மற்றும் இதர மாநில விவசாயிகள், இதன் மூலமாக உண்மையான பசுமைப்புரட்சியையும், உணவு பாதுகாப்பையும் ஏற்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக