Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 21 ஜூன், 2012

பள்ளி - கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: கல்வித்துறை நடவடிக்கை

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையும் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் பள்ளி-கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என கல்வி துறை உயர் அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடைசெய்ய வேண்டும் என அறிவுரை கூறி உள்ளனர். 

இதையடுத்து சேலம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்களுக்கு சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஈஸ்வரன் அறிவுரை வழங்கி உள்ளார். இதில் அவர் கூறிஇருப்பதாவது:- 

பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்தகூடாது. இதனால் மாணவ, மாணவிகளின் நேரம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க பள்ளி வளாகத்தில் செல்போன் எடுத்து வரவும், பயன்படுத்தவும் கூடாது என தெரிவித்துள்ளார். 

இந்த அறிவுரையை ஏற்று சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி , கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு யாரும் இனி பள்ளி , கல்லூரி வளாகத்தினுள் செல்போன் பயன்படுத்தகூடாது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த அறிவுரையை மீறி யாரும் கல்லூரி, பள்ளி வளாகத்தில் செல்போன் பேசினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கல்வி துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சொர்க்கம் எங்கே உள்ளது ?

எல்லோரும் மிக அளிதில் சொல்லிவிடுவோம் ,சொர்க்கம் மற்றும் நரகம் ,உலகின் அழிவிற்கு பின் ,மனிதன் மீண்டும் எழுப்பபட்டு ,செயல்கள் பற்றி படைத்த அல்லாவால் விசாரிக்கப்பட்டு   பின்பு அல்லா சொர்க்கம் ,நரகம் என்று தீர்ப்பளிப்பானே அந்த மறுமை நாளில்தான் பார்க்க முடியும் என்று சொல்லிவிடுவோம் .
          ஆனால் ,வல்ல அல்லா இந்த பூலோகத்தில் உள்ள மனிதர்களுக்கு தன்னுடைய பிரதிநிதியை அனுப்பினானே ,அந்த நம் உயிரினும் மேலான பெருமானார் (ஸல் ) கூறினார்கள் ,தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது .

        எந்தத் தாயின் காலடி ? 

 ,ஒருவனின் கருவை பத்துமாதங்கள் பல்வேறு சிரமங்கள் பட்டு ,பெரும் பெரும் வலிகளையெல்லாம் சுகமாக ஏற்றுக்கொண்டு ஆனத்த கண்ணீர் வடித்தாளே அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்றார் எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்).

        மரணத்தின் வாயிலுக்கு சென்று தான் சுமந்த குழந்தையை பெற்றெடுத்து உயிர் பெற்று சந்தோசமாக ஈன்றெடுத்த குழந்தையை உச்சி முகந்து ,கொசு ,ஈ கூட அண்டாமல் ,கண்விழித்து ,அமிர்தேன்னும் பாலூட்டி ,தாலாட்டி ,சீராட்டி தன கண் துஞ்சாமல் பாது காத்தாளே அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்றார் இருலோக ரட்ச்சகராம் பெருமானார் (ஸல் ).

          தலை சீவி ,அழகுபடுத்தி கல்விகற்க பள்ளிக்கு அனுப்பி வீடு திரும்பும் வரை காத்திருந்து ,வந்த மகனை உச்சி முகர்ந்து வாரி அனைத்து வரவேற்று முகம் கழுவி உணவு கொடுத்து ,தூங்க வைக்கும் நேரத்தில் சற்று அவன் உடல் சுடுகின்றது என்றுடன் ,பதறி அடித்து மருத்துவரை அணுகி ,சிகச்சை அளித்து ,தூங்காமல் கண்விழித்து தொட்டு தொட்டு பார்த்து தன் மகனை தூங்க வைத்தாளே அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதாக கூறினார்கள் கண்மணி நாயகம் (ஸல் ).

          சின்ன சிறு வயதில் நோன்பு நோற்று ,தொழுகையை நிறை வேற பள்ளிக்கு சென்று வரும் தன் அன்பு மகனை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்து ,யா அல்லா ,என் மகனை நேர் வழியில் வாழச்செய் என்று இருகரம் ஏந்தி துஆ செய்த அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதாக கூறினார்கள் இறைத்தூதர் நபி (ஸல்)

          பள்ளிப்படிப்பின் இறுதியாண்டில் அவன் மார்க் குறைந்தாலும் ,அதிகமானாலும் அவனை உற்ச்சாகப்படுத்தி அவனை மேற்படிப்பு படிக்கவைக்க துடியாய் துடிக்கும் மனதை கொண்ட அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்றார்கள் நானிலம் போற்றும் 
நாயகம் (ஸல்).

         கல்லூரியில் தன் மகன் படிக்கின்றான் என்று பெருமையோடு பிறரிடம் சொல்லி மகிழ்ந்து இன்புற்று ,அவன் தவறு செய்கின்றான் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் உள்ளம் பதறி ,தன் கணவனிடம் எங்க அவன் அப்படி பட்டவன் இல்லை ,அவன் அழைத்து வாருங்கள் நாம் சொன்னால் திருத்திக்கொள்வான் அன்று தன் மகன் மீது முழு நம்பிக்கை வைத்து சமாதானம் ஆகின்றாளே அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதாக கூறினார்கள் முகம்மது நபி (ஸல்).

          அழகான ,சாலிகான ,நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக தேடி தன் மகனுக்கு திருமணம் நடத்தி ,அழகு பார்த்து ; தன் மகனுக்கு பிறக்கும் குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்து ,தன் மகனின் குடும்ப வாழ்க்கை எந்த சிரமுமின்றி ,நேரான பாதையில் அமைய அல்லாவிடம் துஆ செய்து ,தன் மகனையும் ,மருமகளையும் ,பேரக்குழந்தைகளையும் கண்டு உள்ளும் ,புறமும் மகிழ்ந்த அந்த தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதாக கூறினார்கள்  முகம்மது நபி (ஸல்).

          ஆக ,சொர்க்கம் எங்கே உள்ளது? தாயின் காலடியில் உள்ளது .
 தாயை மதிப்பதன் மூலம் ,தாயிக்கு செய்யும் பணிவிடைகள் மூலம் ,தாயை நாம் நேசிப்பதன் மூலம் ,தாயை நாம் கண்கலங்காமல் பாது காப்பதன் மூலம் ,தாயிக்கு பசி இல்லாமல் உணவளிப்பதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம்.





                                                           

தென்பொதிகை குற்றால சாரல் துவங்கியது ,அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது

                                                               
                           
  தென்மேற்கு பருவமழை தீரவிமடைந்துவருவதையொட்டி ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்தது.கடந்த சிலநாட்களாக தென்மேற்கு பருவமழை கேரள வனப்பகுதிகளில் மட்டுமே பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மட்டுமே பெய்துவந்தது. தமிழக பகுதிகளில் கண்ணாமூச்சி காட்டிவந்த பருவமழை தற்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஐந்தருவி, குற்றாலம் போன்ற பகுதிகளில் பெய்துவருவதால் ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்து வருகிறது.குற்றாலம் மெயின்அருவியில் சற்று குறைவாக தண்ணீர் விழுந்த போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக காணப்பட்டது. ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி போன்ற அருவிகளில் தண்ணீரின்றி வெறிச்சோடி காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஐந்தருவியை நோக்கி படையெடுத்தவண்ணம் உள்ளனர். இப்பகுதியில் மழைமேகம் சூழ்ந்து பருவக்காற்று தீவிரமாக வீசிவருவதால் மேலும் மழை தீரவிமடையும் சூழல் நிலவிவருகிறது.