Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 29 ஜூன், 2012

ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கே உடை கட்டுப்பாடு உத்தரவு

ஆசிரியர்கள் அநாகரிகமான முறையில் உடை அணிந்து பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ப.மணி உத்தரவிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
 அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் சமுதாயத்தில் பல்வேறு நிலையில் உள்ள மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாகப் பயில்கின்றனர்.
 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு உருவாகும் நிலையைத் தவிர்க்கவும், அனைவரும் சமநிலையில் உள்ளவர்கள் என்ற மனநிலையை உருவாக்கவும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டு வருகிறது.மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான ஆசிரியப் பணியில் உள்ள ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரும்போது கண்ணியமான முறையில் ஆடைகளை அணிய வேண்டும். ஆடை மற்றும் அணிகலன்கள் நமது பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் உகந்த முறையில் இருத்தல் மிகவும் அவசியம்.
 கண்ணியக் குறைவாகவும், மாணவ, மாணவிகளிடையே ஏற்றத் தாழ்வையும், மனச் சலனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உடை அணிவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு சுற்றறிக்கைகள் இந்த இயக்ககத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
 இருந்தாலும், அண்மைக் காலங்களில் ஆங்காங்கே சில ஆசிரியர்களால் இந்த அறிவுரைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது இயக்குநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலை மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
 பள்ளி மாணவ, மாணவிகளிடம் பாதிப்பையும், பொதுமக்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நிலை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது தமது பதவிக்குரிய கண்ணியத்துக்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையிலும், மாணவ, மாணவிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையிலும் ஆடைகளை அணிந்து வர வேண்டும்.
 அநாகரிகமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
 பள்ளித் தலைமையாசிரியர்கள் இதைக் கண்காணிக்க வேண்டும்.
 இந்த அறிவுரைகளைப் பின்பற்றுவதில் தவறுகளோ, குறைபாடுகளோ சிறிதும் ஏற்படாவண்ணம் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கலாம் என்றால் கலகம் என்று சொன்னவர் கலைஞர் அல்ல பேரறிஞர் அண்ணா





எங்கள் அய்வரையும் ஒரு சேர ஒரு இடத்தில் கண்டால், கண்டவர்கள், கண்களில் கனல் கக்கக் கிளம்பி, கலாம் விளைவித்து, சர்க்காருக்குத் தொல்லைக் கொடுத்துவிடுவார்களா ?

இதை எழுதியவர்  கலைஞர் அல்ல.

1964ல் அரசியல் சட்ட மொழிப்பிரிவின் 17வது பிரிவை கொளுத்தும் போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தப் போது எழுதப்பட்ட புத்தகம் " கைதி எண் 6342 " பக்கம் எண் 17.

# எழுதியவர் பேரறிஞர் அண்ணா, அண்ணா,அண்ணா.
எனவே கலாம் - கலகம்.

அரசு உதவிபெறாத சிறுபான்மை கல்விநிறுவனங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு


இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் சில பிரிவுகள், அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விருத்தாசலம் முடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஞானவேல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இலவச  கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.

அதனடிப்படையில் நெய்வேலியில் உள்ள செயிண்ட் ஜோசப் குளுனி மெட்ரிக் பள்ளியில் எனது மகளுக்கு எல்.கே.ஜி.யில் இடம் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விட்டது. எனவே மகளுக்கு இடம் தர பள்ளிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கே. சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் 13(1)(சி) மற்றும் 18(3) ஆகிய பிரிவுகள் (25 சதவீத இடத்தை ஒதுக்கும் பிரிவுகள்), அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் உள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் அந்தப் பிரிவுகள் அமைந்துள்ளன என்றும், எனவே அந்த பிரிவுகள் அதுபோன்ற கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பார்த்தால், மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிடிவாரன்ட் திருமாவளவனுக்கு .....!

 கொலை முயற்சி, பஸ்ஸைத் தீ வைத்து எரித்த வழக்கில் விழுப்புரம் கோர்ட் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.  
÷கடந்த 1.6.2008-ல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் மோகன், வளவனூரைச் சேர்ந்த நடத்துனர் ஆறுமுகம் ஆகியோர் பணியில் இருந்தனர். ÷திருபுவனை பஸ் நிறுத்தத்தில் பஸ்ûஸ நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டபோது, சுமார் 20 பேர் கொண்ட கும்பல் பஸ்ஸில் ஏறியது. அருகே உள்ள எஸ்.ஆர்.பாளையம் கிராமம் வந்த போது பஸ்சில் வந்த 15 பேர், ஓட்டுநர் மோகனைத் தாக்கி பஸ்ûஸ நிறுத்துமாறு கூறினர்.
÷பின்னர், கடலூரில் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே தலைவர் திருமாவளவன் கூறியது போல் பஸ்ûஸ சேதப்படுத்துங்கள் என்று கூறியவாறு பஸ்ûஸ சேதப்படுத்த முயன்றனராம்.
÷இதைத் தடுக்க முயன்ற நடத்துனர் ஆறுமுகத்தை ஆயுதங்களால் வெட்டியதுடன் ஓட்டுநர் மோகனையும் கட்டையால் தாக்கினர். மேலும், பஸ் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதுடன் பஸ்சிற்கும் தீ வைத்து விட்டு, ஆறுமுகத்திடம் இருந்த வசூலான தொகை ரூ.5,500-யும் பறித்துச் சென்றனர்.
÷இது குறித்த புகாரின் பேரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வளவனூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.
 இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்றம் 2-ல் இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சுரேந்திரன், சித்தாமூர் சுப்பிரமணி, பாசறை பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி எல்.கலைவாணி உத்திரவிட்டார்.

அறியாமல் கொடுத்தாங்களோ ?

திருச்சியில் தமிழ் அறிஞர்களுக்கு 2011க்கான விருது வழங்கும் விழா மற்றும் சித்திரை கலை விழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி 2012 அன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், கலைஞரின் மு.க.அழகிரி என்ற பெயரில் மாத இதழ் நடத்தி வரும் அதன் ஆசிரியர் 'மானோஸ் எழுதிய ஜெருசலேம் என்ற நூல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி விருதை வழங்கினார். அப்போது அதிமுக திருச்சி எம்பி குமார், அதிமுக எம்எல்ஏக்கள் மனோகரன், பரஞ்சோதி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் ஆசிரியர் மானோஸ்க்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த விழா நடந்தபோதே ஆச்சரியமான விஷயம் இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று திருச்சி திமுகவினர் தெரிவித்தனர். ஆனால் இந்த விழா நடந்து இரு மாதங்களுக்குப் பிறகு, கலைஞரின் மு.க.அழகிரி மாத இதழின் ஆசிரியர் குழுவினர், விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்து திருச்சி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுக்கு அவரை (மானோஸ்) எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்றும், விழா ஏற்பாட்டு செய்யும்போது கூட கவனிக்கவில்லையா என்றும் அதிமுக மந்திரியும், எம்எல்ஏக்களும் விழா ஏற்பாடு செய்தவர்களிடம் தங்களின் கோபத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
விழா ஏற்பாடு செய்தவர்களை விடுங்க, விருது கொடுக்கும்போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு முன்னாடி நீங்க யோசிச்சீங்களா என்று மேலிடத்தில் கேட்பாங்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போறீங்க என்று மந்திரியிடமும், எம்எல்ஏக்களிடமும் சொல்லி திருச்சி அதிமுகவினரே கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ரயில்வே தட்கல் முன்பதிவு ரத்து செய்யப்படுமா ? இடைத்தரகர்கள் ஆக்கிரமிப்பு

ரெயிலில் கடைசி நேரத்தில் அவசரமாக செல்ல விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் தட்கல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். 
தட்கல் முன்பதிவு திட்டத்தில் இடைத்தரகர்களால் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இடைத்தரகர்கள் தட்கல் டிக்கெட்டுக்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு அதை அதிக விலைக்கு விற்கிறார்கள். 
இடைத்தரகர்கள் மட்டுமின்றி ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசாரும் தட்கல் முன்பதிவில் முறைகேடு செய்வதாக புகார்கள் கூறப்பட்டன.
சமீபத்தில் இந்த முறைகேட்டை ஒரு தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. தட்கல் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக அடிக்கடி புகார்கள் வருவதால் இந்த திட்டத்தை கைவிட்டு விடலாமா என்று ரெயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். 
இதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தட்கல் முன்பதிவில் எத்தகைய மாற்றங்கள் செய்யலாம் என்ற பரிந்துரைகளும் பெறப்பட்டு வருகிறது. 

தற்போது தட்கல் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்கள் ரெயில் பயணத்தின் போது தங்களது அடையாள அட்டை ஆவணங்களை காண்பிக்கிறார்கள். அதற்கு பதில் தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்யும் போதே அடையாள அட்டையை காட்டும் வகையில் மாற்றம் செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

டிக்கெட் கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் விற்பனையை நிறுத்தி விட்டு இ-டிக்கெட் முறையை விரிவுபடுத்தலாம் என்றும் ஒரு பரிந்துரை வந்துள்ளது. 

தட்கல் முன்பதிவு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். ஒரு நபருக்கு 2 தட்கல் டிக்கெட்டுக்களே கொடுக்கப்பட வேண்டும். தட்கல் முன்பதிவு செய்த பிறகு எக்காரணம் கொண்டும் பெயர்களை மாற்ற அனுமதிக்கக்கூடாது. தட்கல் டிக்கெட் ரத்து செய்யப்படுவதில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

இப்படி பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விரைவில் ரெயில்வே இலாகா முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.