ஈத் பெருநாளையொட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி :
பசி தாகம் இச்சை ஆகியவற்றை கட்டுப்படுத்தி,ஐப்புலன் களையும் தம் கட்டுக்குள் அடக்கிவைக்கும் ஆன்மிக பயிற்சி தான் நோன்பு .இந்த நோன்பை ரமலான் திங்கள் முழுவதிலும் அனுஷ்டித்து ,இறைவனை வணங்கியும்,இல்லாதார்க்கு வழங்கியும்,எல்லோருடனும் இணங்கியும் வாழும் முஸ்லிம்கள் ஈத் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.
நோன்பு மாதம் திருக் குர்ஆனை ஓதி உணர்ந்து புரிந்து நடக்க உதவுகிறது.நோன்பு மாதம் முஸ்லிம்களுக்கிடையில் சகோதர வாஞ்சையை அதிகமாக வளர்க்க உதவுகிறது .
நோன்பு மாதம் இல்லாத ஏழை எளியோர்களுக்கு ஜக்காத் என்னும் ஏழை வரியை வழங்கி,ஏழை பணக்காரர்களுக்கு இடையில் பாசப்பிணைப்பை உருவாக்க உதவுகிறது.
நோன்பு மாதத்தின் இறுதியில் ஈது பெருநாள் கொண்டாடும் நாட்களிலும் ஏழைகளுக்கு “சதக்கத்துல் ஃபித்ரா”என்னும் உணவுப்பொருட்கள் வழங்கும் நற்காரியமும் நடக்கிறது .
ஈதல்,இசைபட வாழ்தல் என்பார்கள்.அதன்படி ரமலான் பெருநாள்,ஈத்துவக்கும் இன்பப்பெருநாள் என்னும் சிறப்பை பெற்றதாக அமைகிறது.நாட்டிலும் நானில மெங்கணும்,சமூக நல்லிணக்கம் வளரவும்,சமூக நீதி மலரவும்,மானிட நேயம் ஓங்கவும் பாடுபடுவோம் .எல்லோருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் .
இவ்வாறு ஈத் பெருநாள் வாழ்த்து செய்தியில் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.