Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் ...........!

ஈகைத் திருநாள் ...........!

இந்தப் பெருநாள்
நம்மிடையே
சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்....

மனிதரை மனிதர் நேசிக்கும்
மத நல்லிணக்கத்தை
மலரச் செய்யட்டும்...

வாடிடும் ஏழையர்தம்
வாழ்வுநிலை உயர்வாக்கி
வசந்தத்தை வளர்க்கட்டும்....

வறுமையுற்றுக் கிடக்கின்ற
விவசாயப் பெருமக்கள்
வலி தீர்ந்து வாழட்டும்.....

தீவிரவாதம் தீக்கிரை ஆகட்டும்
பயங்கரவாதம் பயந்து ஓடட்டும்
ஒற்றுமை உணர்வும்
ஒருமைப்பாடும்
வானுயரத் தழைக்கட்டும்....

இலங்கை,பர்மா,பாலஸ்தீனம்
இன்னும் இன்னலுற்றுக் கிடக்கின்ற
அனைத்து மக்களின்
அல்லல் நீங்கட்டும்...அவலம் மாறட்டும்...

எங்கள் வீடும்,வீதியும்
ஊரும்,உலகமும்
எல்லோரும்,எந்நாளும்
ஏற்றமுடன் வாழட்டும்....

அன்னைத் தமிழகம்
அனைத்துத் துறைகளிலும்
உரமோடு உயரட்டும்....

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதத் திருநாடு
சீரோடும் சிறப்போடும்
சுபிட்சமாய் விளங்கட்டும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக