மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் 174 புதிய பாடத்திட்டங்கள் ஜுலை ஒன்றாம் தேதி முதல் துவங்கப்படும் என்று துணை வேந்தர் கல்யாணி மதிவாணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியின் வழியில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களல் தொலைதூரக் கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த மையங்களை மேம்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக பல்கலைக்கழக உயர்மட்டக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இது நல்ல முறையில் செயல்படும் மையங்கள் தொடர்ந்து செயல்படவும், மற்ற மையங்களை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாக பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்துக்கு தொலைநிலைக் கல்வி இயக்ககம் தான் முதுகெலும்பு. இந்த இயக்ககத்தை திறம்பட செயல்படுத்தி தரமான கல்வியின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

உலகத் தரத்தில் மதுரை பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டங்கள் அமையும் வகையில் நிபுணத்துவம் கொண்ட பேராசிரியரிகள் கொண்ட குழு மூலம் 174 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த பாடத்திட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆட்சிக்குழு, ஆட்சி மன்றக் குழு ஆகியவை ஒப்புதல் அளித்துள்ன. இதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் இந்த புதிய பாடத்திட்டங்கள் தொலைநிலைக் கல்வியில் துவங்கப்படும். இதன் மூலம் மதுரை பல்கலைக்கழகத்தில் தொலைநிலையில் கல்வியில் பயிலும் 1 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றார்.