Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 19 மார்ச், 2013

மத்திய அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு


காஞ்சிபுரத்திலுள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தகவல் தொழிற்நுட்ப கல்லூரியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: Assistant Professor

சம்பளம்: ரூ.15,600-39,100

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பி.எச்டி.,யில் (கணினி அறிவியல், எலட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், இன்ஜினியரிங் டிசைன்) ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, ஆராய்ச்சி படிப்பு சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு குளிர்சாதன வசதி பொருந்திய ரயில் கட்டணம் தரப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு 3 வருட ஆராய்ச்சி பணிக்கு ஐந்து லட்சம் உதவித்தொகை, மாதாந்திர தொலைபேசி கட்டணம் மற்றும் மாத சம்பளம் தரப்படும். மேலும் ஆராய்ச்சி தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள், கலந்து கொள்ளும் கருத்தரங்குகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iiitdm.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவையான சான்றுகளின் நகல்கள் ஆகியவற்றை தபாலில் அனுப்ப  ஏப்ரல் 10 கடைசி நாளாகும்.

கூடுதல் விவரங்களுக்கு www.iiitdm.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

வெற்றி மனப்பான்மை, சரியான திட்டமிடல் வேண்டும்: மாணவர்களுக்கு கவர்னர் ரோசய்யா அறிவுரை


வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையும், சரியான திட்டமிடலும் இருந்தால் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையலாம் என, ஆளுநர்
கே. ரோசய்யா கூறினார்.

தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பொன்விழா ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் ஆளுநர் கே. ரோசய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது: கிராமப்புற மக்களுக்கு உயர் கல்வி அளிப்பதற்காக இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டதற்காகப் பெருமைப்படுகிறேன். கிராமப்புறங்களும், அங்குள்ள குடிமக்களும் முன்னேற்றம் அடைந்தால்தான் நாடு தன்னிறைவு பெற முடியும். இதற்கு கல்வி ஒன்றே சிறந்த கருவியாகும்.

முதன்மையாக இரு, முதன்மையானவர்களோடு இரு என்பதே இந்தக் கல்லூரியில் நோக்க வாசகமாக உள்ளது. படிப்பு மட்டுமின்றி, போட்டி நிறைந்த இன்றைய சூழலை சந்திக்கும் திறனையும் மாணவர்களுக்கு வளர்க்க கல்வி நிலையங்கள் உதவ வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும், ஆசிரியரும் நாளுக்குநாள் தங்களது அறிவைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்யும் மனப்பான்மையை கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியை சமுதாய வளர்ச்சிக்கும், மக்கள் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்த வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மை, சாதிக்க வேண்டும் என்ற ஆசை,  சரியான திட்டமிடல் ஆகியவை மட்டுமே மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடினமாக உழைத்து ஒவ்வொரு செயலிலும் ஈடுபட வேண்டும். தன்னம்பிக்கையும், உறுதிப்பாடும் உள்ளவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றார் அவர்.

தமிழகத்தில் ஹைடெக் மாடல் பள்ளி திட்டம் முடக்கம்: மாணவர்கள் கல்வி பாதிப்பு


"அரசு அறிவித்த ஹைடெக் மாடல் பள்ளி திட்டம், எவ்வித முன்னேற்றமும் இன்றி, கிடப்பில் போடபட்டுள்ளதால், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி முடக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் யூனியன், ராமாபுரத்தில், "கஸ்தூரிபாய் காந்தி ஹைடெக் மாடல் பள்ளி துவங்கப்படும்" என, அரசு அறிவித்தது. ஆங்கில வழிக் கல்வியுடன், உண்டு உறைவிடப் பள்ளியாக அமைக்கப்பட இருப்பதால், ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும் என தெரிவிக்கபட்டது. அதை தொடர்ந்து, கடந்த, 2009ம் ஆண்டு, ராமாபுரம் பஞ்சாயத்துக்கு சொந்தமான தோப்புக்காடு புறம்போக்கு நிலத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவு நிலம், பள்ளி அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யபபட்டது.

ஆனால், இதுவரை, பள்ளி அமைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு சார்பில், கிராமப்புற ஏழை மாணவர்கள், நகர்புற மாணவர்களுக்கு இணையான கல்வி பெறவேண்டும் என்பதற்காக, உண்டு உறைவிடப்பள்ளியாக துவங்க அறிவிக்கப்பட்ட அரசு திட்டம், செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.

"நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஏழை மாணவர்களுக்கும், ஹைடெக் கல்வி பயில வரப்பிரசாதமாக அமைய இருந்த கஸ்தூரிபாய் காந்தி ஹைடெக் உண்டு உறைவிட மாடல் பள்ளி திட்டம் செயல்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எப்போதோ கொட்டிய மழைத்துளிகள்!


நானொரு கேள்வி எழுப்புகிறேன் - அதை

நாயகம் பெயரால் அனுப்புகிறேன் !

நீயொரு பதிலைச் சொல்லிவிடு - அந்த

நினைவில் என்னை மிதக்கவிடு!



அழுது கேட்டும் கிடைக்கவில்லை - உன்

ஆணை இன்னும் பிறக்கவில்லை!

விழுந்து சாக மனமுமில்லை - அது

வீணர் வழக்கம் எனக்குமில்லை!



மனிதப் பொறுமை கடந்துவிடும் - என்

மனதின் குமுறல் உடைந்துவிடும்!

இனியும் கருணை மறுப்பதென்றால் - என்

இறைவா என்னுயிர் துடித்துவிடும்!



கேட்டால் தருவது தருமமல்ல - நான்

கெஞ்சிக் கேட்பது புதுமையல்ல!

ஆட்டம் முடியும் எல்லைவரை - நீ

அருள மறுப்பது நியாயமல்ல !



பிடரி நரம்பின் பக்கத்தில் - உன்

பீடம் இருப்பதை நானறிவேன்!

இடரோ துயரோ எதுவரினும் - அது

எனக்குள் இருப்பினும் கவலையில்லை!



இறைவா உன்னைப் பணிகின்றேன் - இனி

எதுவும் வரட்டும் துணிகின்றேன்!

நிறைவோ , குறைவோ வெறுப்பில்லை - நீ

நினைத்ததே நடக்கும் மறுப்பில்லை!



புத்தகம் ஆயிரம் படித்துவிட்டேன் - என்

புத்தியால் அதனைப் பிடித்துவிட்டேன்!

செத்ததும் எதுவும் தொடர்வதில்லை - என்

சிந்தனை அங்கே படர்வதில்லை!



சொட்டுத் துளியில் படைத்துவிட்டாய் - உன்

சுவனம் வரைக்கும் அழைத்துவிட்டாய்!

கெட்டுத் தொலைவது விதியுமில்லை - உன்

கிருபைக் காக்கும் தடையுமில்லை!



முஹம்ம தென்னும் ஒளிப்பிழம்பு - அதன்

முன்னே கிடக்கும் சிறுதுரும்பு!

எமக்குக் குறைவு வருவதில்லை - இந்த

ஈமான் கணக்கு முடிவதில்லை!

----கவிஞர் A . ஹிலால் முஸ்தபா