விழுப்புரம் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகளை, கம்ப்யூட்டரில் பதியும் முறையை எஸ்.பி., மனோகரன் நேற்று துவக்கி வைத்தார்.குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்க எளிதாக, வலை பின்னல் முறை திட்டத்தின் கீழ் வழக்குகளை கம்ப்யூட்டரில் பதியும் நடைமுறை நேற்று முதல் மாவட்டத்தில் துவங்கியது. இதற்கான நிகழ்ச்சி , நேற்று காலை விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.
எஸ்.பி., மனோகரன் ரிப்பன் வெட்டி, கம்ப்யூட்டர்கள் மூலம் வழக்குப் பதியும் பணியை துவக்கி வைத்து கூறியதாவது:இந்தியா முழுவதும் பதியப்படும் வழக்குகளை உடனுக்குடன், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் கண்காணிக்க உதவிடும் வகையில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார்.
தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நடக்கும் சம்பவங்கள், அதன் தொடர்புடைய குற்றவாளிகள் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் எளிதில் அடையாளம் காணப்படுவர் இதனால் குற்றவாளிகள் எளிதில் பிடிபடுவார்கள். வழக்கு பதிவுகள் ஒளிவு, மறைவு இல்லாமல் நடப்பது பொது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.இத்திட்டம் முன்னோடி நிலை மற்றும் முதல்நிலை என்ற இரு கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப் படுகின்றன. முன்னோடி நிலை செயல்பாட்டில் திருவள்ளூர், அரியலூர், சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களும், மற்ற 35 போலீஸ் மாவட்டங்கள் முதல்நிலை செயல் பாட்டிலும் உள்ளன. இத்திட்டத்தின் மூலம் முதல் தகவலறிக்கை மற்றும் வழக்கு விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு, மாநில தகவல் சேகரிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன.56 ஸ்டேஷன்கள்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் ஸ்டேஷன்களிலும் இச்சேவை நேற்று முதல் இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக பதிந்துள்ள வழக்குகள் அனைத்தும் கம்ப்யூட்டர்களில் மீண்டும் பதிந்து, பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்காக ஒரு போலீஸ் ஸ்டேஷனில், 3 போலீசார் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் பொது மக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனுக்குடன், கம்ப்யூட்டர் மூலமே, வழக்குப் பதிவிற்கான ஒப்புதல் நகல் வழங்கப்படும். இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது. இவ்வாறு எஸ்.பி., மனோகரன் கூறினார்.டி.எஸ்.பி., சங்கர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், ஜோதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.