Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 13 மே, 2013

+2, டிப்ளமோ தகுதிக்கு விமான நிலையங்களில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணி


இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென் பிராந்தியத்தில் உள்ள விமான நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆந்திர, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

பணி: Junior Assistant (Fire Service) NE-4

மொத்த காலியிடங்கள்: 245

சம்பளம்: ரூ.12,500 - 28,500 மற்றும் இதர சலுகைகள்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical, Automobile, Fire ஆகிய ஏதாவதொரு பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் அளவுகள் அளவிடுதல், ஒட்டுநர் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Airport Authority of India என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்கள் அறிய www.airportsindia.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்ற சேர கடைசி நாள்: 30.05.2013

மும்பையில் 29, 30–ந்தேதிகளில் கல்வித்துறையில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் :துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார்


கல்வித் துறையில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் குறித்த பொதுக்கூட்டம் மும்பையில் வருகிற 29, 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்க உள்ளது. இதில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்கிறார்.

2 நாள் கருத்தரங்கம் :
‘மவுலானா ஆசாத் விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு சார்பில் கல்வித்துறையில் முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த 2 நாட்கள் கருத்தரங்கம் மும்பை கலினா பகுதியில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் வருகிற 29 மற்றும் 30–ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த கருத்தரங்கை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தொடங்கி வைக்கிறார்.

மராட்டிய மாநில முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான், கவர்னர் கே.சங்கரநாராயணன் தலைமை தாங்குகின்றனர். சிறுபான்மையினோர் நலத்துறை மந்திரி ரஹ்மான் கான், துணை முதல்–மந்திரி அஜித் பவார், மாநில மந்திரிகள் நசீம் கான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சந்திக்கும் சவால்கள்
இதுகுறித்து ‘மவுலானா ஆசாத் விச்சார் மஞ்ச்’ அமைப்பின் தலைவர் உசைன் தல்வாய் அளித்த பேட்டியில், கூறியதாவது:– முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் கல்வி பெறுவதற்கு பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர். கல்வியை பெறுவதற்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து 2 நாள் பொதுக்கூட்டத்தை கலினாவில் நடத்துவதற்கு உள்ளோம்.

மராட்டியம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். சிறுபான்மையினோர் நலத்துறை மந்திரி ரஹ்மான் கான், சச்சார் கமிட்டியின் செயலாளர் அபு சலே ஷெரிப் ஆகியோர் கல்வித்துறை சவால்கள் குறித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கெமிக்கல் இன்ஜினியரிங் (CHEMICAL ENGINEERING) படிப்பு


வேதியியல், பொறியியலுடன் கணித அறிவும் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு அவசியம். வேதிப்பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் பயனுள்ள புதிய பொருட்களை உருவாக்க கற்றுத் தருகிறது இத்துறை. இதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, பயன்படுத்தவும் கற்றுத் தருகின்றனர்.

பெரிய தொழிற்சாலைகள், உற்பத்தி மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை கெமிக்கல் இன்ஜினியர்களுக்கு வழங்குகின்றனர். ஆய்வகத்தில் உருவாக்கப்படும் புதிய உத்திகளுக்கு, இவர்கள் செயல்வடிவம் கொடுக்கின்றனர். டிடர்ஜென்ட், எரிபொருள், பிளாஸ்டிக், மருந்துப்பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் இவர்களது பங்களிப்பு அதிகம்.

செலவை குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பது, தரக்கட்டுப்பாடு போன்றவற்றையும் கெமிக்கல் இன்ஜினியர்கள் கவனிக்கிறார்கள். வேதியியல் துறையில் உள்ள நிறுவனங்களில் கெமிக்கல் இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். மெட்டிடீரியல் சயின்ஸ், அணுசக்தி, உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, நிர்வாகம், விற்பனை துறைகளை இவர்களால் கையாள முடியும்.

கல்வி நிறுவனங்கள்

* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
* ஐ.ஐ.டி., சென்னை
* ஐ.ஐ.டி.,  புதுடில்லி
* ஐ.ஐ.டி.,  காரக்பூர்
* என்.ஐ.டி.,  திருச்சி
* கோயம்புத்தூர்  இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை
* எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், சென்னை.

வேலை வாய்ப்புகள்
இத்துறையில் படிப்பை முடித்தவர்களுக்கு, ரசாயன தயாரிப்பு தொடர்பான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளது. இது தவிர, அணுமின் நிலையம், உணவு உற்பத்தி தொழிற்சாலைகள், உரம் உற்பத்தி தொழிற்சாலைகள், மருந்து, பெட்ரோலியம் தயாரிப்பு நிறுவனங்கள், பயோடெக்னாலஜி தொடர்பான நிறுவனங்கள் போன்ற பணியில் வேலைவாய்ப்புகள் உள்ளன.