வேதியியல், பொறியியலுடன் கணித அறிவும் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு அவசியம். வேதிப்பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் பயனுள்ள புதிய பொருட்களை உருவாக்க கற்றுத் தருகிறது இத்துறை. இதற்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, பயன்படுத்தவும் கற்றுத் தருகின்றனர்.
பெரிய தொழிற்சாலைகள், உற்பத்தி மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை கெமிக்கல் இன்ஜினியர்களுக்கு வழங்குகின்றனர். ஆய்வகத்தில் உருவாக்கப்படும் புதிய உத்திகளுக்கு, இவர்கள் செயல்வடிவம் கொடுக்கின்றனர். டிடர்ஜென்ட், எரிபொருள், பிளாஸ்டிக், மருந்துப்பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் இவர்களது பங்களிப்பு அதிகம்.
செலவை குறைத்து, உற்பத்தியை அதிகரிப்பது, தரக்கட்டுப்பாடு போன்றவற்றையும் கெமிக்கல் இன்ஜினியர்கள் கவனிக்கிறார்கள். வேதியியல் துறையில் உள்ள நிறுவனங்களில் கெமிக்கல் இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர். மெட்டிடீரியல் சயின்ஸ், அணுசக்தி, உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, நிர்வாகம், விற்பனை துறைகளை இவர்களால் கையாள முடியும்.
கல்வி நிறுவனங்கள்
* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
* ஐ.ஐ.டி., சென்னை
* ஐ.ஐ.டி., புதுடில்லி
* ஐ.ஐ.டி., காரக்பூர்
* என்.ஐ.டி., திருச்சி
* கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை
* எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், சென்னை.
வேலை வாய்ப்புகள்
இத்துறையில் படிப்பை முடித்தவர்களுக்கு, ரசாயன தயாரிப்பு தொடர்பான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளது. இது தவிர, அணுமின் நிலையம், உணவு உற்பத்தி தொழிற்சாலைகள், உரம் உற்பத்தி தொழிற்சாலைகள், மருந்து, பெட்ரோலியம் தயாரிப்பு நிறுவனங்கள், பயோடெக்னாலஜி தொடர்பான நிறுவனங்கள் போன்ற பணியில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக