கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 700 விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இது குறித்த கேள்விக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத்துறையுடன் இணைந்து செயல்படும் டிஆர்டிஓ என்றழைக்கப்டும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை என்ற அமைப்பில் கடந்த 2007முதல் 2011-ம் ஆண்டு வரையில் சுமார் 637 விஞ்ஞானிகளும் , இந்தாண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி வரையில் சுமார் 50 வி்ஞ்ஞானிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மற்ற நிறுவனங்களில் கிடைக்கும் அதிக வருவாய் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்து சென்றதாக அவர் தெரிவித்தார் .
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் டிஆர்டி ஓ அமைப்பானது மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்த போதிலும் பாதுகாப்புத்துறை யுடன் இவ்வமைப்பு இணைந்து செயல்படுவதால் மற்ற நிறுவனங்களை போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என கூறினார். மேலும் அமைச்சர் கூறுகையில் விஞஞானிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் பணிபுரியும் இடத்தினருகே வசிப்பதற்கு ஏற்ற வீடு, பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு போன்றைவை வழங்கப்படுகிறது. என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக