அதிமுக அரசு திமுக காரர்களை பழி வாங்கி வருகிறது ,பொய் வழக்கு போடுகிறது என்றும் ,மக்களுக்கு நல்லாட்சி தரவில்லை என்றும் தினசரி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார் .சமீபத்தில் அதிமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டமும் திமுக நடத்தியது .திமுக வை குறை கூறிய மார்க்சிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு அதிமுக வினரின் குறை கண்ணுக்குத் தெரியவில்லையா? என்று கேள்வி கேட்டுக்கூட கலைஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார் .
இந்த சூழலில் ,திமுக வின் எதிரியாக திமுக வினரால் கருதப்படும் அதிமுக அரசு திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர் ஜின்னாவை தமிழக அரசு வக்ப் வாரிய உறுப்பினராக நியமித்துள்ளது .அதிமுக வை ,அதன் ஆட்சியை சரமாரியாக எதிர்த்து வரும் திமுக தலைவர் கலைஞர் ஜின்னாவை அந்தபதவியை ஏற்க மறுக்கச்சொல்வாரா ? என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் .
மில்லியன் டாலர் கேள்வி என்பார்க்ளே இது தானே!!!! வசூல் வேட்டைக்காக டெசோ மாநாடு நடத்த இருக்கும் அந்த மாபெரும் கொள்ளைக் கூட்ட தலைவருக்கு YOU TUBE-ல் KATTANKUDI MASSACRE என்ற வளைத் தளத்தை காண வழி செய்யுங்களேன்.
பதிலளிநீக்குமேலும் அத்துடன் JAFFNA MUSLIM என்ற வளைத் தளத்தையும் காட்டுங்களேன்