ஊட்டியில், மலைக் காய்கறிகளின் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது; ஒரு பச்சை மிளகாய், ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஊட்டியில் உருளைக்
கிழங்கு, பீட்ரூட், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், ஊட்டி அவரை, பச்சை மிளகாய்
உட்பட காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தும்மனட்டி, கூக்கல் தொரை,
முத்தொரை பாலாடா, ஓல்டு ஊட்டி, பொரையரட்டி, நஞ்சநாடு, மணியட்டி உள்ளிட்ட
கிராமங்களில், காய்கறி விவசாயம் நடக்கிறது.
உள்ளூர் மக்களின் தேவைக்கு மட்டுமின்றி,காய்கறிகள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப் பப்படுகின்றன.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை, இந்தாண்டு போதுமானதாக இல்லை; மேலும், கடந்த ஏப்ரல் மாதம், சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால், மகசூல் குறைந்து, கடந்தாண்டை விட, தற்போது 20 முதல் 40 சதவீதம் வரை, மலைக் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
ஊட்டியைச் சேர்ந்த மொத்த
காய்கறி வியாபாரி ரியாஸ் கூறுகையில், ""ஊட்டியில், இம்முறை போதிய மழை
பெய்யவில்லை; அதிகளவு நீர் தேவைப்படும் பச்சை மிளகாய், அவரை போன்றவற்றின்
மகசூல், தண்ணீர் இல்லாததால் குறைந்துவிட்டது. உள்ளூர் மக்களின் தேவைக்கு மட்டுமின்றி,காய்கறிகள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப் பப்படுகின்றன.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை, இந்தாண்டு போதுமானதாக இல்லை; மேலும், கடந்த ஏப்ரல் மாதம், சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால், மகசூல் குறைந்து, கடந்தாண்டை விட, தற்போது 20 முதல் 40 சதவீதம் வரை, மலைக் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
பச்சை மிளகாய் விலை, இதுவரை இல்லாதவாறு, கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது; ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய் என்ற அளவில் விற்க வேண்டியுள்ளது. என்றார்.
"நூறாண்டு சாதனை ஓராண்டில் "என்று மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்யும் ஜெயா அரசு ,மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா ? என்பது தான் தமிழக மக்களின் கேள்வியாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக