Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 19 ஜூலை, 2012

முஸ்லிம்களின் தனித்தன்மைகளை பாதுகாக்கும் ஆயுதம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை, விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அல்ஹாஜ் எஸ்.எம். அமீர் அப்பாஸ் ஏற்பாட்டில் பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான நொய் அரிசி வழங்கும் விழா விழுப்புரம் ஆனந்தா கான்பரன்ஸ் ஹாலில் கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது.

மௌலவி சாகுல் ஹமீது மஹ்லரி இறைமறை ஓதினார். எஸ்.எம். அப்துல் ஹக்கீம் வரவேற்றுப் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் காயல் மகபூப் வாழ்த்துரை வழங்கினார்.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை மேலாளர் இப்ராஹீம் மக்கீ, விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. இக்பால் பாஷா, மேற்கு மாவட்டத் தலைவர் கள்ளக் குறிச்சி சித்தீக் அஹமது, செயலாளர் சங்கராபுரம் அஹமது கபீர், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கே.எம். ஷேக் தாவூது, கோட்ட குப்பம் வி.ஆர். இப்ராஹீம், விழுப்புரம் டி. சாகுல் ஹமீது, டி. சுல்தான் மைதீன், சங்கராபுரம் லியாகத் அலி, கோட்டகுப்பம் அமீர் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் பேராசிரியர் பேசியதாவது-

மஹல்லாக்கள் ஒருங்கிணைக்கும் பணி


தமிழகத்தில் 1973-ம் ஆண்டு முதல் மஹல்லாக்களை ஒருங் கிணைக்கும் பணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈடுபாடு கொண்டு செயல்படு கிறது. அதனுடைய ஒருங்கி ணைப்பா ளராக நான் பணியாற்றுகிறேன்.

விழுப்புரம் மாவட்டத்தில் 436 மஸ்ஜித்கள் இயங்குகின் றன. அவைகளை ஒருங்கி ணைத்து ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் பேரவையை மிகச் சிறப்பாக நடத்துகிறார்கள். இதனுடைய தலைவராக இருக்கின்ற அல்ஹாஜ் எஸ்.எம். அமீர் அப்பாஸ் அவர்கள்தான் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராகவும் பணியாற்று கிறார்.

அதேபோன்று, ராமநாதபுர மாவட்டத்தில் 258 பள்ளிவாசல் களை ஒருங்கிணைத்து முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்தை பொறுப்பு எடுத்து நடத்தக் கூடியவர் நம்முடைய மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான், அதேபோன்று கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஜமாஅத்கள் ஒருங்கிணைக் கப்பட்டுள்ளன. 

சென்னை மாவட்டத்தில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவை களை ஒருங்கிணைக்கக்கூடிய பணியில் முஸ்லிம் லீகின் மூத்த தலைவர் ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார் பாடுபட்டார். இன்று புரசை சிக்கந்தரைப் போன்றவர் கள் அந்தப்பணியில் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.

ஆக, ஜமாஅத்களை ஒருங்கிணைக்கக் கூடிய பணியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது தலையாய பணியாகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது.

தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டை முன்மாதிரி மஹல்லாக்களை தேர்ந்தெ டுத்து விருதளித்து கவுரவித் தோம். ஒவ்வொரு மஹல்லாவும் அனைத்து விஷயங்களிலு தன்னிறைவு பெற்ற மஹல்லாக் களாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த மஹல்லாக் களின் மாண்பும், கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வலி யுறுத்தினோம்.

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து செயல்பட்டு வரக்கூடிய முஸ்லிம் சமூகத் தின் அடிப்படை அமைப்புக் களாகும். அதைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லி மின் கடமை.

ஷரீஅத்திற்கு எதிராக யார் சொன்னாலும் கேட்க மாட்டோம்


இந்த நாட்டில் நாம் ஜனா ஸாக்களை அடக்கம் செய்கி றோம். ஏன் அதை அடக்கம் செய்யவேண்டும்? எரித்தால் என்ன? 

இவர்களுக்கென்று ஒரு தனிச்சட்டம் எதற்கு? ஒரு பொதுவான சட்டம் ஒன்று கொண்டு வரவேண்டும் என்ற முயற்சிகள் நடந்தது. அந்த முயற்சிகளை தொடர்ந்து போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் செய்யப்பட்டது. மக்கள் மன்றங் களிலும், நாடாளுமன்றம், சட்ட மன்றங்களிலும் இது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டு அம்முயற்சிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் முறிய டிக்கப்பட்டது. இந்த அரசியல் அமைப்பில் எங்க ளுக்கு உரிமை தரப்பட்டுள்ளது. அதை எவரும் பறிக்க விடமாட்டோம். அப்படி எவரேனும் பரிக்க முற்படுவார் களேயானால் ஜனநாயக ரீதி யாக அதைத் தடுப்போம். போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் செய்வோம். சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்புவோம். ஷரீஅத் சட்டத் திற்கு எதிராக யார் சொன்னா லும் கேட்கமாட்டோம். 

ஒரு பெண்ணை தலாக் சொல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் உயர்ந்த நீதிபதி ஒரு தீர்ப்பு வழங்கினார். அவர் உச்சநீதிமன்றத்தில் உயர்ந்த நீதிபதி. உயர்வான இடத்தில் உள்ளார் என்பது எங்களுக்கு தெரியும். எங்களது மார்க்கப்படி ஒரு பெண்ணை தலாக் சொல் வது எப்படி என்று எங்களுக்கு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்திற்கு விரோதமாக யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கான அதி காரம் சங்கைக்குரிய உலம hக்க ளுக்கு மட்டும்தான். அதுதான் முஸ்லிம் லீக் சொல்லிக் கொடுத்த பாடம். 

உலமாக்களை கண்ணி யப்படுத்துங்கள். இஸ்லாமிய போதனைகள் நமக்கு சொல்லி தந்தது. ஒரு உதாரணம்-ஒருவர் ஒரு பெண்ணை தலாக் செய்யப் போகிறார் என்று தெரிந்து மற்றொரு நபர் இவரிடம், �ஏன் அந்த பெண்ணை விவாகரத்து செய்யப்போகிறீர்� என்று கேட்ட போது, �அந்தப் பெண்ணை நான் இன்னும் விவாகரத்து செய்ய வில்லை. இந்த நிலையில் உங்களிடத்தில் அந்த பெண் ணைப் பற்றி அவர்கள் குறை களைப் பற்றி எவ்வாறு சொல் வது? உங்களிடத்தில் சொல்ல முடியாது� என்று கூறிவிட்டார். அந்த நபர் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்தபின் மேற்கண்ட நபர் மீண்டும் சந்தித்து, இப்போது விவாக ரத்து செய்துவிட்டீர்கள் அல்லவா? என்ன பிரச்சினை என்று கேட்டபோது, இப்போது அந்த பெண் எனக்கு மனைவியே கிடையாது,எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் மனைவி இல்லாத நிலையில் அவரது குறையை பற்றி அவதூறு சொல்ல முடியாது� இதுதான் இஸ்லாமிய மார்க்கம் சொல்லிக் கொடுத்த பாடம். 

ஒன்றை தெளிவாக தெரி யப்படுத்துகிறோம். ஜனநாய கத்திலே உரிமையை, நமக் குள்ள தனித்தன்மையை பாதுகாப்பதை தடுத்து நிறுத்து வதற்கான முயற்சிகள் செய் தால் அதைத் தடுத்து நிறுத்து வதற்கான ஆயுதம்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.



 பர்தா-கத்னாவிற்கு தடை


ஜெர்மனில் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள எந்த ஒரு முஸ்லிமும் சுன்னத் கல்யாணம் செய்யக்கூடாது என்று சொல்லி யிருந்தார்கள். மார்க்க கல்யா ணம் என்று நாம் சொல்கிறோம். இதை யூதர்களும் செய்து வருகிறார்கள். உலகத்தில் உள்ள மருத்து வனையில் பிறந்த 7 நாட்களில் சுன்னத் கல்யாணம் செய்து வருகிறார்கள். ஒரு சமயம் சுர்சத்சிங் ஒரு கட்டுரை எழுதினார். இந்தியாவில் உள்ள எல்லா ஆண்களும் சுன்னத் கல்யாணம் செய்வது நல்லது என்று எழுதினார். காரணம் பாலியல் வியாதி, சுகாதார கேடு ஆகிய வற்றை தடுப்பது என்று எழுதினார். இப்போது ஜெர்மனில் சுன்னத் கல்யாணம் செய்யக் கூடாது என்ற சட்டம் பாராளு மன்றத்தில் இயற்றியுள்ளார்கள். இதே போன்று பிரான்ஸ் சட்டமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணியக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். 

லண்டன் பாராளுமன்றத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப் பிற்கு தடை விதிக்கின்ற சட்டங்களை கொண்டு வரு கின்ற அதிகாரம் ஜனநாயகத் தில் இருக்கின்றது. அதே ஜனநாயகம்தான் நம் நாட்டிலும் இருக்கின்றது. நம் நாட்டில் ஆடு மாடு வெட்டக் கூடாது என்ற சட்டத்தை போட்டு, அந்த வியா பாரிகளைக் கொடுமைப்படுத்தி னார்கள். மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தார்கள். ஒரு ஜனநாயகத்தில் செய்யக் கூடும்-செய்யவும் முடியும். இதனை தடுத்து நிறுத்துவது பலாத்காரம் மூலம், வன்முறை மூலம் தடுத்து நிறுத்த முடியாது. ஜனநாயக ரீதியாக கொண்டு வந்த சட்டத்தை ஜனநாயக ரீதியாகத்தான் முறியடிக்க வேண்டும் 

எல்லா சமுதாய மக்க ளையும் அரவணைத்துக் கொண்டு இருக்கின்ற அணுகு முறை தான் அரசியலில் ஆகுமான அணுகு முறை. அதைத் தான் முஸ்லிம் லீக் சொல்கிறது. அதுமட்டு மில்லை, நமது தனித்தன்மைகள் பாதுகாக்கப் பட வேண்டும். இது நமது கடமையாகும். பாங்கு சொல்வது, மதரஸா நடத்துவது இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை பாதுகாப்பது நமது தனித் தன்மை, நமது மார்க்கப்படி நடந்துகொள்ளும் உரிமை நமக்கு இருக்கிறது. நமக்கு இருந்தாக வேண்டும். அதனை தடுக்க முடியாது அது இந்திய அரசியல் சட்டத்தில் தரப்பட் டுள்ளது. இது இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற செய்த வர்கள் யார் என்று சொன்னால், முஸ்லிம் லீகினுடைய தலைவர் கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நமது தன்மைக் கான சட்டப்பாதுகாப்பை வரை யறை செய்து இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெறச்செய்து பாதுகாப்பை பெறச்செய்து பாதுகாப்பை பெற்றுத் தந்துள்ள னர். 

இந்த உரிமைகளை ஜன நாயகத்தில் என்றும் பிரித்து விடாமல் இருக்க, ஜனநாயகத் தில் ஒரு இயக்கம் தேவை. அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ளவர்களும் சரி, வெளியில் உள்ளவர்களும் சரி, சமுதாயத்தில் குழப்பம் செய்கின்றார்கள். இதனால் பயன் ஏதும் இல்லை. ஷரீஅத் சட்டத்திற்கு மாறாக யார் முயற்சி செய்தாலும் அதனை அரசியல்ரீதியாக ஜனநாயக ரீதியாக தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு இயக்கம் இந்திய நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான்.

இவ்வாறு  பேராசிரியர் குறிப்பிட்டார்.


நன்றி :மணிச்சுடர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக