இந்திய ஊடகத்துறையின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதமாக இருக்கிறது. 24 மணி நேர செய்தி சேனல்கள், நாளிதழ்கள் மற்றும் எப்.எம்., எனப்படும் பண்பலை ரேடியோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. ரேடியோ ஜாக்கியாக விருப்பமுள்ளவர்களுக்கும், டிவியில் செய்திவாசிப்பாளராக விருப்பமுள்ளவர்களுக்காக டெல்லி பல்கலைக்கழகமும், ஆர்.கே., பிலிம்ஸ் அண்ட் மீடியா அகாடமி நிறுவனமும் இணைந்து, மூன்று மாத படிப்பை வழங்குகின்றன.
பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்திருந்தால் போதுமானது. கல்விக்கட்டணமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். செயல்முறை விளக்கமாக பயிற்சி அளிக்கப்படுவதால், எளிதில் நிபுணத்துவம் பெறுகின்றனர்.
தொடர்புடைய துறையில் பிரபலமானவர்கள், நிபுணத்துவம் மிக்கவர்களை அழைத்து வந்து நேரடிப்பயிற்சியும், கலந்துரையாடலும் நடக்கிறது. மேலும் விவரங்களைwww.rkfma.com என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக