திருச்சி ஐ.ஐ.எம்., சென்னை மையத்தில், பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பிற்கான, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சி ஐ.ஐ.எம்., இயக்குனர் பிரபுல்லா அக்னி ஹோத்ரி கூறியதாவது: ஐ.ஐ.எம்., திருச்சியின் சென்னை மையம், திருச்சி வளாகத்துடன், "வீடியோ கான்பரசிங்” மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம், அங்கிருந்தபடியே பேராசிரியர்கள், தங்கள் தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். ஆசிரியர்கள், பாட வகுப்புகளும் பதிவு செய்யப்படுகிறது.
பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு கடந்தாண்டு, சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் ஆண்டாக மாணவர் சேர்க்கையை துவக்கினோம். இளங்கலையில், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களும், மூன்றாண்டு பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். வாரந்தோறும், நான்கு நாள்கள் மாலையில், வகுப்புகள் நடக்கும். மொத்த இடங்கள், 50. மூன்றாண்டு கல்வி கட்டணம், 10 லட்சம் ரூபாய்.
விண்ணப்ப படிவத்தை, www.iimtrichy.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்து தேர்வு, நேர்காணலுக்கு பின், சேர்க்கை நடைபெறும். கேட்-2012, ஜிமேட் தேர்வு எழுதியவர்களுக்கு, எழுத்து தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பங்கள், மே, 12க்குள் வந்து சேர வேண்டும்.இவ்வாறு பிரபுல்லா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக