Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

தமிழக அரசு போலீஸ் துன்புறுத்தலில் வாலிபர் மரணம் ; அதிக இழப்பீடு 4.40 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு



போலீஸ் காவலில் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு, அதிக இழப்பீட்டுத் தொகை, 4.40 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த, செல்வி என்பவர், தாக்கல் செய்த மனு:

என் கணவர், அண்ணாமலை. விருத்தாச்சலம் பஸ் நிலையத்தில், பொருட்கள் வாங்கும் போது, அவரை, போலீசார் தாக்கினர். போலீஸ் காவலில் வைத்தனர். அன்று, எங்கள் கிராமத்துக்கு வந்து, பழனிவேல் என்பவரை, விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். மறுநாள், என் கணவர் இறந்து விட்டார். அவரை, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசார் சேர்ந்து தாக்கியதாக, பழனிவேல் தெரிவித்தார். 2004ம் ஆண்டு, நவம்பர் மாதம், சம்பவம் நடந்தது. எனக்கு, தகுந்த இழப்பீடு வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சத்தியசந்திரன் ஆஜரானார். நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவு: மனித உரிமை மீறல் நடந்துள்ளது எனக்கூறி, 1.50 லட்சம் ரூபாய், இழப்பீடு வழங்க, மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் காவலில் இருக்கும் போது, அவர்களின் துன்புறுத்தலினால், அண்ணாதுரை இறந்துள்ளார். அவருக்கு, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. மனித உரிமை கமிஷன் பிறப்பித்த, 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, சொற்பமானது தான். நியாயமான இழப்பீடு, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அண்ணாதுரை இறக்கும் போது, அவரது வயது, 40. மாத சம்பளம், 4,500 ரூபாய் என, கணக்கில் கொண்டு, இழப்பீடு தொகை கணக்கிடப்பட வேண்டும்.

எனவே, 5.90 லட்சம் ரூபாய், இழப்பீடு பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. ஏற்கனவே, 1.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், மீதித் தொகை, 4.40 லட்சம் ரூபாயை, இரண்டு மாதங்களில், உள்துறைச் செயலர் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக