Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 11 ஏப்ரல், 2013

ஐஐஐடிஎம்(IIITM).,யில் முதுகலை படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி அன்ட் மெனஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில், முதுகலை பட்டப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்: எம்.எஸ்சி., (ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, ஜியோ-இன்பர்மேடிக்ஸ்,) ஆகிய படிப்புகளும்,

எம்.பில்.,(ஈக்காலஜிக்கல் இன்பர்மேடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்)ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி., படிப்பிற்கு, பி.இ, பி.டெக்., படிப்பில் தகுந்த துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.பில்., படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.டெக்., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிய கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

மே 22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 31 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். நுழைவுத்தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.iiitmk.ac.in என்றஇணையதளத்தை அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக