தென்காசி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியையும் கடந்து வெயில் அடித்து வருகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் அத்யாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தென்காசியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. மழை பெய்ததால் நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வரை மழை நீடித்ததால் இதமான சூழல் நிலவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக