Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 11 ஏப்ரல், 2013

இருளில் மூழ்கியது சென்னை "சாட்டிலைட் சிட்டி"

முன்மாதிரி நகரான சி.எம்.டி.ஏ.,வின் மணலி புதுநகர் மனை பிரிவு குடியிருப்பு பகுதிகளில் மின்விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால், இங்கு மாலை 6:00 மணிக்குமேல், பகுதிவாசிகள் வெளியே நடமாடவே தயங்குகின்றனர்

.மணலி புதுநகரில் "சாட்டிலைட் சிட்டி' என்ற மனை பிரிவை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) உருவாக்கியது. இங்கு 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டிலிருந்த மணலி புதுநகர் "சாட்டிலைட் சிட்டி', சென்னை மாநகராட்சியின் 15வது வார்டாக சேர்க்கப்பட்டது. இதனால், அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படும் என, மணலி புதுநகர் மனை பிரிவு மக்கள் எதிர்பார்த்தனர்.
இதையடுத்து, "சாட்டிலைட் சிட்டியை' மாநகராட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக, சி.எம்.டி.ஏ.,வுக்கும், மாநகராட்சிக்கும் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.சமீபத்தில், "சாட்டிலைட் சிட்டி' மாநகராட்சியின் கீழ் வரும் என, மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். இந்த நிலையில், இனியாவது, "சாட்டிலைட் சிட்டி'யின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், நகர் உருவானபோது அமைக்கப்பட்ட, தார் சாலைகளுக்கு பின் மீண்டும் சாலைகள் அமைக்கப்படவில்லை. தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், அனைத்தும் பழுதாகி, ஒரு மின்விளக்கு கூட எரியவில்லை.இதனால் மாலை 6:00 மணிக்கு கூட, வெளியில் வருவதற்கு பகுதிவாசிகள் அஞ்சுகின்றனர். விரைவில், மின் விளக்குகளையாவது சரி செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக