Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 19 மே, 2013

கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு


தொழிற்படிப்புகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தப்படிப்பு. சி.ஏ., ஐ.சி.டபிள்யூ. ஏ.ஐ., போன்ற அறிவியல் அல்லாத தொழிற்படிப்புகளுக்கு சமமானதாக இதுவும் கருதப்படுகிறது.

பட்டப்படிப்பு முடிப்பவர்கள் வெறும் கூடுதல் தகுதிக்காக பட்டமேற்படிப்பை படிக்கிறார்கள். ஆனால் பட்டப்படிப்புக்குப் பின் இதுபோன்ற சிறப்புப் படிப்பை மேற்கொண்டால் மிகச்சிறப்பான வேலை வாய்ப்பையும் வளமான எதிர்காலத்தையும் பெற முடியும் என்பதை பலரும் யோசிப்பதில்லை.

பெரிய நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரியாகவும் தனிப்பயிற்சி செய்பவராகவும் தங்கள் எதிர்காலத்தை இதைப் படிப்பவர் அமைத்துக் கொள்ளலாம். உலகமயமாக்கல் சூழலில் வெளிநாட்டு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது.

+2 முடித்திருந்தால் இதில் சேர முடியும். பட்டதாரிகளும் இதில் சேரலாம். அடிப்படை படிப்பு, எக்சிகியூட்டிவ் நிலை மற்றும் தொழில்முறை படிப்பு என இதைப் படிக்க வேண்டும். ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் இதில் சேரலாம். இந்த மூன்று நிலைப் படிப்புகளுக்கான தோராயமான கட்டணம் சுமார் 20 ஆயிரம் ரூபாய்.

விவரங்கள் பெறும் முகவரி:
Deputy Director,
The Institute of Company Secretaries of India,
No.9, ICSI SIRC House,
9, Wheat Crofts Road,
Numgambakkam, Chennai.
போன்: 044-2827 9898, 2826 8685
இணைய முகவரி: www.icsi.edu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக