Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 20 மே, 2013

கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் குடும்பத்துடன் கொலை ?



டில்லியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பத்ரிஷ் தத். இவர் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பெருமளவில் ஸ்பாட் பிக்சிங் நடைபெறுவதாக புகார் பதிவு செய்தார். இது குறித்து எப்.ஐ.ஆர்.,ம் பத்ரிஷால் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் பதிவு செய்த மறுநாளே (மே 10ம் தேதி) குர்கானில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் தனது மனைவியுடன் பிணமாக கிடந்துள்ளார். இந்த மர்ம சாவு குறித்து குர்கான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பத்ரிஷ் உடலில் குண்டு காயங்கள் இருந்த போதிலும் இதனை தற்கொலை என்றே போலீசார் கூறி வருகின்றனர். டில்லி போலீசில் ஸ்பெஷல் செல் அதிகாரியாக பணியாற்றி வந்த பத்ரிஷ், ஸ்பாட் பிக்சிங் குறித்த மும்பை தரகர்கள் சிலரின் தொலைப்பேசி உரையாடல்களை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக அவர் மே 09ம் தேதி எப்.ஐ.ஆர்., ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

எப்.ஐ.ஆர்., அறிக்கை :
பத்ரிஷ் பதிவு செய்த எப்.ஐ.ஆர்., அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எப்.ஐ.ஆர்., அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : மேட்ச் பிக்சர்ஸ் மற்றும் தரகர்கள் டில்லி,மகாராஷ்டிரா,குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள்; இந்தியன் பிரிமியர் லீக்கில் விளையாடும் வீரர்கள் சிலரும் இவர்களுடன் இணைந்து ஸ்பாட் மற்றம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டுள்ளனர்; இது தொடர்பாக ஏப்ரல் 3வது வாரத்தில் ஸ்பெஷல் செல்லிற்கு புகார் ஒன்று பெறப்பட்டுள்ளது; அதில் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் சூதாட்டத்தில் நிகழுலக தாதாக்கள் சிலரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது; டில்லியில் உள்ள சில மர்ம அமைப்புக்கள் மூலம் இவை நடைபெறுகிறது; தற்போது விளையாடும் வீரர்கள் பலருக்கும் பெரிய அளவிலான தொகைகள் கைமாறி உள்ளது; இது டிக்கெட் விற்பனை மூலம் தங்கள் சம்பாதித்த பணத்தை இழக்கும் விளையாட்டு பிரியர்கள் மற்றும் அப்பாவிகளை ஏமாற்று செயல்; இது மைதானத்திற்கு வந்து அதிக கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி விளையாட்டை ரசிக்கும் வீரர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்போட்டிகளை டி.வி.,கள், இன்டர்நெட்கள் மூலம் பார்க்கும் மக்களை ஏமாற்றும் போலி விளையாட்டு; இந்த விளையாட்டுக்களை ஒளிபரப்புவோர் விளம்பரங்கள் மூலம் பெரிய தொகையை பெறுகின்றனர்; இது புரியாமல் இதனை ரசிக்கும் அப்பாவி மக்களிடம் அவர்களின் பணத்தையும் நேரத்தையும் கொள்ளையடிப்பது போன்ற செயல்; வீரர்களும், தரகர்களும் போட்டியின் எப்பகுதியில் சூதாட்டம் செய்ய வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்து விடுகின்றனர்; இவர்கள் ஏற்கனவே தீர்மானத்த முடிவுகளையும், அதிக அளவிலான பெட்களையும் மைதானத்திலும், டிவியிலும் கண்கூடாக காண முடிகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக்சிங்கை தடுக்க சட்டம் :
விளையாட்டுக்களில் சூதாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபில், தம்மால் இயன்ற அளவு இந்த சட்டத்தை விரைவில் அமல்ப்படுத்த முயற்சி செய்வதாகவும், இந்த சட்டம் குறித்த வரைவு விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சூதாட்டம் விவகாரம் தொடர்பாக ஸ்ரீசந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 3 ‌பேரை டில்லி போலீசார் கைது செய்திருப்பதாகவும், மும்பை, சண்டிகர், கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களின் உதவியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வீரர்களிடம் குரல் சோதனையும் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக