இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விருதுநகரில் இன்று பகல் செய்தியாளர்களை சந்தித் தார்.
அப்போது அவர் கூறியதா வது-
முஸ்லிம்கள் - கிறிஸ்த வர்கள் - சீக்கியர்கள் - ஜைனர் கள் - பௌத்தர்கள் - பார்ஸிகள் ஆகிய சிறுபான்மையின சமு தாயங்களுக்கு 4.5 சதவிகித தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித ஒதுக்கீட்டிலிருந்து உள்ஒதுக்கீடாக இது வழங் கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டது. ஆனால் இது செல்லாது என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, அது உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்பது நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்ததன் படி 10 சதவிகித இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தனியாக வழங்கப்பட வேண்டும். இதற் காக அரசியல் சாசனம் திருத் தப்பட்டு இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட வேண்டும். உள்ஒதுக்கீட்டால் உரிய பிரதிநிதித்துமும் கிடைப்ப தில்லை. பல்வேறு சட்ட சிக்கல் களும் ஏற்படுகின்றன. ஆறு சிறுபான்மையினர் களுக்கு நாலரை சதவீத இடஒதுக்கீடு என்பது நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஆனாலும் முதல் முறையாக மத்தியில் இடஒதுக்கீடு என்பது கொண்டுவரப்பட்டதை வரவேற் றோம்.
தமிழகத்தில் மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை தி.மு.க. ஆட்சியின்போது கலைஞர் அறிவித்தார். இதை உயர்த்தித் தருவதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெய லலிதா அறிவித்தி ருந்தார். அது இன்னமும் செயல்படுத்தப்பட வில்லை.
மூன்றரை சதவீத இடஒதுக் கீடாவது முஸ்லிம்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. கலைஞர் ஆட்சியின் போது தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமை யில் இதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டி ருந்தது. அது செயல்படுகிறதா என்று தெரியவில்லை. ஏனெ னில், அண்மையில் 1,300 மருத்துவர்களும், 41 நூலகர்க ளும் தேர்வு செய்யப்பட்டபோது, முஸ்லிம்கள் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.
எனவே, இடஒதுக்கீட்டை மையமாக வைத்து வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி சனிக்கிழமை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்த உள்ளோம். அதில் இடஒதுக்கீடு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்டு, விவாதிக் கப்பட்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.
காகிதப் பூ மணக்காது!
அ.இ.அ.தி.மு.க. அரசு இன்று விளம்பரப்படுத்தும் அனைத்துமே அறிவிப்புகள் தான். அவை திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை. ஏட்டளவில் உள்ள அறிவிப்புகள் திட்டங்களாக நிறைவேற்றப்படும் போது, நாம் அதை வரவேற்கலாம் - பாராட்டலாம். இப்போது அது காகிதப்பூ! மணக்காது.
கடந்த ஆட்சியில் அறிவிக் கப்பட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன., அதில் ஒன்று சுயநிதி பள்ளி களுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத 12 ஆயி ரம் பணியிடங்களை அரசு பதவிகளாக அறிவித்து பிறப் பிக்கப்பட்ட ஆணை. அது இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதுபோன்று எத்தனையோ திட்டங்களை இந்த ஆட்சி கிடப்பில் போட்டுள் ளது.
இவ்வாறு பேராசிரியர் குறிப் பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக