Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 18 மே, 2013

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை அதிக விற்பனை


பி.இ. சேர்க்கைக்காக மொத்தம் 2.33 லட்சம் விண்ணப்பங்கள் நேற்று விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

கடந்த ஆண்டு மொத்தம் 2.28 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு விண்ணப்ப விற்பனைக்கு மேலும் 3 நாள்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

விண்ணப்ப விற்பனை மே 4-ம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதற்குப் பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையாகி வருகின்றன.

இந்த ஆண்டும் விண்ணப்ப விற்பனை அதிகரித்துள்ளது மாணவர்கள், பெற்றோர்களிடையே பி.இ. மோகம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுவதாக பொறியியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

2.71 லட்சம் இடங்கள்:
தமிழகத்தில் இப்போது 520 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2.68 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு 11 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுளளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா 300 இடங்கள் வீதம் 3,300 கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மொத்த இடங்களின எண்ணிக்கை 2.71 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த இடங்களில் ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்காக சுமார் 2 லட்சம் இடங்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கலந்தாய்வில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டு காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக