Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 ஜூலை, 2013

செங்கல் சேம்பரில் கொத்தடிமைகளை மீட்க 9 குடும்பத்தினர் மனு


திருப்புத்தூரில் செங்கல் சேம்பரில், கொத்தடிமைகளாக உள்ள 29 பேரை மீட்க கோரி, கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.
திருப்புத்தூரில்,காரைக்குடி ரோட்டில் செங்கல் சேம்பர் செயல்படுகிறது. இங்கு, 16 குடும்பங்களை சேர்ந்த 52 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தனர். இவர்களை மீட்ககோரி, தேவகோட்டை ஆர்.டி.ஓ., கணேசனிடம் புகார் மனு அளித்தனர்.

நேற்று முன்தினம்,சேம்பரில் ஆய்வு செய்த, ஆர்.டி.ஓ., கணேசன், தாசில்தார் அமிர்தலிங்கம் ஆகியோர், கொத்தடிமைகளாக இருந்த, 7 குடும்பத்தை சேர்ந்த 23 பேரை மீட்டு, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பினர்.

நேற்று மறவமங்கலம் அருகே கழுகாடியை சேர்ந்த 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர், கிருஷ்ணன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் வந்தனர். திருப்புத்தூரில் உள்ள சேம்பரில் தாங்களும், கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ளதால், எங்களையும் மீட்க கோரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்புவிடம் மனு செய்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, திரும்பி சென்றனர். இவர்கள், எஸ்.பி., அஸ்வின் கோட்னீசிடமும் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக