கர்நாடக மக்களுக்கு பாஜக அரசு துரோகும் இழைத்து வருகிறது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்று சோனியா கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, இன்று சிக்மக்லூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது, கர்நாடக மக்களுக்கு பாஜக அரசு துரோகும் இழைத்து வருகிறது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். தங்களது இருண்ட நாட்களை மாற்ற விரும்புகின்றனர் மக்கள். இப்போதே அந்த மாற்றத்தை விரும்புகின்றனர் என்றார்.
மேலும், கர்நாடக மக்களின் நலனை பாஜக அரசு முற்றிலும் புறக்கணித்து விட்டது. துரோகம் இழைத்து விட்டது. கர்நாடக சுரங்க முறைகேடு, சுற்றுச் சூழலையே கெடுத்துவிட்டது என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக