Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 27 ஏப்ரல், 2013

உலகம் வேடிக்கைபார்த்து சிரிக்கிறது; பாராளுமன்றத்தை நடத்த விடுங்கள்: பிரதமர்

நிலக்கரி ஊழல் தொடர்பாக சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும், சீன படைகள் ஊடுருவல், பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் மீதான தாக்குதல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குரல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : நிலக்கரி ஊழல் தொடர்பாக சட்ட அமைச்சர் அஸ்வினிகுமார் பதவி விலகும் பேச்சிற்கே இடமில்லை; அது குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது; உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்; நான் தவறு ஏதும் செய்யவில்லை; சுப்ரீம் கோர்ட் அளித்த இறுதி நிலை அறிக்கையை அரசியல் நிர்வாகிகள் பார்க்கவில்லை; அதனால் அமைச்சர் பதவி விலக அவசியமில்லை; இந்திய எல்லைக்குள் சீன படைகளின் ஊடுருவலை தடுக்க நாங்கள் முறையாக திட்டமிட்டு வருகிறோம்; எல்லை பிரச்னையை பெரிதாக்க நாங்கள் விரும்பவில்லை; எல்லை பிரச்னை விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும்; நமது திட்டங்களை நாமே கேலி செய்யாமல் பார்லிமென்ட் கூட்டத்தை நடத்த விடுங்கள்; நமது செயல்களால் உலகம் நம்மை பார்த்து சிரிக்கிறது; பாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் தாக்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக