இன்றை கால கட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கேற்ப எளிதான, பரந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி, தொலைக்காட்சிகள் மட்டுமே தகவல் அறிய உதவும் சாதனங்களாக இருந்தநிலை, இன்று தலைகீழாக மாறியிருப்பது ஒன்றே, இத்துறையில் வளர்ச்சியை காட்டுகிறது.
இதழியல் துறையில் அவரவர் பதவி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது. பேனாவும், புகைப்படக் கேமராவும் மட்டும் இருந்தால் போதும் என்று எண்ணக்க்கூடாது. நடப்பு விவகாரங்கள் உட்பட அனைத்து துறைகள் சார்ந்த அறிவும், தெளிவான கண்ணோட்டமும், எளிய மொழி நடையும், கருத்துக்களை துணிவுடன் வெளியிடக்கூடிய மனப்பாங்கும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் இத்துறைக்கு இன்றியமையாதது.
நேரம் காலம் கருதாமல் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டியதும் பத்திரிக்கையாளர்களின் கடமை.
அரசு வகுத்துள்ள நெறிகளின்படி நிருபருக்கு குறைந்த பட்சம் ரூ. 5,500 ல் இருந்து 10,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மூத்த நிருபருக்கு இந்த ஊதியம் மேலும் அதிகரிக்கிறது.
உதவி ஆசியர் பணிக்கு ரூ. 8,000 என்று தொடங்கி ரூ. 15,000 ஆயிரம் வரை கிடைக்கிறது. அனுபவம், தகுதி போன்றவற்றின் அடிப்படையில் இது மேலும் அதிகரிக்கும். பணி புரியும் நிறுவனங்களைப் பொறுத்து இந்த ஊதியம் வேறுபடுகிறது. தற்போது இத்துறையில் போட்டி அதிகரித்திருப்பதால், பத்திரிக்கையாளர்களின் ஊதியமும் அதற்கேற்ப அதிகரித்து வருகிறது.
மேலும் பயணப்படி, தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. பலதரப்பட்ட பிரமுகர்களோடு பழகும் வாய்ப்பு, இத்துறையில் பணி புரிபவர்களுக்கு கிடைக்கும் சாதகமான அம்சம் ஆகும்.
நாட்டில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் இதழியல் பாடங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதழியல் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இப்படிப்பை வழங்கும் கல்வி நிலையங்கள் :
1. University Of Madras
2. SRM University , Chennai
3. Madras Christian College, Chennai
4. Asian College Of Journalism , Chennai
5. Alagappa University
6. Annamalai University
7. Bharathidasan University
8. Bharathiyar University
9. Centenary Bldg College , Chennai
10. softview media college , Chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக