Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 29 ஏப்ரல், 2013

இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி படிப்பு

இந்த நூற்றாண்டில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியத்துறை பயோ டெக்னாலஜி. என்சைம்கள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றின் உதவியுடன் ரசாயனப் பொருட்கள், எரிபொருட்கள் உற்பத்தி செய்யும் துறையே இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி என்கிறோம்.

உயிரியல் அடிப்படையில் பொருள்களை உருவாக்கும் புதிய துறை இது. சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு போன்ற துறைகளில் இன்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பார்மாசூட்டிக்கல் நிறுவனங்கள், வேளாண் தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை அமைப்புகள், பயோ எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், பயோ டெக் ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

நான்கு ஆண்டு இளநிலைத் தொழில்நுட்பப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிலையங்கள் :

1. ANNA UNIVERSITY  , CHENNAI

2. ALAGAPPA COLLEGE OF TECHNOLOGY , CHENNAI

3. Arulmigu Kalasalingam University

4. Bharathidasan Institute of Engineering & Technology, Tiruchirappalli

5. Kamaraj College of Engineering & Technology, Madurai 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக