வானிலை அறிவியல் என்பது, வளிமண்டலம் குறித்த அறிவியலின் ஒரு உட்பிரிவு. இது வானிலை மாற்றங்களையும், வானிலை பற்றிய முன்னறிவிப்புகளையும் மையமாகக் கொண்டு இயங்குகிறது.
இத்துறை, பூமியின் வளி மண்டலத்தில் நிகழும் இயற்பியல், வேதி மாற்றங்களையும், இயக்கங்களையும் உள்ளடக்கியது. வளி மண்டலத்துக்கும், புவி மேற்பரப்புக்கும் உள்ள தொடர்பு இயக்கங்களிலும் கவனம் செலுத்துகிறது.
மீடியா வாயிலாக முன்னறிவிப்புகளை வெளியிடுவோர் இத்துறையினரே. சுனாமி போன்ற இயற்கை பேரழிவுக்குப் பின், இதன் அவசியம் இன்றியமையாததாகிறது.
தகுதிகள் :
வானிலை அறிவியல் துறையில் பணிபுரிய விரும்புவோர், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்து, இளநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளவேண்டும். இதில் பி.எஸ்சி., பி.டெக்., இளநிலைப் படிப்புகள் உள்ளன.
முதுநிலை படிப்பை எம்.எஸ்சி., எம்.டெக்., படிப்புகளாக இரண்டு ஆண்டுகளில் படிக்க முடியும். இத்துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க விரும்புவோர், இளநிலையில் வானிலை அறிவியல், இயற்பியல் அல்லது இன்ஜினியரிங் துறையில் படித்திருக்க வேண்டும்.
பணி வாய்ப்புகள்:
இத்துறையில் படித்தவர்களுக்கு, அரசுத்துறையில்தான் பணி வாய்ப்புகள் உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையுடன் தொடர்புடைய சில தனியார் நிறுவனங்களிலும் வாய்ப்புகள் இருக்கின்றன.
ராணுவப்பணிகளில் படைகளை நகர்த்துவது, விமானப் படை இயக்கம், குண்டு வீசுதல், கடற்படையை இயக்குவது போன்றவற்றுக்கு வானிலை தகவல் இன்றியமையாதது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டீயாரலஜி, இந்திய வானிலை அறிவியல் துறை, இந்திய விமானப்படை, விண்வெளி ஆராய்ச்சி மையம், நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி ஆகியவற்றில் பணிபுரியலாம்.
இத்துறை பல்வேறு சவால்களையும், சாதனைகளையும் உள்ளடக்கியுள்ளது. கல்வித் தகுதியையும், அனுபவத்தையும் பொறுத்து நல்ல ஊதியத்தை பெற முடியும்.
அரசுப் பணியில் நுழைந்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் சம்பளமாகப் பெறலாம். வெளிநாடுகளில் வேலை கிடைத்தால், அதிக சம்பளம் பெற முடியும்.
கல்வி நிறுவனங்கள்:
* பாரதியார் பல்கலைக்கழகம்
* கொச்சின் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
* ஆந்திரா பல்கலைக்கழகம்
* ஐ.ஐ.டி., கோரக்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக