தமிழ்நாடு உடற்கல்வியியல் (பிசிகல் எஜூகேஷன்) மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், எம்.பில்., எம்.எஸ்சி., போன்ற படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக, முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 2005 முதல் செயல்படுகிறது.
என்ன படிப்புகள் :
* எம்.பில்., பிசிகல் எஜூகேஷன் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட முதுநிலை படிப்பில் 55 சதவித மதிப்பெண்களோடு தேர்ச்சி அத்துடன் இரண்டாண்டுகள் ஆசிரியாராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* எம்.பில்., யோகா படிப்பிற்கு சம்பந்தப்பட்ட முதுநிலை படிப்பில், 55 மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* எம்.பில்., எக்சசைஸ் பிசியாலஜி அண்டு நியூட்ரிசியன் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட படிப்பில் முதுநிலை பட்டம், அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* எம்.பில்., பயோமெக்கானிக்ஸ் அண்டு உடலியக்கவியல் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் முதுநிலை பட்டம் அத்துடன் இரண்டாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* எம்.பில்., அட்வான்ஸ்டு டிரெய்னிங் அண்டு கோச்சிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட படிப்புகளில் முதுநிலை பட்டம் அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* எம்.எஸ்சி., ஸ்போர்ட்ஸ் கோச்சிங் படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட படிப்புகளில் இளங்கலை, டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி அத்துடன் இரண்டாண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பல்கலையில், நேரிலோ தபாலிலே அல்லது இணையதளத்திலோ பெற்று விண்ணப்பிக்கலாம்.
கட்டணமாக ( எஸ்.சி/ எஸ்.டி., 250, மற்றவர் 500) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிடி யை The Registrar, Tamil Nadu Physical Education and Sports University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அத்துடன் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வழங்கும் கடைசி நாள் ஏப்ரல் 30.
விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3.
நுழைவுத்தேர்வு நாள் மே 9.
வகுப்புகள் தொடங்கும் நாள் மே 13.
விவரங்களுக்கு www.tnpesu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக