Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 30 நவம்பர், 2012

நெல்லையில் காய்கறிகளின் விலைகள் குறைவு!


நெல்லை டவுன் நயினார் குளம் மார்க்கெட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, விருதுநகர், சிவகாசி, ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி, தேனி, கம்பம், ஓசூர் போன்ற வெளியூர்களில் இருந்து தக்காளி, கத்திரிக்காய், கோஸ், உருளைக் கிழங்கு, பல்லாரி, பீட்ரூட் போன்ற காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதுபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, திருப்பணி கரிசல்குளம், திடியூர், செங்குளம், மானூர், ரஸ்தா போன்ற உள்ளூர் கிராமங்களில் இருந்து கத்தரி, பொடி உள்ளி, தக்காளி போன்ற காய்கறி வகைகளும் விற்பனைக்கு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் இருந்து தான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடும் வறட்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உள்ளூர் காய்கறிகளின் வரத்துகள் அதிகம் இல்லாததால் நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் ஏற்றமும், இறக்கமும் கண்டுவருகின்றன.

நெல்லை டவுன் மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி, உருளைக் கிழங்கு கிலோ ரூ.24க்கும், தக்காளி ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் 15, வெண்டைக்காய் 18, கோஸ் 10, பீன்ஸ் 25, முருங்கைக்காய் 40, கேரட் 20, மிளகாய் 15, பல்லாரி 20, சேனைக்கிழங்கு 15, பொடி உள்ளி 15, பூசணி 8, பீட்ரூட் 12, புடலங்காய் 15, பாகற்காய் 15, அவரைக்காய் 30, கருணை கிழங்கு 18, எழுமிச்சை 40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக கார்த்திகை மாதங்களில் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நேற்று பெரும்பாலான காய்கறிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளன.உள்ளூர்களில் இருந்து மொத்த கடைக்கு வரும் காய்கறிகளின் வரத்துகள் குறைந்த போதிலும், வெளியூர்களில் இருந்து காய்கறிகளின் வரத்துகள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே நிலை நீடிக்கும் என மார்க்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 1.21 கோடி மக்கள் ஏழைகள்

2009-10ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நாட்டில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை மாநில வாரியாக திட்டக் குழு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உத்திர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 7.37 கோடி ஏழை மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகாரில் 5.43 ‌கோடி ஏழைகளும், மகாராஷ்டிராவில் 2.7 கோடி ஏழைகளும் உள்ளனர்.

டெண்டுல்கர் கமிட்டி கொள்கையின்படி அளிக்கப்பட்ட இந்த பட்டியலை திட்டக்குழு நேற்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தது. சுகாதார, கல்வி, உண்ணும் உணவு ஆகியவற்றிற்காக செலவிடப்படும் தொகையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி மத்திய பிரதேசத்தில் 2.61 கோடி பேரும், மேற்கு வங்கத்தில் 2.4 கோடி பேரும், ஆந்திராவில் 1.76 கோடி பேரும், ராஜஸ்தானில் 1.67 கோடி பேரும், ஒடிசாவில் 1.53 கோடி பேரும், கர்நாடகாவில் 1.42 கோடி பேரும், குஜராத்தில் 1.36 கோடி பேரும், ஜார்க்கண்டில் 1.26 கோடி பேரும், தமிழகம் மற்றும் சட்டீஸ்கரில் 1.21 கோடி பேரும், அசாமில் 1.16 கோடி பேரும் உள்ளனர். மிகவும் குறைந்த அளவாக அரியானாவில் 49.96 லட்சம் ஏழை மக்கள் உள்ளனர். 

155 மாவட்டங்களில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், புதிதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது: நடப்பு, 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்.

60 இடங்களில், பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கட்டுவதில், தனியாருடன் இணைந்து செயல்படலாம் என, இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும், அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தனியாருடன் இணைந்து, கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது. பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கே.வி., பள்ளிகளுக்கு, இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம். இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

யாசர் அரபாத்தின் போராட்டத்திற்கு வெற்றி ,பாலஸ்தீன் இறையாண்மை உள்ள சுதந்திர நாடு :ஐநா அங்கீகாரம்


பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கும் தீர்மானம் ஐ.நா.வில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா உள்பட 138 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  யாசர் அராபத்தின் கடும் போராட்டத்துக்கு பிறகு பாலஸ்தீனம் தனி நாடானது. எனினும் ஐ.நா.வால் தனி நாடு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதையடுத்து தனி நாடு அந்தஸ்து வழங்க கோரி தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நேற்று கொண்டு வரப்பட்டது.

ஐ.நா.வில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உள்பட 138 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டன. இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றது. எனினும், உறுப்பு நாடுகள் பட்டியலில் சேராத ஐ.நா. கண்காணிப்பு நாடுகள் வரிசையில் பாலஸ்தீனம் இடம்பெறும். இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாலும், அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதாலும் தீர்மானம் நிறைவேறி உள்ளது, என்றார். ஓட்டெடுப்புக்கு முன்பு பாலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் பேசுகையில், ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேறினால், பாலஸ்தீனத்துக்கு பிறந்த நாள் சர்ட்டிபிகேட் வழங்கியது போல் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இன படுகொலை, போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் பாலஸ்தீனம் வழக்கு தொடர்ந்து நீதி பெற முடியும். இதுகுறித்து இங்கிலாந்து கூறுகையில், இஸ்ரேல் தாக்குதல் குறித்து கிரிமினல் கோர்ட்டை பாலஸ்தீன தலைவர்கள் அணுக முடியும் என்று தெரிவித்துள்ளது

புதன், 28 நவம்பர், 2012

இ.எஸ்.ஐ.சி. (ESIC ) - ல் துணை மருத்துவப் பணியிடங்கள்


எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனின் (ESIC) சென்னை கிளையில் துணை மருத்துவப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம் டென்டல் டெக்னீசியன் பிரிவில் 3 இடங்களும், லேபரட்டரி அஸிஸ்டெண்ட் பிரிவில் 11 இடங்களும், ஜூனியர் மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் பிரிவில் 2 இடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைகள்: இ.எஸ்.ஐ.சி.,யின் டென்டல் டெக்னீசியன் மற்றும் மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். லேபரட்டரி அஸிஸ்டண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மூன்று பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்க குறைந்த பட்சம் பிளஸ் 2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

டென்டல் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் டென்டல் மெக்கானிக்ஸ் அல்லது டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஒரு ஆண்டு கால பணி அனுபவம் இத்துறையில் பெற்றவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. லேபரடரி அசிஸ்டன்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எம்.எல்.டி.,யில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 6 மாத கால பயிற்சி வகுப்பை இத்துறையில் முடித்திருப்பதோடு கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் பெற்றிருக்க வேண்டும்.

மற்ற தகவல்கள்: இ.எஸ்.ஐ.சி.,யின் துணை மருத்துவப் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கிரேடு ஊதிய அடிப்படையில் ரூ.125/ மற்றும் ரூ.225/ என்று இரண்டு விண்ணப்பக் கட்டண தொகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை எடுத்து பின்வரும் முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் அல்லது ரெஜிஸ்டர்டு போஸ்டில் 11.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி

Medical Superintendent,
ESIC Medical Hospital,
Ashok Pillar Road, K.K. Nagar,
Chennai  600 078.

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 04.12.2012
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 11.12.2012

இணையதள முகவரி: www.esichennai.org

செவ்வாய், 27 நவம்பர், 2012

தொழில் முனைவோருக்கான புதிய திட்டம் :25 சதவீதம் அரசு மானியத்துடன் அமல்


தமிழகத்தில் 25 அரசு மானியத்துடன் தொழில் முனைவோருக்கு வரும் 1ம் தேதி முதல் புதிய திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

 வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் செயலாக்கம் பெற உள்ள இத்திட்டத்தின் கீழ் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள், சொந்தமாக தொழில் துவங்கும் வகையில் மானியத்துடன் கூடிய தொழிற் கடன் உதவி வழங்கும் விதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வயது வரம்பு: பொது பிரிவினர் 21-35 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறப்பு பிரிவினர் 45 வயது வரை தகுதியானவர்கள். மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பிரிவில் அடங்குவர்.

தகுதிகள் :
பட்டப் படிப்பு, பட்டய படிப்பு, ஐ.டி.ஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி தகுதியானவையாகும்.

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

திட்ட மதிப்பீடு: 5 லட்சம் முதல் 100 லட்சமாக இருக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும்.

அரசு மானியம்:
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக 25 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கும். கடன் உதவி பெற பாங்கில் இருந்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் ஒரு மாதம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமாக பெற வேண்டும். ஏற்கனவே அரசு துறைகள் மூலம் கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தில் கடன் பெற இயலாது. ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் முனைவோர் கூட்டாக சேர்ந்து பங்குதாரர் நிறுவனங்களாக அமையும் சூழ்நிலையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் தனித்தனியாக திட்டத்தில் கடன் பெற தகுதிகள் இருக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள மாவட்ட குழுவில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். வரும் 1ம் தேதி முதல் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை (டெலிபோன் - 0462 - 2572384) நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்,என்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

தமிழக அரசு உத்தரவு :ஐகோர்ட் ரத்து


சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள இடத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டதை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆட்சேபணைகளை பெற்று, புதிய உத்தரவு பிறப்பிக்குமாறு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், புகாரி ஓட்டல் மற்றும் கட்டடங்கள் அடங்கிய நிலம் உள்ளது. இந்த இடத்தை, ராஜா சர் ராமசாமி முதலியார் அறக்கட்டளைக்கு, 1888ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கியது. பின், அறக்கட்டளையை முறையாக நிர்வகிக்க, சொத்தாட்சியர் (அபிஷியல் டிரஸ்டி) வசம், சொத்துக்கள் கொண்டு வரப்பட்டது.அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்ட இடத்தை, திரும்பப் பெறவும், அந்த இடத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒப்படைக்கவும், கடந்த, மே மாதம், வருவாய் துறை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஒரு மாதத்துக்குள் இடத்தை காலி செய்து ஒப்படைக்கும்படி, சொத்தாட்சியருக்கு, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், இஸ்மாயில், புகாரி சன்ஸ், ராம்பிரசாத் உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர். கட்டடங்களில் வாடகைக்கு, குத்தகைக்கு இருப்பவர்கள், இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:நிபந்தனைகளை மீறியதாக கூறி, இடத்தை திரும்பப் பெறுவதாக, காரணம் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணம் தவறானது. நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு, அரசும் அனுமதி வழங்கியுள்ளது. பொது காரியத்துக்காக, இடம் தேவைப்படுகிறது என்பதில் நியாயம் இருக்கலாம்.இடத்தை திரும்பப் பெறுவது என்றால், அதில், சட்டப்பூர்வமாக வாடகைக்கு இருப்பவர்கள் உள்ளிட்டவர்கள், மெட்ரோ ரயில் திட்டத்தில் கூறியுள்ளபடி, நஷ்டஈடு பெற உரிமையுள்ளது. அந்த இடத்தில் இருந்து வெளியேறவும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு முன், அவர்கள் தரப்பு கருத்தை கேட்கவில்லை.நஷ்டஈட்டை நிர்ணயிக்க, அவர்களை வெளியேற்றுவதற்கு முன், அவர்கள் தரப்பை கேட்க வேண்டும். எனவே, அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இடம், கட்டடங்களில் இருக்கும் மனுதாரர்கள், சொத்தாட்சியர், இணை அறங்காவலர், மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு, அரசு, நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
அவர்களின் ஆட்சேபணைகளை பரிசீலித்து, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, புதிய உத்தரவுகளை, அரசு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசில் சித்த மருத்துவப் பணி நியமனம்


தமிழ்நாடு அரசுப் பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி., தக்க தேர்வு முறைகள் மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. 1929லேயே மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் என்ற பெயரில் துவங்கப்பட்ட அமைப்புதான் பின்நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., என்று பெயர் மாற்றம் பெற்றது.

1970ல், இது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனாக மாறியது. இந்த அமைப்பின் சார்பாக 83 சித்தா உதவி மருத்துவ அதிகாரிகள், 6 ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரிகள், 24 யுனானி உதவி மருத்துவ அதிகாரிகள் மற்றும் 14 ஹோமியோபதி உதவி மருத்துவ அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேவைகள்: தமிழக அரசின் உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். சித்தா பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எச்.பி.ஐ.எம்.,(சித்தா), ஜி.சி.ஐ.எம்.,(சித்தா), எம்.டி.,(சித்தா), பி.ஐ.எம்.,(சித்தா), எல்.ஐ.எம்.,(சித்தா) அல்லது பி.எஸ்.எம்.எஸ்., பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

ஆயுர்வேத மற்றும் யுனானி உதவி மருத்துவ அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேலே குறிப்பிட்ட பிரிவுகளிலான படிப்பை ஆயுர்வேதம் அல்லது யுனானி பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும். பி.ஏ.எம்.எஸ்., மற்றும் பி.யு.எம்.எஸ்., பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஹோமியோபதி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எப்.எப்.ஹோம்(லண்டன்), எம்.எப் ஹோம்(லண்டன்), டி.எப் ஹோம்(லண்டன்) மற்றும் மேற்கு வங்க நிறுவனங்களின் மூலமான ஏதாவது ஒரு டிப்ளமோ படிப்பை ஹோமியோபதியில் முடித்திருக்க வேண்டும்.

மற்றவை: உதவி மருத்துவ அதிகாரிகளுக்கான தேர்ச்சி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு கம்ப்யூட்டர் வாயிலான தேர்வாக இருக்கும். எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் எதிர்கொள்ள வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட உதவி மருத்துவ அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.175/ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 11.12.2012
கட்டணம் செலுத்த இறுதி நாள்: 13.12.2012. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 06.01.2013 காலை 10 முதல் மதியம் 1 வரை.

இணையதள முகவரி: www.tnpsc.gov.in/notifications/48_not_eng_armo2k12.pdf

திங்கள், 26 நவம்பர், 2012

கல்லூரிகளில் பாஸ்போர்ட் மேளா ....!


 பாஸ்போர்ட் வழங்குவது விரைவுப்படுத்தப்படும் என, புதிதாக பொறுப்பேற்ற, மதுரை பாஸ்போர்ட் அதிகாரி மணீஸ்வர ராஜா தெரிவித்தார். கல்லூரிகளில் பாஸ்போர்ட் மேளாக்கள் நடத்தவும் திட்டம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிகாரி சுந்தரராமன் ஓய்வு பெற்றதால், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணீஸ்வரராஜா, பாஸ்போர்ட் அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றார். 2002ல் "குஜராத் கேடர்&' ஐ.எப்.எஸ்., ஆக தேர்வு ஆன இவர், 7 ஆண்டுகள் கிர் காடுகள் வன அதிகாரியாக பணியாற்றினார்.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம், மாற்றுப்பணியாக (டெபுடேஷன்) இப்பொறுப்பை ஏற்றார். அவர் கூறியதாவது: பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை சேவா கேந்திரத்தில் தினமும் 700 பேரும், திருநெல்வேலி சேவா கேந்திரத்தில் தினமும் 550 பேரும் விண்ணப்பிக்கின்றனர்.

விண்ணப்பங்கள் மீது போலீஸ் "வெரிபிகேஷனை&' விரைவில் முடிக்க, மாவட்ட எஸ்.பி.,க்களை சந்தித்து ஆலோசிக்கஉள்ளேன். "பாஸ்போர்ட்&' வழங்குவதை விரைவுப்படுத்தவும், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளில் "பாஸ்போர்ட் மேளா&'க்கள் நடத்தவும் திட்டம் உள்ளது என்றார்.

செங்கோட்டை அருகே உள்ள 13 கண் பாலத்தை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்


செங்கோட்டை-புனலூர் இடையே அகல ரெயில்ப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக செங்கோட்டை அருகே கேரள மாநிலத்தில் உள்ள பழமை வாய்ந்த கழுதுருட்டி 13 கண் பாலத்தை இடிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு தமிழகம் மற்றும் கேரள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அந்த பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி 13 கண் பாலம் அருகே நடந்தது.

மேலும் அந்த பாலம் குறித்து கட்டுரை, பேச்சு, கவிதை போட்டி நடந்தது. பொதுமக்கள் அளிக்கும் கருத்துகளை நாளை பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த பிலிப், நாசர்கான், எடமன்ராஜ், முகமதுகான் ஆகியோர் டெல்லி சென்று பிரதமர் மற்றும் ரெயில்வே மந்திரியிடம் அளிக்கின்றனர்.

செல்போன் மூலம் வங்கி கணக்கை அறியும் வசதி: விரைவில் அறிமுகம்


வங்கி கணக்கை வீட்டில் இருந்தபடியோ, அலுவலகத்தில் இருந்தப்படியே ஆன்-லைன் மூலம் அறியவும் செயல்படுத்தும் வசதி தற்போது நடை முறையில் உள்ளது.

நெட் பேங்கிங் என்று சொல்லக்கூடிய இந்த வசதியை உலகின் எந்த மூலையில் இருந்தும் செயல்படுத்தலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் தங்களது கணக்கில் உள்ள பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றம், வங்கி இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த வசதி உதவுகிறது.

பஸ், ரெயில், விமான பயணத்தின்போது கூட வங்கி கணக்கை செயல்படுத்த முடியும். இண்டர்நெட் வசதி வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வசதியை பெறமுடியும்.

இதன் மூலம் டெலிபோன், மின்சார கட்டணம், உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் செலுத்தலாம். இனிமேல் செல்போன் மூலம் வங்கி கணக்கை செயல்படுத்தலாம். அதற்கான திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் ஜி.எஸ்.எம். வசதி பெற்ற செல்போன்களில் இந்த சேவையை பெறலாம். செல்போனில் #99 என்ற எண்ணில் பதிவு செய்தால்போதும் தங்கள் கணக்கில் என்ன சேவையை செயல்படுத்தவேண்டும் என்று கேட்டு பெறும். கணக்கில் உள்ள பணத்தை மாற்றம் செய்தல், கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது செக்புக் தேவை குறித்து தெரிவித்தல் உள்ளிட்ட பல செயல்பாடுகளை இதன் மூலம் பெறலாம். வங்கி சர்வர் வழியாக யு.எஸ்.எஸ்.டி. மூலமாக இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

சந்திரபாபுநாயுடுவை விரட்டியடியுங்கள்: சந்திரசேகரராவ் ஆவேசம்


ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்காக மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தெலுங்கானா பகுதி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். மெகபூப் நகர் அருகே உள்ள சூரியா பேட்டையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சந்திரசேகரராவ் பேசியதாவது:-

தனி தெலுங்கானாவுக்காக கட்சியை காங்கிரசுடன் இணைக்க தயாராக இருந்தேன். ஆனால் காங்கிரசார் ஏமாற்றிவிட்டனர். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை தெரிந்து கொண்டேன். மிகப்பெரிய போராட்டம் மூலமாகத்தான் தெலுங்கானா உதயமாகும் இதற்கு யார் உதவியும் தேவையில்லை. நமது போராட்டம் மூலம் நாமே தெலுங்கானாவை உருவாக்குவோம்.

தனி தெலுங்கானாவுக்கு எதிராக இருந்த சந்திரபாபுநாயுடு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ஷர்மிளா ஆகியோர் இங்கு பாதயாத்திரை வருகிறார்கள். அவர்களை விரட்டி அடியுங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பூர் தொழிலாளர்களின் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு


திருப்பூரில், தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் வரும், 28ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு, போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்; ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அறிவுரை வழங்கினர்.

தினமும், 18 மணி நேரம் வரை ஏற்பட்டு வரும், மின்தடையால் தொழில் துறையினர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னையை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில், வரும், 28ம் தேதி, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி நடத்த, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

இந்நிலையில், தொழில் பாதுகாப்பு குழுவினர் மற்றம் தொழில் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், எஸ்.பி., அமித் குமார் சிங் பேசியதாவது:
மின்வெட்டு பிரச்னை தமிழகம் முழுவதும் உள்ளது. இதற்கு தீர்வு காண, முதல்வர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். திருப்பூர் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வரும், 3, 4ம் தேதி நடக்கும், போலீஸ் மற்றும் கலெக்டர் மாநாட்டில், இதுபற்றி விவாதிக்கப்படும்.போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர்; கார்த்திகை தீப திருவிழாவும் வருவதால், ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவர். உணர்வுகளை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.பல்லடம், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்புக்குட்டி பேசுகையில், ""அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது வாழ்வாதார பிரச்னை; அனுமதி அளிக்க வேண்டும்,'' என்றார்.தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கிஷோர் குமார் பேசுகையில், ""அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல; பிரச்னையை அரசுக்கு உணர்த்தவே போராட்டம்; திருப்பூருக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என்பதே கோரிக்கை,'' என்றார்.போலீசார் அனுமதி மறுத்ததால், பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது .இக்கூட்டத்தில், தொழில் அமைப்புகளை சேர்ந்த, 32 நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ராம் ஜெத்மலானி சஸ்பெண்ட்


 கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பா.ஜ., எம்.பி.,யான, ராம் ஜெத்மலானி, கட்சியிலிருந்து நேற்று "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

பா.ஜ., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவரும், மூத்த சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானி, சமீபகாலமாக, பா.ஜ., மேலிடத்துக்கு எதிராக, குரல் கொடுத்து வந்தார். "ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, நிதின் கட்காரி, பா.ஜ., தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரஞ்சித் சின்கா, சி.பி.ஐ., இயக்குனராக நியமிக்கப்பட்டதை, பா.ஜ., தலைவர்கள் எதிர்த்தது கண்டனத்துக்குரியது' என, அவர் கருத்து தெரிவித்தார்.

இதனால், பா.ஜ., தலைவர்கள், ராம் ஜெத்மலானி மீது, கடும் அதிருப்தி அடைந்தனர். அவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தனர். "முடிந்தால், என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்' என, பா.ஜ., மேலிடத்துக்கு, அவர், சவால் விடுத்திருந்தார்.இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கருத்து தெரிவித்ததற்காக, கட்சியிலிருந்து, ராம் ஜெத்மலானி சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும், இந்த நடவடிக்கை, உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பா.ஜ., சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டது.ராம் ஜெத்மலானி, காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகவும், பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மரணம்


தி.மு.க. முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ். இவர் சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவான்மியூரில் உள்ள மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இன்று காலை உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இந்நிலையில் மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

சனி, 24 நவம்பர், 2012

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் பகுதிகளில் நேற்று விடிய விடிய பெய்த தொடர்மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வித்திக்கப்பட்டது.குற்றாலம் பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் அருவிகளில் சுமாராக தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் குற்றாலம் பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது. நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்தது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் மெயினருவியில் ஆர்ச் பகுதியை தாண்டி தண்ணீர் விழுந்தது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் செம்மண் நிறத்தில், சிறிய கற்கள், மரக்கட்டைகள், கிளைகள் போன்றவையும் விழுந்தது. இதனால் மெயினருவியில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.அருவிப்பகுதியில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றலாம் கடை வீதி, பஜார் பகுதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சுற்றுலா பயணிகள்  அப்பகுதிக்கு செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.பழைய குற்றால அருவி, புலியருவியிலும் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது. மதியத்திற்கு பின்பு அருவிகளில் தண்ணீர் படிப்படியாக குறையத் துவங்கியது.

கிராம பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்கள் அதிகரிப்பு


கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 2010, ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பள்ளிகளில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 10 சதவீதம் மாணவர்கள் இடைநிற்கும் நிலை உள்ளது. இதை மறைத்து, பெரும்பாலான பள்ளிகளில், புள்ளி விவரங்கள் தயாரிக்கப்படுகிறது. கட்டாயக்கல்வி சட்டத்தில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையே இருக்கக்கூடாது எனவும், இதற்காக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான பிரச்சாரம், "பிரிட்ஜ் கோர்ஸ்&' மையங்கள் என, பல்வித செயல்பாடுகள் இருந்தன. தற்போது, அவையும் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால், கிராமப்பகுதிகளில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்தவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் சேர்ப்பதற்கான, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளியில், இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில், சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மூன்று மாதம் வரை பயிற்சி வழங்கி, அந்தந்த வயதுக்குரிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

பல குழந்தைகளை, பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல், விவசாயம் உட்பட, பல்வேறு பணிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். கலெக்டரிடம் புகார் கொடுத்து, போலீஸ் மூலம் மிரட்டி, இடைநின்ற மாணவனை பள்ளிக்கு வரவழைத்தாலும், ஒரு சில நாட்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாத நிலை உள்ளது.

உயர் அதிகாரிகள் கண்டிப்பார்களோ என்ற பயத்தில், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கையை மறைத்து விடுகின்றனர். இடையில் நிற்கும் மாணவன், தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டதாகவோ, வேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்றதாகவோ, கணக்கு காட்டி விடுகின்றனர். தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

வெள்ளி, 23 நவம்பர், 2012

கிராமப்புற மேம்பாடு தொடர்பான டிப்ளமோ படிப்பு


 கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய கல்வி நிறுவனம், கிராமப்புற மேம்பாட்டு மேலாண்மைத் துறையில், தனது 6வது 1 வருட முழுநேர ரெசிடென்ஷியல் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PGDRDM என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டிப்ளமோ படிப்பு, வரும் 2013-14ம் கல்வியாண்டில் வழங்கப்படவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு 2013ம் ஆண்டு, பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும். 2013, ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்தப் படிப்பு, 2014ம் ஆண்டு ஜுலை மாதம் நிறைவடையும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் இறுதி தேதி  ஜனவரி 11, 2013. அதேசமயம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான்-நிகோபர் மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி 2013, ஜனவரி 18ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் மற்றும் இதர விபரங்களை அறிய www.nird.org.in/pgdrdm என்ற வலைத்தளம் செல்க.

எளிதான வெளிநாட்டுக் கல்வி! (சிங்கப்பூர்)


இந்தியாவிலிருந்து சில மணி நேரங்களில் அடைந்துவிடக்கூடிய ஒரு இடமான சிங்கப்பூர், பலவித காரணங்களுக்காக இந்திய மாணவர்களைக் கவரும் இடமாக உள்ளது.

QS போன்ற சர்வதேச அளவிலான சர்வேக்களில், உலகளவில் சிறந்த பல்கலைகளில், முதல் 20 இடங்களுக்குள் சிங்கப்பூர் பல்கலைகள் வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு, சிங்கப்பூர் பல்கலைகள் பெயர்பெற்று விளங்குகின்றன.

சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பிற்கு சிறப்பான உத்தரவாதம் கிடைக்கும் இந்நாட்டில், பல நாடுகளை ஒப்பிடும்போது, கல்விக் கட்டணமும் குறைவே. அதேசமயம், தரமான கல்வியும் உண்டு. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் ஒருவர், அமெரிக்கா அல்லது பிரிட்டன் நாடுகளுக்கு செல்வதற்கு ஆகும் பயண செலவை விட, சிங்கப்பூர் செல்வதற்கு ஆகும் செலவு மிக மிக குறைவு.

சர்வதேச அறிவுக் கூடல்
சிங்கப்பூரில், INSEAD, SP Jain Centre of Management and SIM university போன்ற வெளிநாட்டுப் பல்கலைகளின் செயற்கைக்கோள் வளாகங்களும் உண்டு. வலுவான சர்வதேச தொடர்பை இந்நாடு பெற்றுள்ளதால், உலகளவிலான பல பல்கலைகளின் ஒருங்கிணைப்பை பெற முடிகிறது. Massachusetts institute of technology, US and Zhejiang university(China), MIT, Washington university, Carnegie Mellon university, Yale Stanford போன்ற பல பல்கலைகளுடன் ஒத்துழைப்புகள் உள்ளன.

படிப்புகள் மற்றும் செலவினங்கள்
இந்திய மாணவர்கள் பொதுவாக, பொறியியல், மேலாண்மை, ஐடி மற்றும் சுற்றுலாத் தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள சிங்கப்பூர் வருகின்றனர். இளநிலைப் படிப்புகளுக்கு, வருடத்திற்கு, சராசரியாக, 25,000 முதல் 30,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை செலவாகின்றன. அதேசமயம், தகுதிவாய்ந்த(Meritorious) மாணவர்களுக்கு, வருடத்திற்கு 11,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை உதவித்தொகை கிடைக்கிறது.

தோராயமாக, ஒரு மாதத்திற்கான தங்குமிட செலவினம் 700 முதல் 900 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகிறது. இளநிலைப் பட்டப் படிப்புகள் 3 வருடங்களும், முதுநிலைப் படிப்புகள் 2 வருடங்களும் கொண்டவை. அதேசமயம், இரட்டைப் பட்டப் படிப்புகள், 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகும்.

உதவித் தொகைகள்
National university of Singapore(NUS), Nanyang technological university(NTU), Management university(SMU) போன்ற சிங்கப்பூர் பல்கலைகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன.

விசா விதிமுறைகள்
பல்கலையிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, மாணவர் அனுமதி சீட்டிற்காக(Student pass), Immigration and Check points Authority -ஐ அணுகவும்.

உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், ஏற்பு(acceptance) விண்ணப்பம் மற்றும் மாணவர் அனுமதி சீட்டு விண்ணப்பம் ஆகியவற்றை நிறைவுசெய்து, அவற்றை பல்கலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.

உங்களின் ஏற்பு விண்ணப்பம் மற்றும் மாணவர் அனுமதி சீட்டு விண்ணப்பம் ஆகியவை ஏற்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட பல்கலையானது, சிங்கப்பூர் குடியேற்ற மற்றும் சோதனை அத்தாரிடியிடமிருந்து(ICA), மாணவர் அனுமதி சீட்டிற்கு விண்ணப்பிக்கும்.

அந்த அனுமதியை ICA -இடமிருந்து பெற்ற பின்னர், அதற்கான கடிதத்தை, அந்தப் பல்கலை அல்லது கல்வி நிறுவனம், உங்களுக்கு அனுப்பும்.

கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்!


மாநில திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு, மென் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திறன்கள் தொடர்பாக பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மூன்றாமாண்டு மாணவர்களுக்கு, மொத்தம் 235 மணி நேரங்கள் பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம், கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் மாணவர்கள், ஐ.டி, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பணிவாய்ப்புகள் பெறுவது எளிதாக்கப்படும்.

தகவல் தொடர்பு திறன்கள், ஆங்கில உச்சரிப்பு மற்றும் இலக்கணம், வாடிக்கையாளர் சேவை திறன்கள், பி.சி அப்ளிகேஷன்ஸ், சட்டச்சு திறன்கள், நேர்முகத் தேர்வுக்கு தயாராதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சி திட்டத்தில் அடங்கும். இவைத்தவிர, ஐ.டி.இ.எஸ், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகளிலும் கவனம் செலுத்தப்படும்.

இப்பயிற்சி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மாநிலம் முழுவதுமுள்ள 62 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும்.

இந்த தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான ஒத்துழைப்பை, மாநில அரசின் கல்லூரி கல்வித்துறை வழங்கும். கல்லூரி இறுதியாண்டில், 6 முதல் 7 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த பயிற்சிகள், வாரத்திற்கு தோராயமாக 8 மணிநேரங்கள் வரை வழங்கப்படும்.

இத்தகைய பயிற்சிகள், கிராமப்புறங்களிலிருந்தும், தமிழ் வழியில் கல்விக் கற்றும் வரும் மாணவர்களுக்கு, பேருதவியாக இருந்து, அவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். பயிற்சியளிக்கும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உதவிக் குழுவானது, ஐ.டி. ஐ.டி.இ.எஸ், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் துறை நிறுவனங்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, மாணவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதிசெய்யும் விதமாக பணியாற்றும்.

படிப்பு மற்றும் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 7 இடங்களில் நடத்தப்படும். இதன்மூலம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மாணவர்கள் எளிதாக கலந்துகொள்ள வழியேற்படும். மாநில அரசின் இந்த புதிய திட்டத்தை, கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர்.

திமுக மூத்த தலைவர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்


முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் இன்று காலமானார். சில நாட்களுக்கு முன்பு வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல்நிலை பாதித்து சளித் தொல்லையால் அவர் அவதிப்பட்டார். இதனால் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். சேலம் அங்கம்மாள் காலனியில் குடிசைக்குத் தீ வைத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைதானதும் கடந்த மாதம் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க.,வில் உறுப்பினரான வீரபாண்டி ஆறுமுகம், 1957 முதல் 70 வரை பூலாவரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1970 ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 1962,67,71,89,96 மற்றும் 2006ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1978 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றினார்.

தி.மு.க., மூன்று நாட்கள் துக்கம்
வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்ததை தொடர்ந்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தி.மு.க., அறிவித்துள்ளது. மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 22 நவம்பர், 2012

மதரஸாக்கள் மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி மாநில அரசுகள் மூலம் இல்லாமல் நேரடியாக வழங்கப்பட வேண்டும் தேசிய ஆலோசனை குழுக் கூட்டுக் கூட்டத்தில் கே.ஏ.எம். அபூபக்கர் கோரிக்கை


மதஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனை குழு முதல் கூட்டம் புதுடெல்லி லோதி சாலையில் உள்ள இந்தியா ஹேடிடேட் மையம் குல்மஹால் அரங்கில் கடந்த 20-ம் தேதி செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய மனிதவள மேம்பாட் டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு, இணையமைச்சர் ஜிதேந் திர பிரசாத், துறைச் செயலா ளர்கள், இக்குழுவில் இடம் பெற்றுள்ள பல்வேறு மாநிலங் களின் மதரஸா வாரியத் தலைவர்கள், மதரஸா வளர்ச்சி சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜு, ஜிதேந்திர பிரசாத் ஆகியோர் இக்குழுவின் நோக்கம் பற்றி முன்னுரை வழங்கினர். 12-வது ஐந்தாண் டுத் திட்டத்தில் மதரஸா கல்வி மேம்பாட்டிற்கு ரூ.900 கோடி ஒதுக்க இக்கூட்டத்தில் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், குழு உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதாவது-

மதரஸாக்களின் மேம்பாட் டுக்கு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இங்கு தரப்பட்டுள்ள அறிக்கையில் மதரஸா மேம்பாட்டுக்கான எஸ்பிக்யூஇஎம். திட்டத்தின் மூலம் மாநில வாரியாக பயன்பெற்ற மதரஸாக்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

பூஜ்ய நிலையில் தமிழ்நாடு
நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் மூலம் 19 மாநிலங்களில் 7,362 மதரஸாக் கள் பயனடைந்து அங்கு 16,788 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள் ளதும், 13164.56 லட்சம் நிதி யுதவி வழங்கப்பட்டதும் அறிக் கையாக தரப்பட்டுள்ளது. ஆனால், நான் சார்ந்துள்ள தமிழ்நாட்டிலிருந்து ஒரு மதரஸா கூட பயன்பெறவில்லை என்ப தையும், உயர்கல்விக்காக ஒரு ஆசிரியர்கூட நியமிக்கப் படவில்லை என்பதையும், ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்பதையும் அறிந்ததும் மிகுந்த வேதனையளிக்கிறது.

எனவே, இத்திட்டம் முழுமையாக மதரஸாக்களை சென்றடைய சில ஆலோசனை களை வழங்க விரும்புகிறேன். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மதரஸா வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. அவை அமைக்கப்படுவதற்கு மத்திய அரசு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் கிடைக்கும் நிதியுதவி அனைத்து மாநிலங்க ளையும் சென்றடைய மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனை குழுவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண் டும்.

மதரஸா மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியுத விகள் மாநில அரசு மூலம் இல்லாமல், ஆஸாத் பவுண்டே ஷன் நேரடியாக கல்வித் தொகையை வழங்குவதுபோல், மதரஸாக்களுக்கும் நேரடியாக வழங்க வேண்டும். இதன் மூலம் மாநில அரசின் தலையீடு குறித்த அச்சம் இல்லாமலும், சிரமமும் - காலதாமதமும் ஏற்படாமல் உதவிகள் சென்ற டைய வாய்ப்புகள் ஏற்படும்.

எஸ்பிக்யூஇஎம்(SPQEM) திட்டம் பற்றி அனைத்து மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் உள்ள மதரஸாக்கள் இத் திட்டத்தின் மூலம் உதவி பெற்றால் அரசின் தலையீடு இருக்குமோ என்ற அச்சம் மதரஸா நிர்வாகிகளுக் கும், உலமா பெருமக்களுக்கும் இருக்கிறது. ஆனால், இப்படி அச்சப்படத் தேவையில்லை என்பதை பிற மாநிலங்களின் மதரஸா வாரியத் தலைவர்கள் இங்கே தெளிவுபடுத்தினர். இந்த உண்மையை மதரஸா நிர்வாகிகளுக்கும், உலமா பெருமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை.

மதரஸாக்களில் தொழிற்கல்வி பயிற்றுவிக்கும் வழிவகைகளையும் இத்திட்டத் தில் சேர்க்க வேண்டும். மதர ஸாக்களில் தங்கிப் படிப்பவர்கள் எதிர்காலத்தில் தொழில் நிபுணர் களாகவும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடையக் கூடியவர்களாகவும் ஆவதற்கு இது உறுதுணையாக அமையும்.

மதரஸா கல்வி மேம்பாட் டுக்கான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பகுதி வாரியாக ஆலோசனை கூட் டத்தை நடத்தி இத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வழிகாட்ட வேண்டும். இல்லையெனில், இப்படிப்பட்ட அருமையான திட்டங்கள் பெயரளவில் இருக்குமே தவிர மக்களை சென்றடையாது.

இவ்வாறு கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் குறிப்பிட்டார்.

தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! இ-மெயிலை கண்டுபிடித்தது தமிழ்நாட்டுக்காரன் ..........!


இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் ‘மெயில்’ வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. ‘மெயில்’ என்றால் ‘இமெயில்’ தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.

முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From:”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.

மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அவமதிப்பு:
இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

  ஒரு பத்திரிக்கைக்கு சிவா அய்யாத்துரை தன்னை பற்றி கூறும்போது  ,

"என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.

 நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும்  இருந்தார்.

 எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.


பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.

 இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

 அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.

 தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன் என்று கூறி உள்ளார் .






புதன், 21 நவம்பர், 2012

என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ? - நேனோடெக்னாலஜி


 மருத்துவம், தொழிற் துறைகளில் நேனோடெக்னாலஜி அடுத்த சில ஆண்டுகளில் புரட்சியை உருவாக்கப் போகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

 சூரிய ஒளியிலிருந்து அளவற்ற மின்சாரம் தயாரிப்பதிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட செல்லை சரி செய்திட, பெரிய நீர் நிலைகளை சில நொடிகளில் சுத்தம் செய்திட என்று இதன் பயன்பாட்டைப் பற்றிக் கேட்டால் நம்ப முடியாததாக இருக்கிறது.

இப்படித்தான் கம்ப்யூட்டரைப் பற்றியும் இதன் பயன்பாட்டைப் பற்றியும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். அதுபோலவே விஞ்ஞானத்தின் அடுத்த புரட்சி நேனோடெக்னாலஜி தான் என கருதப்படுகிறது.

குற்றவாளிகளின் டி.என்.ஏவைக் கொண்டு அவர்களை எளிதாக அடையாளம் காணுவது, கெமிக்கல் ஆயுதங்களிடமிருந்து பாதுகாக்கும் ஆடைகளைத் தயாரிப்பது, இது இயற்பியல், வேதியியல், பயோஇன்பர்மேடிக்ஸ், பயோடெக்னாலஜி போன்றவற்றின் மிகச் சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் முறையாக தற்போது அறியப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இதைப் பற்றிய ஆய்வுகள் தொடங்கினாலும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் இத்துறை வேகமாக வளரத் தொடங்கியுள்ளது.

நேனோடெக்னாலஜி தகுதிக்கான வேலைத் துறைகள்:
பார்மாசூடிக்கல், மருத்துவம், விவசாயம், உணவு மற்றும் பானங்கள், சுற்றுச்சூழல் நிறுவனங்கள், அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் ஆய்வு மையங்கள்.கல்வி நிறுவனங்கள், பயோடெக்னாலஜி, ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் மையங்கள் மற்றும் புதிய பொருட்களை வடிவமைப்பது, தொழில் நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளை கிரியேட்டிவாக பயன்படுத்தக்கூடிய மீடியா மற்றும் கம்யூனிகேஷன் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நானோடெக்னாலஜியைப் படித்துத் திறன் பெறுபவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தற்போது இத்துறையில் பட்ட மேற்படிப்புகள் குறிப்பாக எம்.டெக். படிப்பு மட்டுமே தரப்படுகிறது,என்றாலும் விரைவில் பட்டப்படிப்புகளும் சிறப்பு டிப்ளமோ படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றே நம்பலாம்.

இதில் சிறப்புப் படிப்புகளைத் தரும் நிறுவனங்கள்:
Jawaharlal Nehru Center for Advanced Scientific Research, Bangalore
Indian Institute of Science, Bangalore
National Physical Laboratory, Delhi
Solid State Physics Laboratory, Delhi
National Chemical Laboratory, Pune
Central Scientific Instruments Organization, Chandigarh;
Defence Materials Store Research & Development Organizations, kanpur
Indian Institutes of Technology at Kanpur, Chennai, Guwahati, Delhi and Mumbai

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பேரணி


ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும்  இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது.

6வது ஊதிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தை கணக்கிட்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும்.

இடைநிலை, பட்டதாரி, கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது.

சுதந்திரமான பாலஸ்தீனம் என்பதிலும், ஜெருசலம் அதன் தலைநகரம் என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது


பாலஸ்தீன நாட்டின்  காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு இந்தியா தனது கண்டனத்தைத்  தெரிவித்துக் கொண்டுள்ளது.

தில்லியில் புதன்கிழமை இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் வெளியுறவு இணை அமைச்சர் இ.அஹமது ஆகியோர் கூட்டாக இது தொடர்பாகப் பேசியபோது,

இஸ்ரேல் தேவையற்ற வகையில் ராணுவ பலத்தை அதிகமாக பயன்படுத்துகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. காஸா பகுதியில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் விஷயம். பெண்களும், குழந்தைகளும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். எனவே, காஸா பகுதியில் உடனடியாக அமைதியை ஏற்படுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் அளிக்கும்.

சுதந்திரமான பாலஸ்தீனம் என்பதிலும், ஜெருசலம் அதன் தலைநகரம் என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் கூறினர்.

மரண தண்டனையை ஒழிக்கும் ஐ.நா. தீர்மானம்: எதிராக ஓட்டளித்து இந்தியா


மரண தண்டனையை ஒழிப்பது குறித்து ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 110 நாடுகள் ஓட்டளித்துள்ளன. இதி்ல் 36 நாடுகள் ஓட்டளிக்காமல் புறக்கணித்துள்ளது. ஆனால் இந்தியா உள்ளிட்ட 39 நாடுகள் எதிர்த்து ஓட்டளித்துள்ளன.

மரணதண்டனையை முற்றிலும் ஐ.நா.உறுப்புகள் கைவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை கூடும். இந்நிலையில் நேற்று ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் கூடியது. எத்த‌கைய கொடூர குற்றங்கள் செய்திருந்தாலும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு , உச்சபட்ச தண்டனையாக மரணதண்‌டனை வழங்கிடக்கூடாது எனவும் இது போன்ற கொடிய தண்டனையை ஒழிப்பது குறித்த ஐ.நா. குழு வரைவு தீர்மானம் கொண்டு வந்தது. பின்னர் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த ஓட்டெடுப்பில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, பிரேசில், சில ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 110 நாடுகள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என ஆதரவாக ஓட்டளித்தன.. 36 நாடுகள் ஓட்டளிக்காமல் புறக்கணித்தன. ஆனால் இந்தியா, சீனா, வங்கதேசம், ஈரான், ஈராக், ஜப்பான், குவைத்,லிபியா, பாகிஸ்தான், அமெரிக்கா, வடகொரியா, சிரியா, ஜிம்பாப்வே, உள்ளிட்ட 39 நாடுகள் எதிராக ஓட்டளித்துள்ளது. முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு இதே போன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது 107 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.இது குறித்து இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட பதில், மரணதண்டனை விதிக்கும் விவகாரம் இந்தியாவின் சட்டமுறை அதனை எக்காரணம் கொண்டும் எங்களது தனித்தன்மையை
விட்டுக்கொடுக்கமாட்டோம் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த முடிவிற்கு தால்கல்சா என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கிடைத்த நல்லவாய்ப்பினை இந்தியா தவறவிட்டுவிட்டது. பிற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை நல்க வேண்டும் என காரணத்திற்காக இந்த முடிவினை இந்தியா எடுத்துள்ளது.இந்தியாவில் உள்ள பல்வேறு மக்களுரிமை அமைப்புகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆண்டுக்கு 1500 விவாகரத்து வழக்குகள் "பெண்டிங்'


மண வாழ்க்கையில் இணைந்த கணவன் மனைவியை சட்டப்படி பிரிப்பதும், மீண்டும் சேர்த்து வைப்பதும் குடும்ப கோர்ட்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. ஆயிரக்காலத்து பயிர்களை, ஆர்வக் கோளாறு காரணமாக ஆறு மாதத்தில் அறுத்து எரியத் தயாராகி விட்டனர் இளம் வயது ஜோடிகள்.

தாலியுடன் இளம் பெண்களும், ஏக்கப் பார்வையில் ஆண்களும் அதிகமாக காத்துக்கிடக்கும் இடமாக குடும்ப கோர்ட் வளாகம் மாறி விட்டது. காலை முதல் மாலை வரை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளை இங்கு பார்க்கலாம். தொடர்ந்து "வாய்தா'வில் ஓடும் வழக்குகளின் விசாரணை எப்போது முடியும், விவாகரத்து எப்போது கிடைக்கும், புது வாழ்க்கையை எப்போது துவக்கலாம் என திக்குத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் இவர்கள் காத்திருக்கின்றனர்.விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருக்கும் போதே, ஊராருக்கும், கோர்ட்டுக்கும் தெரியாமல், தாலி கட்டி சிலர் குடித்தனம் துவங்கி விட்டனர். இன்னும் சிலர், தாலி கட்டாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிலர் முடிவு தெரியாமல் 10 ஆண்டுகளாகக் கூட கோர்ட்டுக்கு நடையாய் நடக்கின்றனர்.கோர்ட்களில் வழக்குகள் தேங்குவதற்கு, ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், ஜீனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவு செய்வதே இதற்கு காரணமாக உள்ளன.

வழக்குகள் அதிகமாவதால், வாய்தாவுக்கே கோர்ட்டில் நேரம் சரியாக உள்ளது. இதனால் வழக்குகளின் விசாரணை தேதிகள், ஆண்டுக்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு வழக்குகள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. கோவை குடும்ப நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டன.கடந்த நான்கு ஆண்டுகளாக இது தொடர்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1300க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகின.நடப்பு ஆண்டில், கடந்த 10 மாதங்களில் 1,225க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளும், 200க்கும் மேற்பட்ட ஜீவனாம்சம் கேட்பு வழக்குகளும் பதிவாகியுள்ளன.இப்படி ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்திருப்பது சமூகத்தில் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கி உள்ளது.குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற மன உளைச்சலில்,குடும்ப பெரியவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்துள்ளனர்.விவாகரத்து மற்றும் சேர்ந்து வாழக் கோரும் வழக்குகள் குடும்ப கோர்ட் மட்டுமல்லாது, கோவை சட்ட மையத்திலும் நடக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 5 முதல் 7 வழக்குகள் இருதரப்பு சம்மதத்துடன் விசாரிக்கப்படுகின்றன.

இவ்வழக்குகள் அனைத்தும் குடும்ப கோர்ட்டில் இருந்து பெறப்பட்டவையாகும்.தொடர்ந்து அதிகரித்து வரும் வழக்குகளால், விரைந்து வழக்குகளை விசாரிக்கமுடியாமல் கோவை குடும்ப நீதிமன்றம் திணறுகிறது. இதனால் வழக்குகள் முடிய தாமதமாகின்றன. இதை தவிர்க்க, கூடுதலாக ஒரு கோர்ட் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஐகோர்ட் இதற்கான அனுமதி வழங்கியும், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், கோர்ட் கட்டடம் கட்ட இடம் இல்லாததால் நின்று போனது. ஏற்கனவே 2001க்கு முன், கோர்ட்கள் செயல்பட்ட குதிரை வண்டி கோர்ட் வளாகம் தற்போது உபயோகத்தில் இல்லாமல் இருக்கிறது.இந்த வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்ட பல ஆண்டுகளாக திட்டம் இருந்த போதிலும், ஒரு பகுதியில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கலாம் என்ற முடிவும் ஏற்பட்டுள்ளதால், குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் புதிய நீதிமன்றம் அமைக்க வேண்டும் என,கோவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 20 நவம்பர், 2012

7வது நாளாக காசா மீது இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல் : அமெரிக்கா தவிர உலக நாடுகள் கண்டனம்


 7வது நாளாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ராக்கெட் குண்டுகள், வான்வழி துப்பாக்கி சூடு மூலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 111 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். சமீபத்தில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் ஓரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள், பெற்றோருடன் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் ஏவுகனை தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் பள்ளிக் கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளை தவிர உலக நாடுகள் இஸ்ரேலின் அத்துமீறலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐ.நா.சபையில் கண்காணிப்பு உறுப்பினராக பாலஸ்தீன அரசு முயற்சித்து வருகிறது. நவம்பர் 29ல் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அப்படி ஐ.நாவில் கண்காணிப்பு உறுப்பினராக ஆகும் பட்சத்தில், தனது தரப்பு நியாயங்களை பாலஸ்தீன அரசு அறிவிக்க ஒரு வாய்ப்பு அமையும். இது இஸ்ரேலுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாலஸ்தீனம் இஸ்ரேலை எச்சரித்து வருகிறது.

ஊரணிகளை காணவில்லை:கலெக்டரிடம் புகார்

"ராமநாதபுரம் நகராட்சியில் ஊரணிகளை காணவில்லை' என, மக்கள் குறை தீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் வெண்குளம் ராஜூ, கலெக்டர் நந்தகுமாரிடம் அளித்த மனு:ராமநாதபுரம் நகராட்சியில் நீர்நிலைகள் குறித்து, தகவல் உரிமை சட்ட தகவலின்படி, 31 ஊரணிகள் மற்றும் பொது கிணறு பயன்பாட்டில் இருந்தது. தற்போது, ஆக்கிரமிப்பால், மழைநீர் வெளியேற வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.ஐகோர்ட் உத்தரவுபடி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இதன்படி, கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, காணாமல் போன ஊரணிகளை கண்டுபிடித்து, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விசாரித்து நடவடிக்கை எடுக்க, நகராட்சிக்கு கலெக்டர் நந்தகுமார் பரிந்துரைத்தார். நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில், "நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

நூறு சதம் வங்கி சேவை கொண்ட மாவட்டம் கேரளமாநிலம் எர்ணாகுளம்

நாட்டின் முதல், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற பெருமையை, கேரளாவின், எர்ணாகுளம் மாவட்டம் பெற்றுள்ளது.அனைத்து பகுதிகளிலும் வங்கிகள், அனைவருக்கும் வங்கிக்கணக்கு, வங்கிகளில் அதிநவீன சேவைகள் போன்றவற்றின் அடிப்படையில், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 32 லட்சம். வங்கிகளில், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை, 37 லட்சம். இந்த மாவட்டத்தில் மட்டும், 41 வணிக வங்கிகள், தலா ஒரு வட்டார கிராம வங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கியை கொண்டிருக்கும் இந்த மாவட்டத்தில் வங்கிப் பயன்பாடும் அதிகம்.இந்த பெருமைகளின் அடிப்படையில், நாட்டின் முதல், நூறு சதவீத வங்கி சேவை மாவட்டம் என்ற பெருமையை, எர்ணாகுளம் பெற்றுள்ளது.

இதற்கான விழா, நாளை மறுநாள், 22ல், எர்ணாகுளத்தில் நடக்கிறது.அதில், ரிசர்வ் வங்கி கவர்னர், சுப்பா ராவ், முதல்வர், உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர், கே.வி.தாமஸ், "ஆதார்' அடையாள அட்டை அமைப்பின் தலைவர், நந்தன் நிலேகனி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

திங்கள், 19 நவம்பர், 2012

கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரட்டை வேடம்


சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

இதற்கு இடதுசாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கொணடு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கமாட்டோம். மம்தா கொண்டு வரும் அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டால், அது மத்திய அரசுக்கு ஆதரவாகவே முடியும்.

அதேசமயம் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம். நேரடி அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிப் பாடங்கள் உருவாக்கும் குழுவில் முஸ்லிம்களுக்கு இடம் வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநிலத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்முகைதீன் கூறியதாவது:டிசம்பர் 1, 2 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் முஸ்லிம்லீக் கட்சியின் அகில இந்திய கவுன்சில் கூட்டம் நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 400 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பர். அடுத்த 4 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு, பார்லிமென்ட் தேர்தல் அணுகுமுறை, வட மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது, இளைஞர் அணி தேசிய மாநாடு நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
தென், வட மாவட்டங்களில் தேவர், வன்னியர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே மோதல் நடப்பது வருந்தத்தக்கது. இப்பிரச்னையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி ஜாதி மோதலுக்கு தீனி போடக்கூடாது. கட்சித்தலைவர்கள் ஒருவரையொருர் குற்றம் சாட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
தென் மாவட்டங்களில் முன்பு ஜாதி மோதல் நடந்த போது அமைக்கப்பட்ட ரத்தினவேல் பாண்டியன் கமிஷன் அளித்த பரிந்துரைகள் இதுவரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. தென் மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்களை துவக்க வேண்டும். சேது சமுத்திரத்திட்டத்தை விரைவுபடுத்தினால் தென் மாவட்டங்களில் தொழில்வளம் பெருகும்.நான்குநேரி உயர் தொழில்நுட்பப்பூங்கா அமைப்புப்பணியை மேற்கொண்டால் பலருக்கு வேலை கிடைக்கும்.

ஒரே இடத்தில் பல்வேறு தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றும் போது சமூக நல்லிணக்கம் ஏற்படும்.தொடர்ந்து ஜாதிமோதல்கள் நடப்பதை பார்க்கும் போது சங்கத்தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை யாரும் பின்பற்றுவதில்லை என எண்ணத்தோன்றுகிறது. திருக்குறள், திருமூலர், வள்ளலாரின் பாடல்களை படித்து பின்பற்றினால் எங்கும் மோதல்கள் நடக்காது. டிசம்பரில் சமூக நல்லிணக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு அளிக்க வேண்டிய நிதிஒதுக்கீட்டை அளிக்க தமிழக அரசு காலதாமதம் செய்வதாக மதுரை வணிகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள ரயில்வே திட்டங்கள், பால அமைப்புப்பணிகளுக்கு உரிய நிதிஒதுக்கீட்டை அளித்து பணிகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட 9ம் வகுப்பு புத்தகத்தில் நாடார் மக்கள் குறித்தும், 6ம் வகுப்பு புத்தகத்தில் இறைச்சி உணவு குறித்தும் தவறான, தேவையற்ற கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களை தயாரிக்கும் குழுவில்  முஸ்லிம்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது.தமிழகத்தில் மின்தடையால் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன.

திமுக ஆட்சியில் துவக்கப்பட்ட மின்உற்பத்தி திட்டங்கள், பிற புதிய திட்டங்களை விரைவுபடுத்தி அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்விநியோகம் சீர்செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியை போல வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு திமுக தடையாக இல்லை.மத்திய அரசிடம் உபரி மின்சாரத்தை கேட்டு பெறுவதில் சில நடைமுறைகள் உள்ளன. அதை பின்பற்றாமல் மின்பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசை தாக்கும் ஆயுதமாக பயன்படுத்துகிறார் முதல்வர்.மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. மத்திய அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு விவகாரத்தில் சாதகமும், பாதகமும் உள்ளது. இதில் மத்திய அரசு நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு உள்ளது. பிற மதத்தில் இருந்து முஸ்லிமாக மாறுபவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதர்முகைதீன் தெரிவித்தார்.

மாநில பொதுச்செயலாளர் முகமதுஅபுபக்கர், பொருளாளர் ஷாஜகான், நிர்வாகிகள் கோதர்மைதீன், வடக்கு கோட்டையார் செய்யதுமுகமது, கமுதிபஷீர், நிஜாமுதீன், நெல்லை மஜீத், மாவட்டத்தலைவர் துராப்ஷா, செயலாளர் மீரான்முகைதீன் உடன் இருந்தனர்.

மேலப்பாளையத்தில் மின்வெட்டை கண்டித்து ஐ.யு.எம்.எல் ஆர்ப்பாட்டம்


தமிழகத்தில்  செய்யப்படும் மின்வெட்டை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் மின்வெட்டு செய்யப்படும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். நள்ளிரவில் அடிக்கடி நிலவும் மின்வெட்டு செய்யும் மின்வாரியத்தை கண்டிப்பது, மாநகரத்தில் கொசுத்தொல்லையை போக்க அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கவேண்டும். ரோட்டோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகளை மாநகர நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மேலப்பாளையம் நகர தலைவர் நாகூர் கனி தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் காஜா முகைதீன், மில்லத் காஜா முகைதீன், லெப்பை முன்னிலை வகித்தனர். செயலாளர் முகைதீன் அப்துல் காதர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கையை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர் மாவட்ட செயலாளர் மீரான் மைதீன், துணை தலைவர்கள் சாகுல் ஹமீது, மைதீன் பிச்சை, அப்துல் ரகுமான் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

அந்தோ பரிதாபம் !,முடங்கிய அரசு நல வாரியம் .....!


தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்புக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நேற்று நடந்தது.
மாநில நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள், கோரிக்கைகள், நல திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு, "கோவை மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலவாழ்வு சங்கம்' ஏற்பாடு செய்திருந்தது. மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார்; பொதுச்செயலாளர் சிம்மசந்திரன் முன்னிலை வகித்தார்."மாற்றுத்திறனாளிகள் சமூக நல பாதுகாப்பு திட்டங்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நலவாரியம் செயல்படாமல் உள்ளது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் விதத்தில், நலவாரியத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய மாநில கொள்கையை அரசு வெளியிட வேண்டும் ' என, வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில், அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இடஒதுக்கீடு சரியாக அனுமதிக்கப்படாததால், படித்து, பதிவு செய்து வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் பல துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அரசு முறையான செயல் திட்டங்கள் வகுத்து வேலைவாய்ப்பு பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதில் மத்திய அரசு பின்பற்றும் விதிமுறைகளை தமிழக அரசும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். தனியார் துறையில் ஐந்து சதவீத வேலைவாய்ப்பு கிடைக்க அரசாணை வெளியிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித்திட்டத்தில் பயனாளிகளாக காத்திருக்கும் 3,365 பேருக்கு இத்திட்டத்தில் பயன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம் வருமான உச்சவரம்பின்றி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அளிக்க வேண்டும்.
சுயதொழில் செய்ய கடனுதவி பெறுவதற்கு அரசு, எட்டு கோடி ரூபாய் ஒதுக்கியும் கூட்டுறவு வங்கிகள் எளிதான நடைமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் குறைந்த வட்டியில் கடன்பெற முடியாத நிலை உள்ளது. வங்கிகள் எளிய முறையில் கடனுதவி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மானியத்தில் அளிக்கப்படும் கடன் திட்டங்களுக்கு எவ்வித பிணையமின்றி கடன் கிடைக்க அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.வருவாய்த்துறை மூலம் வழங்கும் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 1,000 ரூபாய் பெறுவதற்கு வருமான உச்சவரம்பை விலக்கி, ஊனத்தின் தன்மையை மட்டும் வைத்து ஓய்வூதியம் அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான திட்டங்களை முறையாக நிறைவேற்ற, மாவட்ட கலெக்டர் தலைமையில், மாற்றுத்திறனாகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநில பொரு ளாளர் சந்திரகுமார், கோவை மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நல்வாழ்வு சங்கத் தலைவர் கன்னியப்பன், செயலாளர் ஷேக் பரீதுல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பலஸ்தீன அதிபர் யாசர் அரபாத் உடல் தோண்டி எடுக்கும் பணி ஆரம்பம்


பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று வதந்தி பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, சில மாதங்களுக்கு முன்னர் அராபத் அணிந்திருந்த உடைகளை ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து ஆய்வகம், அவரது உடையில் கடுமையான 'போலோனியம்-210' என்ற 'ஐசோடோப்' கண்டறியப்பட்டதாக கூறியது.

இதனைத் தொடர்ந்து அராபத்தின் உடலில் இந்த நச்சுத்தன்மை செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக  பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியாவை சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். ரமல்லா நகரின் மேற்கு கரையில் உள்ள அராபத்தின் இல்லத்தில் உள்ள கல்லறை இன்று உடைக்கப்படுகின்றது.

கான்கிரீட்டினால் கட்டப்பட்ட இந்த கல்லறையை முழுமையாக உடைத்து, அராபத்தின் உடலை வெளியே எடுக்கும் பணி 2 வாரத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அராபத்தின் கல்லறை இடிக்கப்படும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலை தோண்டி எடுப்பது தெரியவந்தால், ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவிதங்களில் ஈடுபடக் கூடும் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஊதுபத்தி தொழிலில் பெருகும் வணிக வாய்ப்பு


பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -  ஊதுபத்திக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு பெருகியுள்ளது.அதுமட்டுமின்றி, ஐ.டி.சி போன்ற பெரிய நிறுவனங்களும், ஊதுபத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.இதனால், இந்நிறுவனங்களுக்கு, ஊதுபத்திகளை தயாரித்து தரும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.இந்தியாவில் ஊதுபத்தி சந்தையின் மதிப்பு, 3,000 கோடி ரூபாயாக உள்ளது. இதில், அமைப்பு சாரா நிறுவனங்கள், பெரும்பான்மை பங்களிப்பை கொண்டுள்ளன.அமைப்பு சார்ந்த பிரிவில், ஐ.டி.சி., நிறுவனத்தின் பங்களிப்பு 7-8 சதவீதமாக உள்ளது.இந்நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் ஊதுபத்திகளில் ஒன்றான, "மங்கள்தீப்' பிராண்டு ஊதுபத்திகளை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகிறது.இந்திய ஊதுபத்தி சந்தையின் ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி,12-13 சதவீதமாக உள்ளது."இதை விட, ஐ.டி.சி., ஊதுபத்தி பிரிவின் வளர்ச்சி, மும்மடங்காக உள்ளது' என, இப்பிரிவின் தலைமை செயல் அதிகாரி வி.எம்.ராஜசேகரன் தெரிவித்தார்.ஐ.டி.சி., நிறுவனம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 20 சிறிய நிறுவனங்களிடம் இருந்து ஊதுபத்திகளை தயாரித்து பெற்றுக் கொள்கிறது.இந்நிறுவனங்கள், மாதம், 70 கோடி ஊதுபத்திகளை, ஐ.டி.சி.,க்கு வழங்கி வருகின்றன. தற்போது, மேலும் 5-10 புதிய நிறுவனங்களிடம் இருந்து ஊதுபத்திகளை தயாரித்து, பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என, ராஜசேகரன் மேலும் கூறினார்.

எனினும், ஊதுபத்தி தயாரிப்பில் ஐ.டி.சி., கடுமையான தரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன.ஐ.டி.சி.,க்கு ஊதுபத்திகளை தயாரித்து வழங்கும் சிறு நிறுவனங்களில், ஆறு நிறுவனங்கள், சிறந்த தரத்திற்கான ஐ.எஸ்.ஓ. 9001-2000 தரச் சான்றிதழை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.மகளிர் சுயஉதவி குழுஇந்த வகையில், ஐ.டி.சி., ஊதுபத்தி பிரிவின் வாயிலாக, மகளிர் சுயஉதவிக் குழுவினர், சிறு தொழில் முனைவோர் என, சமூகத்தில் பின்தங்கியுள்ள, 13 ஆயிரம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.கிராமப்புற மக்களின் நிலையான வாழ்வாதாரத்திற்கு வகை செய்யும் விதத்தில், ஒடிசா, திரிபுரா, அசாம் போன்ற மாநில அரசுகளுடன், ஐ.டி.சி., ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது.நிலையான வருவாய் அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்படும் கூட்டுறவு சங்கங்களில், ஏராளமான ஊதுபத்தி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.வேளாண் தொழில் சார்ந்த, பின்தங்கிய ஊரகப் பகுதிகளில், விவசாய பொருட்களின் உற்பத் தியும், அது சார்ந்த வருவாயும் குறைந்து வரும் சூழலில், நிலையான வருவாய்க்கான தளத்தை உடனடியாக அமைப்பது அவசியம். அதற்கு, ஐ.டி.சி.,யின் ஊதுபத்தி பிரிவு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது என, ராஜசேகரன் மேலும் கூறினார்.

கனடாவில் படிக்கலாம் வாங்க ..............!


கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், தாங்கள் படிக்கவிரும்பும் பல்கலையுடன் நேரடியாக தொடர்புகொண்டு விபரங்களைக் கேட்டறிதல் வேண்டும். ஏனெனில், அங்கு, ஒவ்வொரு பல்கலைக்கும் ஒவ்வொரு தனி விதிமுறைகள் மற்றும் கோட்பாடுகள் உண்டு.

Study permit -க்கு விண்ணப்பிக்க, ஒரு பல்கலை அல்லது கல்லூரியின் ஏற்புக் கடிதத்தை(letter of acceptance) நீங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும், IELTS சான்றிதழும் உங்களுக்கு வேண்டும்.

கல்விச் செலவு
கனடாவில், இளநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான தோராயச் செலவு 17,000 முதல் 44,000 கனடா டாலர்கள் வரை ஆகிறது. இதன் விபரம்,

டியூஷன் மற்றும் மாணவர் கட்டணம் - 5,500 முதல் 26,000 கனடா டாலர்கள்

உணவு மற்றும் தங்குமிடச் செலவு - 7,000 முதல் 13,000 கனடா டாலர்கள்

தனிப்பட்ட மற்றும் மருத்துவக் காப்பீட்டு செலவு - 1,000 முதல் 3,000 கனடா டாலர்கள்

பாடப் புத்தகங்கள் - 1,000 முதல் 2,000 கனடா டாலர்கள்.

படிப்பிற்கான காலஅளவு
பொதுவாக, கனடாவில், முழுநேர இளநிலைப் படிப்புகள் 4 வருடங்கள் கொண்டவை. LLB படிப்புகள் 3 வருட காலஅளவைக் கொண்டதாக இருந்தாலும், அதில் சேர, ஏற்கனவே 3 வருடங்கள் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை, 4 வருட காலஅளவைக் கொண்டவை. அதேசமயம், கனடாவின் மருத்துவ கல்வி நிலையங்களில் சேர, ஏற்கனவே 3 வருட இளநிலைப் படிப்பு அனுபவம் இருக்க வேண்டும்.

முதுநிலைப் படிப்புகளுக்கு, 1 முதல் 3 வருடங்களும், டாக்டரேட் படிப்புகளுக்கு 3 முதல் அதற்கும் மேற்பட்ட வருடங்களும் ஆகும்.

உதவித்தொகை
கனடாவின் பல பல்கலைகள் மற்றும் கல்லூரிகள், சேர்க்கை நேரத்தில், ஒரு மாணவரின் மெரிட் அடிப்படையில், உதவித்தொகைகளை வழங்குகின்றன. வெளிநாட்டு மாணவர்களுக்கென்றே சில உதவித்தொகை திட்டங்கள் உள்ளன.

இதுபோன்ற உதவித்தொகைகளைப் பெற, ஒரு மாணவரின் Extra curricular activities பற்றி பட்டியலிட்ட தனி விண்ணப்பங்கள் தேவை. இதைப்பற்றி அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் வலைத்தளம் அல்லது நிர்வாகிகளை அணுக வேண்டும்.

வேலை வாய்ப்புகள்
பல வெளிநாட்டு மாணவர்கள், தங்களின் படிப்பின்போதும், படிப்பு முடிந்த பின்பும், கனடாவில் பணிபுரிகின்றனர். ஒரு மாணவர், வளாகத்திற்குள்ளேயே பணிசெய்ய, work permit தேவையில்லை. அதேசமயம், படிப்பு முடிந்தப் பிறகோ, வளாகத்திற்கு வெளியேயோ அல்லது co-op/internship placement முறையிலேயோ பணிபுரிய வேண்டுமெனில் work permit அவசியம்.

விசா விதிமுறைகள்
விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன்பாக, ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலையிடமிருந்து பெற்ற ஏற்புக் கடிதம், செல்லத்தக்க பாஸ்போர்ட், தேவையான நிதியாதார ஆவணங்கள் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.

விசா விண்ணப்பக் கட்டணமாக 125 கனடா டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பின்படி ரூ.5470. மேலும் ப்ராசஸிங் கட்டணமாக ரூ.700 வசூலிக்கப்படுகிறது.

முதல்கட்ட ரெஸ்பான்ஸ் பெற்றபிறகு, மருத்துவ ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.