தில்லியில் புதன்கிழமை இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் வெளியுறவு இணை அமைச்சர் இ.அஹமது ஆகியோர் கூட்டாக இது தொடர்பாகப் பேசியபோது,
இஸ்ரேல் தேவையற்ற வகையில் ராணுவ பலத்தை அதிகமாக பயன்படுத்துகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. காஸா பகுதியில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இது கவலை அளிக்கும் விஷயம். பெண்களும், குழந்தைகளும் அதிகமாக உயிரிழந்துள்ளனர். எனவே, காஸா பகுதியில் உடனடியாக அமைதியை ஏற்படுத்த வேண்டும். இதற்கான முயற்சிகளுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் அளிக்கும்.
சுதந்திரமான பாலஸ்தீனம் என்பதிலும், ஜெருசலம் அதன் தலைநகரம் என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக