மரண தண்டனையை ஒழிப்பது குறித்து ஐ.நா. கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 110 நாடுகள் ஓட்டளித்துள்ளன. இதி்ல் 36 நாடுகள் ஓட்டளிக்காமல் புறக்கணித்துள்ளது. ஆனால் இந்தியா உள்ளிட்ட 39 நாடுகள் எதிர்த்து ஓட்டளித்துள்ளன.
மரணதண்டனையை முற்றிலும் ஐ.நா.உறுப்புகள் கைவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஓரு முறை கூடும். இந்நிலையில் நேற்று ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் கூடியது. எத்தகைய கொடூர குற்றங்கள் செய்திருந்தாலும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு , உச்சபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கிடக்கூடாது எனவும் இது போன்ற கொடிய தண்டனையை ஒழிப்பது குறித்த ஐ.நா. குழு வரைவு தீர்மானம் கொண்டு வந்தது. பின்னர் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது.
இந்த ஓட்டெடுப்பில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, பிரேசில், சில ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட 110 நாடுகள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என ஆதரவாக ஓட்டளித்தன.. 36 நாடுகள் ஓட்டளிக்காமல் புறக்கணித்தன. ஆனால் இந்தியா, சீனா, வங்கதேசம், ஈரான், ஈராக், ஜப்பான், குவைத்,லிபியா, பாகிஸ்தான், அமெரிக்கா, வடகொரியா, சிரியா, ஜிம்பாப்வே, உள்ளிட்ட 39 நாடுகள் எதிராக ஓட்டளித்துள்ளது. முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு இதே போன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது 107 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.இது குறித்து இந்தியா தரப்பில் அளிக்கப்பட்ட பதில், மரணதண்டனை விதிக்கும் விவகாரம் இந்தியாவின் சட்டமுறை அதனை எக்காரணம் கொண்டும் எங்களது தனித்தன்மையை
விட்டுக்கொடுக்கமாட்டோம் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த முடிவிற்கு தால்கல்சா என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கிடைத்த நல்லவாய்ப்பினை இந்தியா தவறவிட்டுவிட்டது. பிற நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை நல்க வேண்டும் என காரணத்திற்காக இந்த முடிவினை இந்தியா எடுத்துள்ளது.இந்தியாவில் உள்ள பல்வேறு மக்களுரிமை அமைப்புகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக