தமிழகத்தில் மின்வெட்டு செய்யப்படும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். நள்ளிரவில் அடிக்கடி நிலவும் மின்வெட்டு செய்யும் மின்வாரியத்தை கண்டிப்பது, மாநகரத்தில் கொசுத்தொல்லையை போக்க அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கவேண்டும். ரோட்டோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகளை மாநகர நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மேலப்பாளையம் நகர தலைவர் நாகூர் கனி தலைமை வகித்தார். துணை செயலாளர்கள் காஜா முகைதீன், மில்லத் காஜா முகைதீன், லெப்பை முன்னிலை வகித்தனர். செயலாளர் முகைதீன் அப்துல் காதர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கையை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர் மாவட்ட செயலாளர் மீரான் மைதீன், துணை தலைவர்கள் சாகுல் ஹமீது, மைதீன் பிச்சை, அப்துல் ரகுமான் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக