Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் முதலிரவு முடிந்ததும் மர்மமாக இறந்த புதுமாப்பிள்ளை


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தையா. இவரது மகன் பெரியசாமி (வயது 28). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மாதம் ஊருக்கு வந்தார். இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது.

பெங்களூரை சேர்ந்த அன்னியப்பன் மகள் திலகேஸ்வரி(21) என்பவரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. பெரியசாமி-திலகேஸ்வரி திருமணம் நேற்று  கடையநல்லூரில் நடைபெற்றது. முதலிரவு நடந்து முடிந்த நிலையில் மாப்பிள்ளை பெரியசாமி இன்று காலை மர்மமான முறையில் இறந்தார்.

வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்த அவரை உறவினர்கள்  கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணமான மறுநாளே மாப்பிள்ளை இறந்ததால் புதுப்பெண் திலகேஸ்வரி அதிர்ச்சியடைந்தார். திருமணவீடு சோகத்தை மூழ்கியுள்ளது. மாப்பிள்ளை பெரியசாமி சாவுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. வலிப்பு நோயால் இறந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

'அமைதிக்கான அணுசக்தி திட்டங்களை விட்டுக்கொடுக்க முடியாது'அணிசேர நாடுகள் மாநாட்டில் ஈரான் தலைவர் ஆயதுல்லா பேச்சு


"அமைதிக்கான அணுசக்தி திட்டங்களை, ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது,'' என, ஈரான் தலைவர் ஆயதுல்லா  தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில், அணி சேரா நாடுகளின் மாநாடு, நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், உட்பட 50க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


ஈரான் நாட்டின் ஆன்மீகத்  தலைவர் ஆயதுல்லா , இந்த மாநாட்டில் பேசியதாவது:அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதும் எங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டப் பணிகளை, ஒரு போதும் கைவிட முடியாது. அணு ஆயுதங்களை பெற்றிருக்கக்கூடிய மேற்கத்திய நாடுகள், உண்மையில் தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க மனமில்லை. மாறாக, எங்கள் நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளை திணித்து வருகின்றன.

"அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது' என்று சொல்பவர்கள், அணு எரிபொருள் சப்ளை செய்வதை தங்கள் வசம் வைத்துக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கிறார்கள். அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதை நாங்கள் பாவமாக கருதுகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில், அணு ஆயுதமே இருக்கக்கூடாது, என்ற திட்டத்தை வற்புறுத்துகிறோம். அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு.இவ்வாறு ஆயதுல்லா  பேசினார்.


ஈரான் அதிபர் அகமது நிஜாத் குறிப்பிடுகையில், "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில், அமெரிக்கா, அமைப்பு ரீதியான முறையில் மக்களை கொன்று குவித்து வருகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் "வீட்டோ' அதிகாரம் பெற்ற நாடுகளுக்கு சாதகமாக தான் நடக்கிறது' என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பேசுகையில், "பலதரபட்ட சமுதாய மக்கள் ஒன்றிணைந்து வாழும் ஜனநாயக நடைமுறையை, இந்தியா ஆதரிக்கிறது. சிரியா போன்ற நாடுகளில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடக்கிறது. இதுபோன்ற கிளர்ச்சி, வெளியிலிருந்து தூண்டப்படக் கூடாது. இதனால், உள்ளூர் மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், சிரியா நாட்டு விஷயத்தில் பின்பற்றப்பட வேண்டும்' என்றார்.


செங்கோட்டையில் பலத்த மழை: குண்டாறு அணை நிரம்புகிறது

செங்கோட்டை பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தென்காசி பகுதிகளான இலஞ்சி, பாவூர்சத்திரம், மேலகரம்மற்றும் செங்கோட்டை பகுதிகளான புளியரை, தெற்குமேடு, கட்டளைகுடியிருப்பு, சுப்பிரமணியபுரம், வல்லம், பிரானூர் பார்டர் ஆகிய பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. 

இந்த மழையின் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குண்டாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - வனவிலங்கு பாதுகாப்பு படிப்பு (LIFE SCIENCE )


வனவிலங்குகளின் வாழ்வைப் பற்றிய அடிப்படை புரிதலை Life Sciences பாடம் வழங்குகிறது. அதேசமயம், கால்நடை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புகள், வனவிலங்கு பாதுகாப்பில் துணை செய்கின்றன. பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களைப் படித்தப் பிறகு, இளநிலைப் படிப்பில், விலங்கியல், தாவரவியல், வனவளம், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை அறிவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படிப்பது, இத்துறையில் நுழைவதற்கான ஒரு ஆரம்பம்.

பூகோள தகவல் அமைப்புகள், ரிமோட் சென்சிங் மற்றும் புள்ளியியல் போன்றவை, மிருகங்களை கண்காணித்தல் மற்றும் கணக்கெடுத்தல் போன்ற பணிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் நவீன அம்சங்களாக திகழ்கின்றன. The wildlife institute of Inida(WII), National centre of biological sciences(NCBS) போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலை போன்ற சில முக்கிய பல்கலைகள், வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன. இந்தப் படிப்புகள் Landscape ecology, Remote sensing and Conservation genetics போன்ற தொழில்நுட்பங்களை இணைக்க முயல்கின்றன.

NCBS கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் M.Sc in wildlife biology and conservation என்ற படிப்பானது, பெங்களூர் வனவிலங்கு படிப்புகளுக்கான மையத்தின்(CWS) கூட்டிணைவோடு வழங்கப்படுகிறது மற்றும் பட்டமானது, அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா கல்வி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மேலும், பெங்களூரிலுள்ள Ashoka trust for research in ecology and the environment, Nature conservation foundation and National institute of advanced studies போன்ற கல்வி நிறுவனங்களும், இத்துறை தொடர்பான படிப்புகளை வழங்கி வருகின்றன.


தகுதிகள் மற்றும் சேர்க்கை
NCBS கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையானது, தேசிய அளவிலான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் நடைபெறுகிறது. பலவிதமான படிப்பு பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை சேர்ப்பதும் ஊக்குவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களோடு, ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், இறுதியாண்டு படிப்பவர்கள் ஆகியோர், இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

WII கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கை சற்று மாறுபட்டது. உயிரி அறிவியலை முக்கிய பாடமாக வைத்து, பி.எஸ்சி முடித்தவர்கள் அல்லது கால்நடை அறிவியல், வனவளம், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NCBS -ஐ பொறுத்தவரை, 2 வருடங்களுக்கு ஒருமுறையே அந்தப் படிப்பு வழங்கப்படுகிறது மற்றும் சேர்க்கைக்கான விளம்பரம், படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடுகிறது. மேலும், மாதம் ரூ.10,000 உதவித்தொகையும் NCBS மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்குமிட வசதியும் உண்டு.

இத்துறையில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதும் சுவாரஸ்யமான ஒன்று. இதன்மூலம் ஒருவரின் அறிவு விரிவடைவதுடன், பலவிதமான வாய்ப்புகளையும் ஒருவர் பெற முடியும். நமக்கு விருப்பமான தலைப்பில் பி.எச்டி செய்வதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.


பணிநிலைகள் மற்றும் துறைகள்
வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் நுழைய பலவிதமான வழிகள் உள்ளன. இங்கே அவை, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு ஜர்னலிசம் மற்றும் டூரிஸம்
வனவிலங்கு ஜர்னலிசம், இயற்கை போட்டோகிராபி அல்லது டாகுமென்டரிகளை தயாரிக்கும் அதிகளவு நபர்களை இந்தப் பிரிவு ஈர்க்கிறது. மீடியா திறனிற்கு அப்பாற்பட்டு, வனவிலங்கு தொடர்பான அம்சங்களை ஆராய்வதற்கான அறிவு மற்றும் ஆர்வத்தை இத்துறை கோருகிறது. மீடியாவைப் போலவே, வனவிலங்கு டூரிஸமானது, பல இயற்கை ஆர்வலர்களுக்கு தங்களின் விருப்பத்தையும், தொழிலையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

கார்பரேட் சமூக பொறுப்பு(சி.எஸ்.ஆர்/என்.ஜி.ஓ)
அழிந்துவரும் விலங்கினங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், என்.ஜி.ஓ -க்கள் பலவிதமான பணிகளை ஆற்றி வருகின்றன. எனவே, ஆராய்ச்சியாளர்கள், களப் பணியாளர்கள், மீடியா நபர்கள், Outreach பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு மற்றும் நுண்ணறிவு நெட்வொர்க் நிபுணர்கள் போன்ற பல பணி நிலைகளில் என்.ஜி.ஓ -க்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், வன அருகாமையிலுள்ள சில பாரம்பரிய வேட்டை சமூகத்திடமிருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை, வேட்டைக்கெதிராக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


ஆராய்ச்சிப் பணி:அரசுகள், என்.ஜி.ஓ -க்கள், WII, NCBS, ATREE, NCF போன்றவை, வனவிலங்குகள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. வனவிலங்கு அறிவியல் துறையில் முதுநிலைப் படிப்பை முடித்தப்பின்னர், மேற்கூறிய நிறுவனங்களில், பி.எச்டி மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுவதுடன், Wildlife biologist மற்றும் Research associates போன்ற பணி வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
அரசுப் பணிகள்:தேசிய பூங்காக்கள், புலிகள் சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்றவும், நிர்வகிக்கவும், மத்திய - மாநில அரசுகள், அலுவலர்களை நியமிக்கின்றன. இந்த அலுவலர்கள் பின்னாளில், வனவளம், வனவிலங்கு மற்றும் நில மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி பெறுகிறார்கள். ஒரு பட்டதாரி, இதுபோன்ற பணிகளில் இணைந்து, வனவிலங்கு பற்றிய தனது திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் சில அரசுத்துறை பணியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். "கன்சர்வேஷன் பயாலஜிஸ்ட் போன்ற ஒரு சில பணிவாய்ப்புகளே அரசுத்துறைகளில் உள்ளன. இதன்மூலம், வனவிலங்கு அறிவியலில் பயிற்சிபெறும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் சுருங்கி காணப்படுகின்றன.
சுற்றுச்சூழல் சட்டம்:வனவிலங்கு மற்றும் வனங்களைப் பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள், அதன்பொருட்டு தங்களின் சட்ட அறிவைப் பயன்படுத்தி சாதிக்கலாம். ஆனால் அதேசமயம், நீதிமன்றங்களில் வாதாட, சட்டப் படிப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:இத்துறையில் முதுநிலைப் படிப்பை முடித்து என்.ஜி.ஓ -வில் பணிக்கு சேரும் ஒருவர் ஆரம்பத்தில் ரூ.15000 முதல் 20000 வரை பெற முடியும். GIS நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அவரவர் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ற ஊதியத்தைப் பெறலாம். வனம் தொடர்பான பல பணிகளை சிவில் சர்வீஸ் தேர்வுகளின் மூலம் பெறலாம்.
பல ஆர்வலர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து நல்ல வாய்ப்புகளை பெறுகிறார்கள். WII, NCBS போன்ற கல்வி நிறுவனங்கள், முதுநிலை மற்றும் பி.எச்டி பட்டங்களைப் பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகின்றன.
தேவைப்படும் பண்புக்கூறுகள்:இத்துறையில் ஈடுபடுவோர், வனவாழ்க்கைத் தொடர்பான சமூக, சுற்றுப்புற மற்றும் பொருளாதார காரணிகளைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு, சிறந்த தகவல்தொடர்பு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்கள் இருக்க வேண்டும். அதேசமயம், தங்களின் பணி தொடர்பான உயரிய லட்சியத்தை, அவர்கள் எப்போதும் விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதே இங்கு முக்கியம். அதுவே, உங்களுக்கான ஆத்ம திருப்தி!

புதன், 29 ஆகஸ்ட், 2012

இளைய தலைமுறையே! நம் சமுதாயத் தந்தையின் வாழ்க்கையை அறிந்துகொள் !


பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.
குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க  போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.
அவருக்கு ஒரு காரை வாங்கித் தரப் பலரும் முயன்றனர். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு முறை மலேசியா சென்று ஒரு அன்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, அவர் காயிதே மில்லத்திடம் ஒரு உதவி கேட்டார். “ஐயா என்னிடம் வெளிநாட்டுக் கார் உள்ளது. அதைத் தங்கள் வீட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். நான் சென்னை வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த உதவியைக் கோருகிறேன்” என்றார். அதற்கு என் வீட்டில் கார் கொட்டகை இல்லையே என்றார் காயிதே மில்லத். “கார் கொட்டகையை நான் கட்டித் தருகிறேன்” என்றார் மலேசிய அன்பர். நேரடியாக காரை பரிசளித்தால் காயிதே மில்லத் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவார் என்பதற்காகவே அவர் சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட காயிதே மில்லத் கண்டிப்புடன் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டார்.
கேரளாவில் ஒருமுறை அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒரு காரை வாங்கி சாவியை காயிதே மில்லத் அவர்களின் கையிலேயே கொடுத்து விட்டார்கள். ஆனால் காயிதே மில்லத் அங்குள்ள இஸ்லாமிய கல்லூரி ஒன்றின் உபயோகத்திற்கு அந்தக் காரை அங்கேயே கொடுத்து விட்டார்.
ஒருமுறை கட்சி அலுவலகத்துக்கு வந்த காயிதே மில்லத் அவர்கள் அங்கிருந்த அலுவலகப் பொறுப்பாளரிடம் ஒரு உறையைக் கொடுத்து பையில் இருந்து இரண்டு அணாவையும் கொடுத்து உரிய தபால் தலைகளை ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுமாறு கூறி இருக்கிறார். உடனே அலுவலகப் பொறுப்பாளர் இதனை அலுவலகச் செலவிலேயே அனுப்பலாமே எனக் கேட்டிருக்கிறார். அதற்கு காயிதே மில்லத் அவர்கள் இது எனது சகோதரருக்கு எழுதுகின்ற கடிதமாகையால் அலுவலகப் பணத்தை இதற்கு செலவழிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்.  அலுவலகப் பொறுப்பாளர் உடனே, தலைவரின் சகோதரரும் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்தானே, எனவே கட்சிப் பணத்தை செலவு செய்வதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கிறார். உடனே காயிதே மில்லத் அவர்கள், இந்தக் கடிதத்தில் நான் கட்சி விஷயங்களை எழுதவில்லை. குடும்ப விஷயங்களை எழுதி இருக்கிறேன். எனவே கட்சிப் பணத்தை இதற்குச் செலவழிக்கக் கூடாது. நான் கொடுத்த இரண்டானாவை அஞ்சல் தலைகளை ஒட்டி அனுப்பி விடுங்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டார்.
இதுபோல்  காயிதே மில்லத் அவர்களின் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள். நபிகள் நாயகத்துக்குப் பின் வந்த நான்கு கலிபாக்கள் வாழ்ந்து காட்டிய நேர்மையான எளிமையான வாழ்க்கையை தானும் வாழ முயன்று வெற்றி கண்டவர் காயிதே மில்லத் அவர்கள்.
காயித் என்றால் வழிகாட்டி. சாயிக் என்றாலும் அரபியில் வழிகாட்டிதான். ஒட்டகத்தின் முதுகில் ஏறி அதை வழி நடத்துபவனுக்குப் பெயர் சாயிக். ஆனால் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிற்றைத் தன் கையிலே பற்றிக் கொண்டு, தான் முன்னால் நடந்து, பாதையில் உள்ள கரடு முரடுகளில் ஒட்டகத்தின் கால் இடறி விடாமல் அதை வழிநடத்துபவருக்குப் பெயர்தான் காயித். இன்று அரசியலில் சாயிக்குகளுக்குப் பஞ்சமே இல்லை. காயிதே  களுக்குத்தான் பஞ்சம் !

ஓட்ஸ் - மருத்துவ குணம்


ஓட்ஸ்-ல் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. ஓட்ஸ்-ல் இயற்கை இரும்புசத்து அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் அதிகம் உள்ளதால், இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. அரை கப் சமைத்த ஓட்ஸ்-ல் கிட்டத்தட்ட 4 கிராம் கூழ்மநிலை கரையக்கூடிய நார்பொருள் உள்ளது (பீடா குளுகான்) உள்ளது.

இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புப் பொருளை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்புப்பொருளை உறிஞ்சி வெளியேற்றுகிறது.  இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது. ஏனெனில் அதிக கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் செயல்களை ஒழுங்கு செய்ய உதவுகிறது.

அதிக ஓட்ஸ் கொண்ட உணவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய ஓட்ஸ் உதவுகிறது. ஓட்ஸ் பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது

ஓட்ஸ்-ல் சில தனிப்பட்ட கொழுப்பு அமிலம் மற்றும் ஆட்டி ஆக்ஸிடாண்ட்ஸ்கள் உள்ளன. இவை இரண்டும் வைட்டமின் ஈ-உடன் இணைந்து, உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

சிங்கப்பூரில் படிப்பவர்களுக்கு செலவும், நேரமும் மிச்சம்


பொதுவாக, மேலாண்மை படிப்புகளுக்கு பெயர்பெற்ற சிங்கப்பூர், தற்போது பலதுறைகளில் படிப்புகளை வழங்கி வருகிறது. 6 ஆண்டுகளுக்கு முன்பாக, சிங்கப்பூரின் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை 70,000. ஆனால் அந்த எண்ணிக்கை 2009ம் ஆண்டின் முடிவில் 1,00,000 என்ற அளவிற்கு அதிகரித்தது.

வரும் 2015ம் ஆண்டின் இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை 1,50,000 என்ற அளவில் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தாக்க திட்டங்கள்
மாறிவரும் உலக பொருளாதார சூழலுக்கு ஏற்ப, பல புதிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பார்த்தால், சிங்கப்பூர் மேலாண்மை கல்வி நிறுவனம், கலாச்சாரம், அமைப்பு மற்றும் சமூக நடத்தை ஆகியவற்றில் 4 வருட இளநிலை சமூக அறிவியல் படிப்பை வழங்குகிறது. மேலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்(NUS), ஆங்கில மொழியில், ஒற்றை மேஜர் பி.ஏ(ஹானர்ஸ்) 4 வருட படிப்பை வழங்குகிறது.

பி.பி.ஏ(அக்கவுன்டிங்) என்ற 5 வருட படிப்பானது, சிங்கப்பூரில் வழங்கப்படும் புகழ்பெற்ற படிப்புகளில் ஒன்றாகும். NUS, நிதி மற்றும் நியூ மீடியா துறையில் பி.பி.ஏ(ஹானர்ஸ்) இரட்டைப் பட்டப் படிப்பை வழங்குகிறது.

சர்வதேச மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் பல பொறியியல் படிப்புகளை சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இவைத்தவிர, பி.ஏ(எகனாமிக்ஸ்) மற்றும் பி.இ(எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்) ஆகிய படிப்புகள், பொறியியல் கல்லூரி மற்றும் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தால் கூட்டாக சேர்ந்து வழங்கப்படுகின்றன.


செலவினங்கள்
கடந்த சில வருடங்களாக, சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு பல்கலை வளாகங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அதுபோன்ற பல்கலைகளால் வழங்கப்படும் படிப்புகள், அவற்றின் தாய்நாட்டு கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. சராசரியாக, சிங்கப்பூரில் பெறப்படும் வெளிநாட்டுப் பட்டம் 20% குறைவான பொருட் செலவில் கிடைக்கிறது. அதேசமயம், அது படிப்பையும், கல்லூரியையும் பொறுத்தது.

ஆஸ்திரேலியாவை தலைமையிடமாகக் கொண்ட ஜேம்ஸ் கூக் பல்கலையை உதாரணமாக எடுத்துக்கொண்டால், சராசரியாக, இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு 40,000 சிங்கப்பூர் டாலர்களும், முதுநிலைப் படிப்புகளுக்கு 28,000 சிங்கப்பூர் டாலர்களும் செலவாகிறது.

மேலும் காலமும் மிச்சமாகிறது. ஏனெனில், எம்.பி.ஏ படிப்பை எடுத்துக்கொண்டால், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும் 1.5 முதல் 2 வருடங்கள் ஆகும். அதேசமயத்தில், சிங்கப்பூரில் இதற்கு 1 வருடம்தான் ஆகும்.

வேலை வாய்ப்புகள்
சிங்கப்பூரை பொறுத்தவரை, முழுநேரமாக, பல்கலைகளிலும், பாலிடெக்னிக்குகளிலும், இதர கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவர்கள்தான் பகுதிநேர வேலைசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வொர்க் பர்மிட் தேவையில்லை என்றாலும், வாரத்திற்கு 16 மணி நேரங்களே வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

படிப்பை முடித்தப்பிறகு ஒரு மாணவர், எம்ப்ளாய்மென்ட் பாஸ் கேட்டு, மனிதவள அமைச்சகத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அதற்கு, வேலை வாய்ப்பிற்கான inprinciple approval -ஐ நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஒருவர் பெறக்கூடிய சம்பளம் மாதத்திற்கு குறைந்தது 25000 சிங்கப்பூர் டாலர் என்ற அளவில் இருந்தால் மட்டுமே, எம்ப்ளாய்மென்ட் பாஸ் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுசு கூடும் மதுரை மல்லி


மதுரை மல்லிக்கு, உள்நாட்டில் மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் மவுசு அதிகரித்து வருகிறது.மல்லிகை பூ வகைகளில், அதிக வாசனை கொண்டது மதுரை மல்லி. இது, மதுரை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களில், 1,250 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் உற்பத்தியில், 4,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மல்லிக்கான தேவை,ஆண்டுக்கு, 10,500 டன்னாக உள்ளது.ஆனால், இதன் உற்பத்தி,9,500 டன் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில், மதுரை மல்லி அதிக அளவில் விளைகிறது. அப்போது, கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மழை மற்றும் குளிர் காலத்தில், கிலோ, 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டில், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புது டில்லி மும்பை ஆகிய நகரங்களில், மதுரை மல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, அயல்நாடுகளிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.விலையில் ஏற்ற, இறக்கம், போதிய கிடங்கு வசதியின்மை, இடைத்தரகர்கள், கூலி ஆட்கள் பற்றாக்குறை, சரக்கு போக்குவரத்தில் சிக்கல் போன்ற பிரச்னைகளால், மதுரை மல்லி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு, மதுரை மல்லி விளைச்சல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அற்புத தொழில் :வாழை நார் ஆடைகள் உற்பத்தி


சென்னை பல்லாவரத்துக்கு அடுத்த அனகாபுத்தூரில் வாழை நாரை வைத்து ஆடை நெய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது ஒரு நிறுவனம். ஆசியாவிலேயே இங்குதான் வாழை நார், மூங்கில், கற்றாழை என இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுவது எக்ஸ்ட்ரா ஆச்சரியத் தகவல்.
வாழை நாரிலிருந்து ஆடைகள் தயாரிக்கும் சேகரை சந்தித்தோம். ''ஆரம்பத்தில் எல்லாரையும் போலவே நாங்கள் பருத்தி, பட்டு போன்றவற்றைக் கொண்டு ஆடைகள் தயாரித்து வந்தோம். கடந்த 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக வாழை நாரை வைத்து ஆடை செய்ய முயற்சி செய்தோம். அது நன்றாகவே வந்தது. இதை பயன்படுத்திய பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இயற்கைக்கு உகந்த, நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த வாழை நார் ஆடை தயாரிக்க ஆகும் செலவு மிக மிகக் குறைவு'' என்ற சேகர் தொடர்ந்து பேசினார்.


''பருத்தி நூல் ஆடைகளைப் போன்றதுதான் வாழை நாரிலிருந்து தயார் செய்யப்படும் ஆடைகளும். பொதுவாக, பருத்தி நூல் நீளமாக வரும். ஆனால், வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நூல் நீளமாக இருக்காது. பல வாழை நார் நூல்களை ஒன்றாக இணைத்துதான் ஆடைகளைத் தயாரிக்க முடியும்.
இப்படி வாழை நூல் பயன்படுத்தி ஆடைகள் தயாரிப்பதால் இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தவிர, பருத்தி ஆடைகளைப் போல இந்த ஆடைகளையும் நன்கு சாயமேற்ற முடியும். இதனால் நாம் விரும்பிய வண்ணத்தில் சேலை, சட்டை துணி போன்றவற்றை உருவாக்கலாம். பருத்தி நூலைவிட குறைந்த செலவே இதற்கு ஆவதால், இது குறைந்த விலையிலும் கிடைக்கிறது'' என்றார்.

இந்த வாழை நார் ஆடை களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா என்று கேட்டோம். ''தமிழகம், குஜராத் பகுதிகளில் இந்த புடவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்குள்ள பெரிய கடைகள் இதற்கான ஆர்டர்களை தந்து வாங்கிச் செல்கிறார்கள். தவிர, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் மட்டும்  மாதத்திற்கு பத்தாயிரம் ஆடைகள் வேண்டுமென எங்களிடம் கேட்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ஆர்டரை சப்ளை செய்கிற அளவுக்கு எங்களிடம் இடவசதி இல்லை.தவிர, பருத்தி நூல் போல இதனை எளிதில் தயாரித்துவிடவும் முடியாது. ஒவ்வொரு இழையாகப் பிரித்து, காய வைத்து, அதை நீளமான நூலாக மாற்றி, நெய்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். நீளமான நூலை உருவாக்கும் டெக்னாலஜி மட்டும் வந்து விட்டால், இன்னும் வேகமாக இந்த ஆடைகளை தயாரிக்க முடியும்'' என்றவர், இந்த தொழில்நுட்பத்துக்கான பேடன்ட் உரிமையையும் வாங்கி வைத்திருக்கிறார். டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி.-யில் சான்றிதழ் வாங்கி இருக்கிறார்.


''எங்களுக்கு போதிய இடவசதியை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்தால், இன்னும் அதிக அளவில் இந்த ஆடை களை உற்பத்தி செய்து உலகம் பூராவும் ஏற்றுமதி செய்வோம்'' என்று கோரிக்கை வைத்தவர்,  தேங்காய் நார், மூங்கில், கடல் புல் போன்ற 25 வகையான இயற்கை பொருட்களைக் கொண்டு ஆடைகளை தயாரித்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.
''அடுத்து, மூலிகைகளைக் கொண்டு புடவை தயாரிக்கும் எண்ணத்திலும் இருக்கிறோம். வாழை நார் மூலம் புடவைகள் மட்டுமல்லாமல் சுடிதார், சர்ட்டு கள் தயாரிக்கும் வேலையிலும் கூடிய விரைவில் இறங்கப் போகிறோம்'' என்றார் சேகர்.
இயற்கைக்கு உகந்ததாக இருக்கும் இத்தொழில் வருங் காலத்திற்கு ஏற்றது என்பதில் சந்தேகமே வேண்டாம்!




தடையில்லா லாபம் வரும் காளான் வளர்ப்பு


 நாம் முன்னேற வேண்டு மானால் உலகில் பல வழிகள் இருக்கிறது. பல தொழில்கள் இரு க்கிறது. அதிலும் சுயமாக முன் னேற நினைப்பவர்களுக்கு உதவுப வை சிறுதொழில்கள். அதிக முத லீடு இல்லாமல், விரைவில் தொ ழில் தொடங்க இத்தகைய சிறு தொழில்களே மிகவும் சிறந்தவை யாக இருக்கிறது. பாருங்கள்! சிறு தொழில் செய்து இப்போது நாட்டி ல் பலரும் பெரிய தொழிலதிபர்க ளாக வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளா ன் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர் காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிப ராக மாறிக்கூடிய வாய்ப்பு கள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக் காளான் வளர்ப்ப தன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம்.

மருத்துவ பலன்களும், உணவு முறையும்:
இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். கார ணம் அசைவ சுவைக்கு நிக ரான சுவை யைத் இது தருவதால்தான். மேலு ம் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ் பேட், பொட்டாசியம் மற்றும் காப்ப ர் போன்ற
தாதுச்சத்து க்களும் நிறைந்திருக்கின்ற ன.
உடலுக்குத் தேவையான சத்துக் கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கி யமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்
இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.
இத்தொழிலை எப்படிச் செய்வது?
மிகவும் எளிதுதான். நம் வீட்டிலே யே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.


காளானின் ரகங்கள்:
நம் நாட்டின் காலநிலைக்கு உகந்த து இந்த ரகங்கள் : வெள்ளைச் சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே .-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக் காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை.

காளான் குடில் எப்படி அமைப்பது?
ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரை வேய்ந்த சாதாரண வீடே போது ம். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந் தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளா ன் வளர்க்கவும் தேவைப் படும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.
வித்து பரப்பும் அறையின் வெப்ப நிலை:
 25-300 செல் சியசும் வெப் பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண் டும். அத்தோடு இந்த இரு அறைகளி லும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண் டும்.குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர் மா மீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shop களில் கிடைக்கும்.
காளான் வித்து உருவாக்குவது எப்படி?
காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோ துமை, சோளம் ஆகியவை முக் கிய பொருள்களாக பயன்படுகி றது.
 மேற்குறிப்பிட்ட தானியங்க ளை அரை வேக்காடு வேக வை த்து காற்றில் உலர்த்த வேண் டும். அதனுடன் 2% சுண்ணாம்பு ம் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில் களில் நிரப்ப வேண் டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.
அடுத்து அதிலுள்ள நுண்கிருமி களை அழிக்க குக்கரில் அடு க்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.
வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியா க வைக்க வேண்டும்.
பிறகு 15-18 நாட்கள் வயது டைய காளான் வித்தை காளான் தயாரிப் புக்கு பயன் படுத்த வேண்டும்.
காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?
காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்: கரும்புச் சக்கை, உமி நீக்கிய மக்கா ச்சோளக் கருது, வைக்கோல்
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீ ரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைக ளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப் பதம் இருக்கும்படி பார்த்துக் கொ ள்ள வேண்டும்.

காளான் பைகள் – படுக்கைகள் எப்படி தயார் செய்வது?
காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திற ந்த பாலீத்தின் பைகளை பயன் படுத்த வேண்டும். இரு பக்க மும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதி யை கிழித்துவிடலாம்.
அந்த பாலித்தீன் பையை ஒரு புறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.
வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்ய வேண்டும். ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பை யை நன்றாக இறுக்கி கட்டி விட வேண்டும். இதற்கு ரப்பர் பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடி லினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விட வேண்டும்.
விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழு வதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காண லாம். பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையை க் கிழிக்க வேண்டும்.
தினமும் கைத்தெளிப்பான் கொ ண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.
காளானை எவ் வாறு அறுவடை செய்வது?
பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்ப டும்.
இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண் ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறு வடை செய்துவிட வேண்டு ம். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்கள் விருப்பம் எது வோ அப்படி அறுவடை செய்து கொள்ளல லாம்.
முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போ ன்ற பொருள் கொண்டு காளான் படுகை யை இலேசாக சுரண்டுவிடுவதால், அல்ல து பாலிதீன் பைகளின் நான்கைந்து துளை களை கூடுதலாக இட வேண்டும். ஒவ் வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன் பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 600  கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது?
அக்கம்பக்கத்தில் உள்ளவர்க ளுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க் கும் விற்கலாம். அருகில் உள் ள ஹோட்டல்களுக்கு கொடு க்கலாம். காளானைக் கொ ண்டு பல வித உணவுப் பொரு ட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக் கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.
அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக் கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இர ண்டு நாட்கள் வரைக்கும் வை க்கலாம். இரண்டிற்கு மேற்ப ட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.
செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழி லாக இருக்கிறது. வீட்டிலிருந் தபடியே நமது வருமா னத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகி றது.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஈரான் தலைவர்களுடன் பேசுகிறார் பிரதமர்


இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 120 நாடுகள் உறுப்பினராக உள்ள அணிசேரா நாடுகளின் 16-வது மாநாடு வருகிற வியாழக்கிழமை ஈரான் தலைநகர் டெக்ரானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஈரான் நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்.

 அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள், அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகளை மேற்கு நாடுகள் நிறுத்தி விட்டன. மேலும், அந்த நாட்டில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை, ஈரானுடன் உள்ள வாணிப தொடர்புகளை குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டது.

இருப்பினும், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், இந்த சுற்றுப்பயணத்தின்போது, ஈரான் நாட்டின் அதிபர் அகமதினிஜாத் மற்றும் மத தலைவர் அயதுல்லா அலி கோமேனி உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

இதுகுறித்து, டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், 'இந்த பேச்சுவார்த்தையானது, ஒட்டுமொத்த ஆசிய மற்றும் அரபு பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றியும், குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம், எண்ணெய் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் இருக்கும். மற்ற நாடுகளின் அக்கறைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், நம்முடைய சொந்த அக்கறைகளை கருத்தில் கொண்டே இந்த பேச்சுவார்த்தை அமையும்' என்று தெரிவித்தார்.

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேச உள்ளார். அதேபோன்று, கடந்த 1979-ம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சிக்கு பின்னர் ஈரானுக்கு வருகை தரும் எகிப்து நாட்டின் முதல் அதிபரான முகமது மோர்சியுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டை ஈரானில் நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்த மாநாட்டை நடத்துவதை மிகப்பெரிய ராஜதந்திர சாதனையாக ஈரான் பார்க்கிறது. இதில், அமெரிக்காவின் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூனும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில்,  ஈரான் அணு திட்டம், சிரியா கலவரம் மற்றும் பிராந்திய விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தியாவில் 'கிரெடிட் கார்டு' மூலம் செலவழிப்பில் புதிய சாதனை

நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்.,-ஜூன் வரையிலான முதல் காலாண்டில், கிரெடிட் கார்டு வாயிலாக, 28,465 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, புதிய சாதனையாகும்.மதிப்பீட்டு காலத்தில், கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது, முந்தைய நான்கு காலாண்டு களில் இல்லாத அளவில், 9.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 2003-04 மற்றும் 2004-05ம் நிதியாண்டுகளை விட, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், கிரெடிட் கார்டு வாயிலாக செலவிடுவது அதிகரித்துள்ளது என, வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பண பரிவர்த்தனை:ஆக்சிஸ் பேங்க்-ன் மூத்த துணை தலைவர் மற்றும் நுகர்வோர் செலவழிப்பு மற்றும் பணப் பரிவர்த்தனை பிரிவின் தலைவர் ஜெய்ராம் ஸ்ரீதரன் கூறும்போது, "தற்போது, வங்கிகள், வாடிக்கையாளர் பெற்றுள்ள கடன் குறித்த முழு விவரங்களையும் அறியும் வசதி உள்ளதால், அந்த விவரங்களின் அடிப்படையிலேயே கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இதனால், கடனை திரும்பச் செலுத்த தவறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்று தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி:மேலும், 2008-09ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியால், சந்தையில் காணாமல் போன கிரெடிட் கார்டு சலுகைகள், தற்போது மீண்டும் சந்தையை கலக்கி வருகின்றன.கிரெடிட் கார்டு நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் இணைந்து, கிரெடிட் கார்டு பயன்பாட்டை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை யோசித்து செயல்படுத்துகின்றன. இதன் காரணமாகவும், கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு உயர்ந்துள்ளது என, ஸ்ரீதரன் மேலும் கூறினார்.
கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு தொகைக்கு, குறிப்பிட்ட காலம் வரை வட்டி தள்ளுபடி வழங்கப்படுவதும், அதன் பயன்பாடு உயர வழிவகுத்துள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வட்டி தள்ளுபடி காலத்திற்கு உள்ளாகவே கடன் தொகையை செலுத்தி விடுவதாக, வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து எஸ்.பீ.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடம்பி நரஹரி கூறுகையில், "இந்திய நுகர்வோர்கள், வட்டி தள்ளுபடி காலத்தை பயன்படுத்திக் கொள்வதற்காகவும், மிகப் பெரிய சில்லரை நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளை பெறவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்' என்றார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும், ஜி.இ. கேப்பிடல் நிறுவனமும் இணைந்து, எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவனத்தை உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.கிரெடிட் கார்டுதாரர்களில் பெரும்பாலோர், சில்லரை விற்பனையகங்களில் பலதரப்பட்ட பொருட்கள் வாங்கவும், பயணச் செலவினங்களுக்காகவும், கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். மேலும், பலர், காப்பீட்டு பிரிமியம் மற்றும் அலைபேசி பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தவும் கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர்.

மின் கட்டணம்:கிரெடிட் கார்டு வாயிலான செலவழிப்பு, ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, இவ்வகை கடன் அட்டைகளை பயன்படுத்த பல்வேறு வாய்ப்புக்களும், வசதிகளும் உள்ளன. மின் கட்டணம்,சொத்து வரி, தொலைபேசி, அலைபேசி கட்டணம் போன்ற பலவற்றுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது.
இது போன்ற வசதிகள், சலுகைகள் ஆகியவை கிரெடிட் கார்டு வாயிலாக செலவிடுவதை ஊக்குவிக்கின்றன' என, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின், சில்லரை வர்த்தக பிரிவு பொதுமேலாளர் ஷியாமல் சக்சேனா தெரிவித்தார்.உதாரணமாக, சில நிறுவனங்கள், கிரெடிட் கார்டு மூலம் திரைப்படத்திற்கான டிக்கெட்டை வாங்கினால், ஒரு டிக்கெட்டை இலவசமாக வழங்குகின்றன. இது போன்ற சலுகைகளால், கிரெடிட் கார்டு வாயிலாக செலவழிப்பது அதிகரித்து வருகிறது என, ஷியாமல் சக்சேனா மேலும் கூறினார்.இந்தியாவில், சென்ற ஜூன் மாத நிலவரப்படி, 1.80 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி பயன்படுத்தும் சந்தாதாரர்கள் 96.55 கோடி

சென்ற ஜூன் மாத முடிவில், மொபைல் சேவை நிறுவனங்கள் 47 லட்சத்து 30 ஆயிரம் புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். தரைவழி இணைப்பு பெற்ற தொலைபேசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இந்தியாவில் 100க்கு 77 பேர் தொலைபேசி பயன்படுத்துபவர்களாக உயர்ந்துள்ளனர். இந்த தகவல்களை ட்ராய் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது. 

ஜூனில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைப் புதிய சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டுள்ளது. ஜூன் முடிவில், இந்நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 73 லட்சமாகும். இரண்டாவது இடத்தில் வோடபோன் நிறுவனம் 12 லட்சத்து 20 ஆயிரம் பேரை புதிதாய் இணைத்துள்ளது. இந்நிறுவனத்தில் ஜூன் மாத இறுதியில் உள்ள சந்தாதாரர் எண்ணிக்கை 15 கோடியே 37 லட்சம்.

இந்த நிறுவனங்களை அடுத்து டாட்டா டெலி சர்வீசஸ் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் உள்ளன. உரிமத்தை இழந்த பின்னரும், யூனிநார் நிறுவனம் 5 லட்சம் பேரை புதிய சந்தாதாரர்களாகப் பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் 41 லட்சத்து 60 ஆயிரம் பேர், எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்ற விண்ணப்பித்தனர்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து

மதுரை விமான நிலையத்தில் ரூ.130 கோடியில் சர்வதேச தரத்துடன் புதிய டெர்மினல் கட்டப்பட்டது. விமான நிலைய ஓடுதளமும் விமானங்கள் வந்து செல்லும் வகையில் 7,500 அடியாக நீட்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை,கொழும்பு இடையே விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இமிகிரேஷன் சோதனை மையம் செயல்படவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கிடையே மலேசியாவிலிருந்து 23 சுற்றுலா பயணிகளுடன் இரண்டு சிறிய ரக தனியார் விமானங்கள் நேற்று மதியம் மதுரை விமான நிலையத்தில் இறங்கியது. இமிகிரேஷன் சோதனையை எம்பி மாணிக்கம் தாகூர் துவக்கி வைத்தார். விரைவில் பன்னாட்டு பயணிகள் விமானங்கள் மதுரைக்கு இயக்கப்பட உள்ளன. இலங்கைக்கு செப்.8ம் தேதி முதல் மிகின் லங்கா நிறுவனம் விமானம் இயக்கப்பட இருந்தது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமானம் செப்டம்பர் 20ம் தேதி முதல் இலங்கைக்கு விமான சேவையை துவக்குகிறது என்றார்.

வங்கிகளில் கடன் வாங்குவது தவறில்லை: ப.சிதம்பரம்


மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளையையும், ஏ.டி.எம்.மையத்தையும் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்  திறந்து வைத்து பேசியதாவது:-

பாங்க் ஆப் மகாராஷ்டிரா மிகப்பெரிய வங்கியாகும். இந்தியா முழுவதும் ஆயிரத்து 624 கிளைகள் உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும், தற்போது திறந்து வைத்த கிளையை சேர்த்து 30-வது கிளையாகும். மகராஷ்டிரா மாநிலத்திலேயே இது ஒரு முன்னோடி வங்கியாகும். நான் இத்தொகுதியில் 39 மாதங்களில் 66 முறை சுற்றுபயணம் செய்துள்ளேன். இந்தியாவிலேயே சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 72 மத்திய கிளை வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

வங்கியில் கணக்கு வைத்திருப்பது நமது தனிமனித உரிமை ஆகும். வங்கியில் தொழில் தொடங்குவதற்கோ, கல்வி கற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ, கண்டிப்பாக கடன் கேட்க வேண்டும். கடன் வாங்குவது தவறு கிடையாது. மத்திய அரசு கிராம புறங்களில் வங்கி சேவை கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 129 மாவட்டங்களில் ஆயிரத்து 23 வங்கி கிளைகளை திறந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள், மகளிர் குழுவினர், மாணவ-மாணவிகள் பயன் பெறவேண்டும்.

நான் 2010-ல் இங்கு வரும் போது, மத்திய வங்கி இங்கு ஏதும் இல்லை என கோரிக்கை வைத்தனர். மகாராஷ்டிரா வங்கியை ராஜகம்பீரத்திற்கு கொண்டு வந்ததன் மூலம், அந்த கோரிக்கை நிறைவேற்றப் பட்டுவிட்டது. இப்போது, இந்த கிளை மூலம் 2 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. இதில் ரூ.15 லட்சம் கல்விகடனாக வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. வங்கிசேவையை கிராம மக்கள் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடையநல்லூரில் வசிக்கும் 101 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர்


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்த அவரது பெயர் சுப்பையாநாயுடு. 15-8-1912 ந்தேதி பிறந்த இவர் இந்த மாதம் 100 வயதை கடந்து 101வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
 
காசிதர்மம் ஜில்லா போர்டு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த இவர் 1971-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 40 ஆண்டுகளாக பென்சன் பெற்று வருகிறார். யாருடைய துணையும் இல்லாமல் தனது தேவைகளை தானே செய்து வருகிறார். தினமும் தனது தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை கவனித்து வருகிறார்.
 
பேரன், பேத்திகளோடு இன்பமாக வாழ்க்கை நடத்தி வரும் அவர் கூறியதாவது:-
 
திடகாத்திரமாய் இருக்கும் எனக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது. 101 வயதின் துவக்கத்தை எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். தினமும் நடைபயிற்சியை தவறாமல் கடைபிடித்து வருகிறேன் என்றார். 

சனி, 25 ஆகஸ்ட், 2012

அரசுத்துறைகளில் 2 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன


சென்னையில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தெற்கு மண்டலம் சார்பில், ஆங்கில மொழி மற்றும் அதனை புரிந்துகொள்ளுதல் தொடர்பான வினா வங்கி கருத்தரங்கம் நடைபெற்றது. 
 
நிகழ்ச்சியை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்து பேசியதாவது:-
 
நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் 2 கோடிக்கும் அதிகமாக காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை விரைவில் நிரப்பப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் 55 சதவீதம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்கின்றனர். இதனை முற்றிலும் ஆன்லைன் ஆக்குவதற்கு படிப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் வெப்சைட்டில் விடைகளை வெளியிடவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.
 
தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் உள்ளது. இதனை பிராந்திய மொழிகளிலும் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் உள்ள திறமையான பணியாளர்களை பெற முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் சில பேப்பர்களை பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கிறோம். இங்கு மட்டும் ஏன் பெறக்கூடாது? கொள்கை அளவில் இதனை ஒப்புக்கொண்டுள்ளோம். இதன்மூலம் கிராமப்புற விண்ணப்பதாரர்களுக்கு நன்மை ஏற்படும்.
 
அடுத்த ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆன்-லைனில் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம்


பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்வித் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூ், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் ரூ.12.58 கோடி மதிப்பீ்ட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லையில் உயர் நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதா, பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள முடியாது. பள்ளிகளிலும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்யேக 19 இலக்க எண் வழங்கபட உள்ளது. இந்த 19 இலக்க எண்ணை பதிவு செய்து மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.

இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரே விண்ணப்பத்தின் நிலவரம், உதவித் தொகையின் நிலவரம் ஆகியவற்றை பிரத்யேக எண் மூலம் அறிந்து கொள்ள முடியும். இந்த புதிய திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

அஸ்ஸாமில் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் முஸ்லிம் லீக் நிவாரண குழுவினர் 250 முகாம்களில் தங்கி இருப்பவர்களிடம் நேரடி விசாரணை


சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவ ரத்தின்போது பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந் தித்து துயர் துடைக்கும் பணி யில் ஈடுபட அமைக்கப்பட்ட குழுவினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது தலைமையில் முதல் நாளாக நேற்று 250 முகாம்களில் தங்க வைக் கப்பட்டி ருப்பவர்களிடம் நேரில் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறிய குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து உடனடி யாக தக்க நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி கூறினார் கள்.

அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் பி.வி. அப்துல் வஹாப், கேரள மாநிலச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தேசியச் செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், தேசியப் பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, உ.பி. மாநிலத் தலைவர் டாக்டர் மதீன், மும்பை மாவட்டச் செயலாளர் சி.ஹெச். அப்துல் ரஹ்மான் ஆகியோர் 23-8-2012 அன்று காலை அஸ்ஸாம் மாநில தலைநகர் குவஹாத்தி சென்றனர். விமான நிலையத் தில் அஸ்ஸாம் மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வர வேற்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் கலவர நிவா ரணக் குழு விமான நிலையத்தி லிருந்து நேரடியாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிக் கப்பட்டுள்ளவர்கள் தலைநகர் குவஹாத்தியில் முகாமில் தங்கியிருப்பவர்கள் முதலில் சென்று பார்த்து விபரங்கள் கேட்டனர். குவஹாத்தியிலி ருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள துப்ரி மாவட்டத்திற்கு சென்றனர். அங்கு 250 முகாம் களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு முகாம்களில் பாதிக் கப்பட்டவர்களிடம் விசாரிக்கும் போது அவர்களது அவலக்குரல் குழுவினருக்கு கண்ணீரை வர வழைப்பதாக இருந்தது. அனைத்து சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் தினக் கூலிகளாக வேலை செய்யும் ஏழை முஸ்லிம்களை திட்ட மிட்டே தாக்கப்பட்டதும், அவர் கள் செய்வதறியாமல் நிராயுத பாணியாக்கப்பட்டிருப்பதும் வேதனையளிக்கக்கூடிய செய் தியாகும்.

தேசியத் தலைவர் இ.அஹ மது தiமையிலான குழு முகாம் களில் தங்கியிருந் தவர்களை சந்தித்து முழுமையான தகவல் களை பெற்றபின், துப்ரி மாவட்ட ஆட்சியர் குமந் சரன் காலிதா, குவஹாத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்வின் அக்னி காத்ரி, மாவட்ட காவல் துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி, தாசில்தார், வருவாய் அதிகாரி ஆகியோரை நேரில் சந்தித்தனர். பாதிக்கப் பட்டவர்களின் குறைகளை எடுத் துக்கூறி உடனடி நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி னர். மாவட்ட அதிகாரிகள் கீழ்மட்டத்தில் உள்ள அரசு அலு வலர்களுக்கு தேவையான நட வடிக்கை எடுக்க உத்தரவிட்ட னர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் கலவர நிவா ரணக் குழு இன்றும் (24-8-2012) நாளையும் அஸ்ஸாமில் முகா மிட்டு அஸ்ஸாம் மாநில கவர்னர், முதல்வர், அமைச்சர் கள் மற்றும் மாநில அதிகாரிகளை நேரில் சந் தித்து நிவாரணப் பணிகள் துரி தப்படுத்த வலியுறுத்துகின் றனர்.

மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடெங்கிலும் வசூல் செய்து வரும் அஸ்ஸாம் நிவாரண நிதியை, முதல் தவணையாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குகின்றனர். தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹமது டெல்லி திரும்பியதும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து அஸ்ஸாம் நிலவரம் குறித்து எடுத்து கூற இருக்கின்றார்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

சிரியா :அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை


நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்வை  சீனாவின் மூத்த பிரதிநிதி தாய் பின்க்கூ சந்தித்து சிரியாப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அதன் பிறகு ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் அமெரிக்காவிற்கு எதிராக கூறியதாவது,
 
ஒரு நாடு தனது நாட்டு எல்லைதாண்டி அடுத்த நாட்டுப் பிரச்னையில் தலையிட கூடாது. பன்னாட்டு சட்டத்தை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அப்படி மீறி தாக்குதல் நடத்தினால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஒரு நாடு மக்களுக்கு எதிராக குண்டுகளால் தாக்குதல் நடத்தினால் அதை தடுக்க ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அதிகாரம் உள்ளது. அதை விட்டு அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்தி ஜனநாயகத்தை கொண்டு வர நினைக்கும் போக்கை கைவிட வேண்டும்.
 
சிரியாவின் உள்நாட்டு பிரச்னையில் அந்நாட்டு பிரதிநிதிகள் தங்களுக்குள் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வுக்கு வர அந்நாட்டின் துணை பிரதமர் கத்ரி ஜமிளுடன் பேசியுள்ளேன். உள்நாட்டுப் பிரச்னையான இதில் வெளிநாட்டு தலையீடு ஒரு இடையூறாக இருக்கும் என்று அப்போது சிரியாப் பிரதமர் என்னிடம் கூறினார்.
 
இவ்வாறு செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.
 

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? - ஜெனடிக் கவுன்சிலிங்


வம்சாவளி குறைபாடுகள் குறித்த தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி, குடும்ப உறுப்பினர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை களைய உதவுகிறார்கள். உலக மக்கள் தொகையில், ஏறக்குறைய 5% பேர், வம்சாவளி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனெனில், குழந்தை பருவத்தில் இதுபோன்ற குறைபாடுகள் பொதுவாக தெரிய வருவதில்லை என்பதால், இதுபோன்ற ஆலோசனைகள், அத்தகைய குறைபாடுகளின் எதிர்கால வீரியத்தைக் கலைய உதவுகிறது.
சுகாதாரத் துறையில், கடந்த 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனித ஜீனோம் திட்டம்(Human Genome Project), ஜெனடிக் ஆலோசனை பங்களிப்பை அதிகரித்துள்ளது. ஜெனடிக் ஆலோசகர்கள், கல்வியாளர்களாகவும், இதர மருத்துவத் துறை நிபுணர்களுக்கும், பொது மக்களுக்கும் பலவகைகளில் உதவி புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், இத்துறை நிபுணர்களுக்கு, ஜெனடிக் நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
பணித் தன்மைகள்
ஜெனடிக் ஆலோசகர்கள், நோயாளிகளுக்கு உதவுபவர்களாக இருப்பதுடன், இதர மருத்துவர்களுக்கு ஜெனடிக் தொடர்பான விஷயங்களில் முக்கியப் பங்காற்றுபவர்களாகவும் இருக்கிறார்கள். வம்சாவளி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு, தேவையான தகவல்களைத் தந்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கியப் பணியை செய்யும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
வம்சாவளி அமைப்புகளையும், அதன் மறுநிகழ்வுகளையும் பகுப்பாய்வு செய்தல் போன்றவற்றோடு, ஆபத்துகளையும், சிக்கல்களையும் அடையாளம் காண உதவுவதோடு மட்டுமின்றி, நோயாளிகளுக்கென இருக்கும் ஜெனடிக் டெஸ்டிங் வாய்ப்புகளையும் மதிப்பாய்வு செய்கிறார்கள். இதுபோன்ற ஜெனடிக் ஆலோசனைகளின் மூலம், ஜெனடிக் நோய்களைப் பற்றிய புரிந்துணர்வை அதிகப்படுத்தல் மற்றும் அதன் விளைவுகளை விளக்குதல் போன்ற நன்மைகளை அடையலாம்.
பயிற்சி மற்றும் மேம்பாடு
பயாலஜி, ஜெனடிக்ஸ் அல்லது உளவியல் ஆகியவற்றை இளநிலைப் படிப்பில் முடித்து, எம்.எஸ்சி/பி.டெக்/எம்.டெக் படிப்புகளை லைப் சயின்சஸ் துறையில் மேற்கொள்வது இத்துறைக்கான ஒரு சிறந்த நுழைவாயில்.
வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைகள்
கிளினிக்கல்: மருத்துவமனைகளில் பணி செய்வதோடல்லாது, கிளினிக் வைத்து நடத்துவதோடு, தனிப்பட்ட ஆலோசகராகவும் பணிபுரியலாம்.
பரிசோதனை ஆய்வகம்: மருத்துவர்களுக்கும், பரிசோதனை ஆய்வகத்திற்கும் இடையில், ஒரு இணைப்பு பாலமாக செயல்படலாம்.
கல்வி மற்றும் பொதுக்கொள்கை: கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் பணிபுரியலாம்.
ஆராய்ச்சி: ஜெனடிக் ஆராய்ச்சி திட்டங்களுக்கு, ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றலாம்.
சம்பளம்
பணி நிலைகள் மற்றும் பணிபுரியும் இடத்தைப் பொறுத்து ஒருவரின் சம்பளம் வேறுபடுகிறது. தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர் அல்லது தனியே கிளீனிக் வைத்து நடத்துபவர் மாதம் ரூ.50000 வரை சம்பாதிக்கலாம். அதேசமயம், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர், மாதம் ரூ.25000 முதல் 40000 வரை சம்பாதிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்
Guru Nanak Dev university - Punjab
The Oxford college of science - Bangalore
National institute of mental health and Neuro sciences - Bangalore
Jawaharlal Nehru university - Delhi
Sanjay Gandhi postgraduate institute of medical sciences - Lucknow
போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்கள், வேறுபட்ட இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. அதேசமயம்,
AIIMS
Sir Gangaram Hospital - Delhi
போன்ற கல்வி நிறுவனங்கள், இத்துறையில், குறுகியகால படிப்புகளை வழங்குகின்றன.
நிபுணர்களின் கருத்து
ஜெனடிக் ஆலோசனைத் துறையானது, இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துவரும் ஒரு துறையாக விளங்குகிறது. இதன் பயன்பாட்டிற்கு ஏற்ப, இத்துறை பரந்து விரிந்த ஒன்றாக உள்ளது. பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையிலிருந்து, பிறப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது வரை பல சுவாரஸ்யமான பணித் தன்மைகளைக் கொண்டிருப்பதால், மருத்துவமனை என்னும் பாரம்பரிய அமைப்பிற்கு வெளியேயும், இத்துறை நிபுணர்கள் பல அரிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்பது நிபுணர்களின் கருத்து.

கடையநல்லூர் அருகில் சேர்ந்தமரத்தில் வறட்சியால் வாடும் மரக்கன்றுகள் :லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள்


சேர்ந்தமரம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மரக்கன்றுகளை காப்பாற்ற டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரு ஆண்டுகளாக தமிழகத்தில் மழையளவு குறைந்துள்ளது. இதனால் வானம் பார்த்த பூமியாக உள்ள சேர்ந்தமரம் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள சேர்ந்தமரம் வீரசிகாமணி, திருமலாபுரம், தன்னூத்து, குலசேகரமங்கலம், கடையாலுருட்டி, பாண்டியாபுரம், ஆனைகுளம், வெள்ளாயன்குளம், வென்றிலிங்கபுரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டும், கிணறுகளில் தண்ணீரின்றி வற்றியும் காணப்படுகிறது. 

 இதனால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.தென்னை மரங்கள் அழியும் அபாயத்திலும், பல நூறு ஆண்டு பலன் தரும் பனை மரங்கள் கூட வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பச்சைப்பசேல் என காட்சிதரும் இப்பகுதி விவசாய நிலங்கள், தற்போது வானம் பார்த்த வறண்ட பூமியாக மாறியுள்ளது. மேற்கு தொடச்ச்சி மலையில் உள்ள கருப்பாநதியின் பாசன நீர் கிடைக்காதது இதற்கு காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். உரிய நீர் ஆதாரமின்றி நிலத்தடி நீரும் குறைந்துள்ளது. 

   சுமார் 300 மற்றும் 500 அடி ஆழ்துளை கிணறுகள் கூட வறண்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகள் பயிரிட்டுள்ள மா, தென்னை, தேக்கு மரக்கன்றுகளை காப்பாற்ற வெகு தொலைவில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர். விவசாயிகளின் இந்த அவலநிலையை போக்க எதிர்காலத்தில் கருப்பாநதி அணை நீரை பகிர்ந்தளிக்கவும், நிலத்தடி நீர் ஆதாரம் பெற மழைநீர் சேகரிப்பு முறையாக செயல்படுத்த வேண்டும என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

புதன், 22 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துயர்துடைக்கும் பணி தீவிரம்

அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த கலவ ரத்தின் போது பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லிக் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதற்கு ஏற்ப, நாடு முழுவ தும் திரட்டப்பட்ட நிதியுடன்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் முஸ்லிம் லீக் குழுவினர் வருகிற 23-ந் தேதி (வியா ழன்) அஸ்ஸாம் மாநிலம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறி, அமைதிப்படுத்தி, நிவா ரண நிதியையும் வழங்குகி றார்கள்.

ஆகஸ்ட் முதல் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் அஸ் ஸாமில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நிவாரண உதவி கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அமைதி திரும்ப போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. 

மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அஸ்ஸாம் கலவர நிவாரணக்குழு அமைக்கப்பட்டு, அதற்கு சென்னை ஆயிரம் விளக்கு கிளையில் `ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் வங்கி கணக்கு துவக்கப்பட்டது.

ரமலானில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிவாரண நிதி திரட்டப்பட்டது.

அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஈத் பெருநாள் தொழுகைக்குப் பிறகு நிதி திரட்ட வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லிக்   தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டு கோள் விடுத்திருந்தார். இதற்கு அனைத்து ஜமாஅத்தினரும், ஜமாஅத்துல் உலமா சபையும் முழு ஒத்துழைப்பு தந்து உற் சாகம் அளித்தனர். 

எதிர்வரும் வெள்ளிக்கி ழமை 24-8-2012 அன்று ஜும்ஆ தொழுகை அன்றும் நிதி சேகரித்து அன்று வரை உள்ள நிதியை வங்கியில் செலுத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

அஸ்ஸாம் மக்களின் நிவாரணப் பணிகளை முறைப் படுத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியச்செய லாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர் 20-8-2012 அன்று அஸ்ஸாம் தலைநகர் குவஹாத் திக்கு விரைந்துள்ளார். அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் மாநில அமைப்பாளர் திலிர்கான், அஸ்ஸாம் பார் பெட்டாவைச் சேர்ந்த முஸ்லிம் லீக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிராஜுல் ஹக், வழக்கறிஞர்கள் ஹாபிஜ் ரஷீத் அஹமது சவுத்ரி, நஜ்ருல் ஹக், ரபி அஹமது, லத்தீப்புல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய மைச்சருமான இ.அஹமது, பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் பி.வி. அப்துல் வஹாப், கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத் ஆகியோர் 23-8-2012 அன்று அஸ்ஸாம் சென்று மக்களை நேரில் சந்தித்து அமைதிப் படுத்த இருப்பதோடு நாடெங் கிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திரட்டப் பட்ட நிதியை பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குகின்றனர். 

நிவாரண நிதி திரட்டும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் முஸ்லிம் லீக் குழு மீண்டும் அஸ்ஸாம் சென்று நிவாரணப் பணி மேற்கொள்ளும்.