Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 31 மார்ச், 2013

முஸ்லிம்களுக்கு 10%தனி இடஒதுக்கீடு,பூரண மதுவிலக்கு ; அப்பாவி சிறைவாசிகள் விடுதலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஏப்ரல் 2–ந்தேதி நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்


இது குறித்து மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

இடஒதுக்கீடு
இந்தியாவில் 13.4 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மாநில அரசு வழங்குகின்ற 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரவேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும்.

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை சந்திப்பு காமராஜர் சிலை முன்பு வருகிற 2–ந்தேதி காலை 10–30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் சபையினர் கலந்து கொள்கிறார்கள்.

தென்காசி ரெயில்வே மேம்பால பணி
தென்காசி ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்தவேண்டும். தென்காசியில் இருந்து ஈரோடு, தஞ்சாவூர், நாகூர் ஆகிய ஊர்களுக்கு மீட்டர் கேஜ் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் அகல ரெயில் பாதையான பிறகு நிறுதப்பட்டுள்ளன. எனவே அந்த ரெயில்களை மீண்டும் இயக்கவேண்டும்.

கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஆர்.சி. புத்தகம் வைத்து இருக்கவேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும். முருகன்குறிச்சியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணை பொதுச்செயலாளர் முகமது இஸ்மாயில், மாவட்ட தலைவர் துராப்ஷா, வர்த்தக அணி செயலாளர் பாட்டபத்து முகமது அலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Power Finance Corporation நிறுவனத்தில் அக்கவுண்டென்ட பணி


மத்திய அரசுக்கு சொந்தமான Power Finance Corporation நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer(E2) MS Programmer (Oracle ERP Apps.Technical)

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.24,900 - 50,500

வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர எம்.சி.ஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Jr.Accountant

காலியிடங்கள்: 12

சம்பளம்: ரூ.16,000 - 35,500

வயதுவரம்பு: 34க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.காம் முடித்திருக்க வேண்டும். மேலும் 6 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மொழி பெயர்பாளர் (Translator Hindi)

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.15,500 - 34,500

வயதுவரம்பு: 31க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுநி்லை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட ஹிந்தி மொழி பெயர்பாளராக பணியாற்றிய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant(HindI) (w3)

காலியிடம்: 01

சம்பளம்: ரூ.11,500 - 26,000

வயதுவரம்பு: 33க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: ஹிந்தி பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்புகள் இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. SC/ST/PH பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.pfcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2013

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பதிவிறக்க நகல்களை அனுப்ப வேண்டிய முகவரி: The.Sr.Manager(HR), Power Finance Corporation Ltd, Urjanidhi 1, Barakhamba Lane, New Delhi - 110001.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப விவரங்களை அஞ்சலில் அனுப்புவதற்கான கடைசி தேதி: 20.04.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pfcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கல்வி கட்டணம் வழங்குவதில் அரசு காலதாமதம் நிதி நெருக்கடியில் பள்ளிகள்


அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை, அந்தந்த பள்ளிக்கு அரசு வழங்காததால், பள்ளிகள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தமிழகத்தில், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், 7,000க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த, 2007 - 08க்கு முன் வரை, இப்பள்ளிகளில் கல்விக் கட்டணமாக, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், 32.50 ரூபாய், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், 47.50 ரூபாய், மேல்நிலைக் கல்வி வகுப்புகளில், 73 முதல், 273 ரூபாய் வரை, பிரிவுகளுக்கு ஏற்ப கல்விக் கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமின்றி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக நன்கொடை, 25 ரூபாய் வரை வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பள்ளிகளில் வசூல் செய்யப்படும் இக்கட்டணங்களைக் கொண்டே, மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், எழுதுபொருள் செலவு மட்டுமின்றி, மாவட்ட அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி, கலை இலக்கிய விழா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வந்தனர். அரசு பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில், பல மடங்கு அதிகமாக வசூல் செய்யும் நிலை, பல பள்ளிகளில் காணப்பட்டது. கட்டாய வசூல் மற்றும் அதிகப்படியான கட்டண வசூல் குறித்து, தமிழகம் முழுவதும் பரவலாக புகார் எழுந்தது. இதனால், தமிழக அரசு, 2007 - 08ம் கல்வியாண்டு மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளில் நன்கொடை வசூல் கட்டாயம் செய்யக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது. கல்விக் கட்டணத்தில் செய்து வந்த செலவுகளுக்கு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை போக்கும் வகையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை தமிழக அரசே பள்ளிகளுக்கு திருப்பி வழங்கி வந்தது. நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையிலும், இதுவரை கல்விக் கட்டணத்தை, பள்ளிகளுக்கு தமிழக அரசு திருப்பிச் செலுத்தவில்லை. இதனால், அரசு பள்ளிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இதுகுறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: நன்கொடை வசூலிப்பதில் கெடுபிடி காட்டுவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதி நிலை, நல்ல நிலையில் இருப்பதில்லை. ஆனாலும், பள்ளிகளில் உள்ள, பராமரிப்பு செலவு, விளையாட்டு விழா, கலை இலக்கிய விழா என, அனைத்து செலவுகளுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழகமே செலவிட வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டு தேர்வின் போது, ஜெனரேட்டர் வாடகை எடுத்த பணம் கூட, ஓராண்டாகியும் வழங்கப்படாமல் உள்ளது. மாணவர்களின் கல்விக் கட்டணமும் ஓராண்டாகியும் திரும்ப வழங்கப்படவில்லை. அனைத்து பெற்றோர் ஆசிரியர் கழகங்களும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதே நிலை நீடித்தால், வரும் கல்வியாண்டு துவக்கத்திலேயே, அனைத்து அரசு பள்ளிகளும், மாணவர்களிடம் வசூல் வேட்டையில் இறங்க வேண்டிய கட்டாய நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு தேர்வுத்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை

தேர்வுத் துறையையும், இதனோடு சம்பந்தப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தையும் (டேட்டா சென்டர்) வலுப்படுத்த, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு துறை வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன. இல்லை எனில், வரும் ஆண்டுகளில், இந்த இரு துறைகளிலும், பெரிய குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டுவிடும் என, துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வுத்துறை இயக்குனரகம், 1975ல் ஏற்படுத்தப்பட்டபோது, எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதோ, அதே பணியிடங்கள் தான், இன்றைக்கும் இருக்கின்றன. இயக்குனரகம் மற்றும் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் சேர்த்து, ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 500. இதில், 120 பணியிடங்கள், காலியாக இருக்கின்றன.

கடந்த 98ல், பிளஸ் 2 தேர்வை, 3.63 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, ஐந்து லட்சம் பேரும் எழுதினர். ஆனால், நடப்பு ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை, மூன்று மடங்கும், 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, இரு மடங்கையும் தாண்டிவிட்டது.

மேலும், ஆசிரியர் பயிற்சி தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என, ஆண்டுக்கு, 20க்கும் மேற்பட்ட தேர்வுகளை, தேர்வுத்துறை நடத்தி வருகிறது. அனைத்து தேர்வுப் பணிகளும், ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஏற்ப, துறையை வலுப்படுத்தவோ, காலி இடங்களை நிரப்பவோ, கூடுதலாக புதிய பணியிடங்களை ஏற்படுத்தவோ, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, துறை அலுவலர்களின் குற்றச்சாட்டு.

கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ச்சியாக ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தேர்வுத்துறை திணறி வருவதாகவும், அவர்கள் கூறுகின்றனர். கடந்த 28ம் தேதி நடந்த 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய விடைகளை நிரப்ப தேவையான வங்கி செலானை, மாணவர்களுக்கு வழங்காதது, இதுவரை நடந்த குளறுபடிகளில், உச்சகட்டமாக உள்ளது.

கேள்வித்தாள் அச்சடிப்பது, வினியோகம் உள்ளிட்ட பணிகளை, வேறு யாரிடமும் ஒப்படைக்காமல், இயக்குனரே, நேரடியாக கவனிப்பதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், "தனக்கும் எதுவும் தெரியவில்லை; இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்" என, இயக்குனர் வசுந்தராதேவி கூறுவது, விந்தையாக உள்ளது.

தேர்வுத்துறை நிலை இப்படி என்றால், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட, டேட்டா சென்டரின் நிலைமை, இன்னும் மோசமாக உள்ளது. இந்த மையம், நிதித்துறையின் கீழ் இருக்கிறது. ஆனால், கல்வித்துறை பணிகளை செய்து வருகிறது. "தம் துறை பணிகள் நடக்காதபோது, நாம் ஏன் கண்டுகொள்ள வேண்டும்" என்ற மன நிலையில், நிதித்துறையும், "பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படாத போது, நாம் என்ன செய்ய முடியும்" என்ற நிலையில், கல்வித்துறையும் உள்ளன.

இந்த பிரச்சனையை தீர்க்க, டேட்டா சென்டரை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவந்து, இந்த மையத்தை வலுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த மையத்தில், வெறும் ஏழு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் தான் உள்ளனர். 40க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி. தகவல்களை தொகுத்து, மேற்பார்வையிடும் அதிகாரிகள் நிலையில், மூன்று பணியிடங்கள் காலி. இந்த பதவியில் கூட, ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்துள்ளனர்.

கம்ப்யூட்டர்களும், தொழில்நுட்பங்களும், மிக, மிக பழமையானவை என, துறை ஊழியர்கள் வேதனைப்படுகின்றனர். நடப்பு ஆண்டில், மதிப்பெண்களை தொகுக்கும் பணிக்காக, 70 பேரை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளனர். ஒரு மதிப்பெண் சான்றிதழுக்கு, ஒரு ரூபாய் என்ற வீதத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வகையில், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, டேட்டா சென்டர் செலவழிக்க உள்ளது. மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும் பணியில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்வது, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்குமா என, தெரியவில்லை.

டி.என்.பி.எஸ்.சி.,-டி.ஆர்.பி., போன்ற அமைப்புகள், விடைத்தாள்களை, "ஸ்கேன்" செய்து, நவீன முறையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மிக விரைவாக, தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றன. அதேபோன்ற தொழில்நுட்பத்தை, தேர்வுத்துறையிலும் புகுத்த வேண்டும் என, துறை அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சனி, 30 மார்ச், 2013

பொறியியல் மாணவர்களுக்கு இந்திய கலாசார பாடம்


 "தொழிற்கல்வி மாணவர்கள் தங்கள் படிப்புடன், இந்திய வரலாறு, சுதந்திர போராட்டம் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், இந்திய கலாசாரம் குறித்த, பாடத்திட்டத்தை சேர்க்க உள்ளோம்" என டில்லி அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா தெரிவித்தார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில் நுட்ப கல்லூரி, கட்டட கலை மற்றும் திட்டமிடும் கல்லூரி, அழகப்பா தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடந்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) தலைமை வகித்தார். விழாவில், முதலிடம் பிடித்த, 102 மாணவர்களுக்கு, தங்க பதக்கங்களையும், 4,513 மாணவர்களுக்கு, பட்டங்களையும் வழங்கி, டில்லி, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழும தலைவர் மந்தா பேசியதாவது:

சர்வதேச போட்டிக்கு ஏற்ப, இளைஞர்களை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உயர் கல்விக்கு உள்ளது. தொழிற்கல்வி, பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. அதே நேரத்தில், சமூகம் சார்ந்த அறிவு மிகவும் முக்கியமான ஒன்று.

ஒவ்வொரு இளைஞனும், தன் பொது அறிவை, உலக போட்டிக்கு ஏற்ப, வளர்த்து கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த, கல்வி அறிவை உருவாக்க வேண்டும். இல்லையேல், கல்வியால், எந்த பயனும் இல்லை.

நம்நாட்டில், தொழிற்கல்வியை, தனியார் நிறுவனங்களும், அரசும் அளித்து வருகின்றன. அரசு கல்வி நிலையங்கள், அரசு தரும் மானிய தொகையில் இயங்குகின்றன. தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தை நம்பி உள்ளன. நிதியாதாரத்தை மேம்படுத்த, புதிய முயற்சிகளை அரசும், தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

போதிய நிதியாதாரம் இல்லாமல், உயர்கல்வியை மேம்படுத்த முடியாது. இப்பிரச்னைக்கு, 12வது ஐந்தாண்டு திட்டத்தில், தீர்வு ஏற்படும் என, நம்புகிறோம். ஆசிரியர் பற்றாக்குறை, போதிய அடிப்படை வசதியின்மை இல்லாதது போன்றவை, உயர்கல்வித் தரத்தை வெகுவாக பாதித்துள்ளது. மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த விஷயத்தில், இந்தியா, உலக நாடுகளில் முன்னணியில் உள்ளது.

உயர் கல்வியில், இந்திய கலாசாரம் குறித்த, பாடத்திட்டத்தை சேர்க்க முடிவு செய்துள்ளோம். நாட்டின் வரலாறு, சுதந்திர போராட்டம் ஆகியவற்றை, இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. கலாசாரத்தை, வரலாற்றை அறிந்து கொள்வது அடிப்படை உரிமையாக உள்ளது.

இந்திய கலாசாரம் குறித்து, தனி பட்ட வகுப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு மந்தா பேசினார்.

துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவை - ஏப்ரல் -02 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரணி விழிப்புணர்வு கருத்தரங்கம் சமுதாய ஆர்வலர்கள், அமீரக வாழ் தமிழக ஜமாஅத் பிரதிநிதிகள் திரளாக பங்கேற்பு!


அமீரக காயிதே மில்லத் பேரவை - துபாய் தேரா கிளையின் சார்பில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 66 - ஆவது நிறுவன நாள் , ஏப்ரல் - 02கோரிக்கை பேரணி விழிப்புணர்வு கருத்தங்கம் மற்றும் மறைந்த மாநிலசெயலாளர் கமுதி பஷீர் இரங்கல் பிரார்த்தனை கூட்டம் துபாய் - தேரா -அல் அயாத் ஹோட்டலில் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்அறக்கட்டளை அறங்காவலர் அய்யம் பேட்டை வாலன்.ஜே .ஜெய்லானிபாட்சா அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் களமருதூர்சம்சுத்தீன் ஹாஜியார் , தேரா பகுதி செயலாளர்கள்  குண்டு காசிம் ராஜாஜி, நெல்லை ஷேக் சிந்தா ,துபாய் கிளை மக்கள் தொடர்பு செயலாளர்ஜெ.முஹைதீன் பாட்சா ,அபுதாபி மக்கள் தொடர்பு செயலாளர்ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி,  ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மெளலவி கலீலுல்லாஹ் ஆலிம் அவர்கள் கிராத்துடன் நிகழ்ச்சிதுவங்கியது . விழாக்குழு செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரகத்அலி வரவேற்புரையாற்றினார் .நிகழ்ச்சிகளை ஷார்ஜா மண்டலசெயலாளர் தஞ்சை பாட்சா கனி  தொகுத்து வழங்கினார் .

அமீரக காயிதே மில்லத் பேரவையின் துபாய் மண்டல செயலாளர்முதுவை ஹிதாயத்துல்லா துவக்க உரையாற்றிய பின்பு ,பன்னாட்டுஇஸ்லாமிய இலக்கிய கழகத்தலைவர் கிளியனூர் இஸ்மத்  ,மதுக்கூர்முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் செயலாளர் சாகுல் ஹமீது ,பூதமங்கலம்ஜமாஅத் நிர்வாகி முஹைதீன் அப்துல்காதிர் ,அம்மாபட்டினம் ஜமாஅத்மௌலவி ஷேக் அப்துல்லா ,திட்டச்சேரி ஜமாஅத் சாதிக் ஃபைஜி,லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.எம்.ஜக்கரியா,கோட்டக்குப்பம்யஹ்யா மன்பஈ ஹஸ்ரத் ஆகியோர் கருத்துரை வழங்கினர் .

அமீரக காயிதே மில்லத் பேரவை அல்- கூஸ் பகுதி  செயலாளர்திண்டுக்கல் ஜமால் மைதீன் இன்றைய காலகட்டத்தில் இந்திய யூனியன்முஸ்லிம் லீக்கின் அவசியம் குறித்து விளக்கமாக உரையாற்றினார்.கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா தனது உரையில்மறைந்த கமுதி பஷீர் அவர்களின் சமூக பணிகள் குறித்தும் ,சிறைசாலைகளில்   நம் சமூதாய இளைஞர்களின் நிலை  குறித்தும்,அவர்கள் விடுதலைக்காக  இந்திய முஸ்லிம் லீக் மேற்கொள்ளும்சட்டப்பூர்வ போராட்டங்கள் குறித்தும், வி.களத்தூரில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் எம்.பி.எடுத்த சமாதான நடவடிக்க்கைகள் குறித்தும் மிக விரிவாக எடுத்துக் கூறினார் .

அமைப்புசெயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்முஸ்லிம்களுக்கான  இடஒதுக்கீடு போராட்டத்தில் முஸ்லிம் லீக் கண்டபோராட்ட களங்களையும்,அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பெற தாய்ச்சபையே காரணம் என்றும் ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக்கூறினார் .அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் கீழக்கரைஎஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும்அதன் தலைவர்களும் சமுதாய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பாங்குகுறித்தும் அதனால் ,சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் ,இடஒதுக்கீடு ,மதுவிலக்கு ஆகிய விசயங்களில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மேற்கொண்ட பணிகள் குறித்தும் விளக்கினார் .

பொதுசெயலாளர் திருபனந்தாள் ஏ. முஹம்மது தாஹா அவர்கள் தனதுஉரையில் அமீரக காயிதே மில்லத் பேரவை அமீரகத்தில் செய்து வரும் சமுதாயப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் .

நிகழ்ச்சியின்இறுதியாக சிறப்புரையாற்றிய அமீரக காயிதே மில்லத் பேரவைதலைவர் 'சேவை செம்மல் ' குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தனத ுஉரையில் மறைந்த முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர் கமுதி பஷீர்அவர்களின் இயக்க பணிகள் குறித்து உணர்ச்சி ததும்ப நினைவுபடுத்தியதோடு ஏப்ரல் - 02 தமிழக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறஇருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கைப் பேரணி வெற்றிபெற அமீரகத்தில் உள்ள தமிழக ஜமாஅத்தார்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்து கூறியதோடு, தமிழகத்தில் உள்ள நம் சொந்தபந்தங்கள் உற்றார் உறவினர்கள் ,ஜமாத்தார்கள் அனைவரையும் ஒற்றுமையோடு பேரணியில் கலந்து கொள்ள செய்து பேரணியின்கோரிக்கை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தஞ்சை பாட்ஷா கனி, அய்யம் பேட்டை குண்டு ராஜாஜி காசிம், ஆகியோருக்கும், துணை நின்ற இராமநாதபுரம் பரக்கத் அலி, ரஹ்மத்துல்லா, சஹாப்தீன், நெல்லை ஷேக் சிந்தா, வழுத்தூர் முஹைதீன் பாட்ஷா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

கருத்தரங்கில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் சார்பில் ஏப்ரல் - 02 அன்று நடைபெறும் முப்பெரும் கோரிக்கை பேரணி ,ஆர்பாட்டங்கள் சிறப்புற நடத்திட அரும்பாடுபட்டுவரும் மாநில மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்தகருத்தரங்கம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது .

2.ஏப்ரல் - 02 பேரணியில் சமுதாய மக்களை அனைவரையும் பங்கேற்கசெய்ய  தமிழகத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் தயாராகஇருப்பது கண்டு இக்கருத்தரங்கம் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.

3.தமிழகத்தில் முஸ்லிம் களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை உயர்த்திவழங்க தமிழக அரசையும், அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இந்திய முழுவதும் பல்லாண்டுகள் சிறைசாலைகளில்விசாரணைகைதிகளாக உள்ள அப்பாவிகளை விடுதலை  செய்யுமாறும்இந்திய  அரசையும் , தமிழக அரசையும் இக்கருத்தரங்கம் வலியுறித்திகேட்டுக் கொள்கிறது.அனைத்து தீமைகளுக்கும் மூளையாக விளங்கும்மதுவை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும்  என மத்திய மாநிலஅரசுகளை அமீரக காயிதெமில்லத் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அமீரக காயிதே மில்லத்  பேரவை துணைத்தலைவர் காயல் நூஹுஹாஜியார் நன்றி கூற , துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது .மதுக்கூர் ஜமாஅத் தலைவர் ரஹ்மத்துல்லா, முத்துப் பேட்டை ஜமாஅத் தலைவர் ஃபசுல் ரஹ்மான், திருநெல்வேலி இஷாக், துபாய் சோனாப்பூர்கிளை செயலாளர் ரஹ்மத்துல்லா . சகாபுதீன் , தேரா பகுதி வி.களத்தூர்ஷாகுல் ஹமீது, அபுதாபி முஸஃபா  பகுதி செயலாளர்தேவிப்பட்டிணம் நிஜாம் அக்பர்,அய்யம்பேட்டை ஜாபர் அலி, மெஞ்ஞான சபையினர் உளிட்ட  அமீரகத்தில் உள்ள திருநெல்வேலி,ராமநாதபுரம்உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத் அங்கத்தினர்களும் திரளாககலந்துகொண்டனர் .

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு துபாயில் வரவேற்பு;மதுரை-துபாய் விமான சேவையை துரிதப்படுத்தவும் கோரிக்கை


பரோடா வங்கியின் நூறாவது வெளிநாட்டு கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்ள துபாய் வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு, அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், துபாய் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் இக்குழுவினர் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான மதுரை – துபாய் நேரடி விமான சேவையை துரிதப்படுத்த கோரிக்கையை விடுத்ததோடு, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் இந்த கோரிக்கை, நீண்ட காலமாக நிறைவேற்ற படாமல் இருப்பது குறித்தும் எடுத்து கூறினர். இந்த கோரிக்கையை செவியுற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசிதேவையானவற்றை செய்வதற்கு தாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினார்.

இது குறித்து குழுவின் சார்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு நன்றி கூறிய நெல்லை S.S.மீரான், இந்தத் தடத்தில் ஏர் இந்திய சேவை மேலும் தாமதமாகும் பட்சத்தில், ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பில்,நெல்லை S.S.மீரான், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணைச்செயலாளர் கீழைராஸா, காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான், விழாக் குழு செயலாளர் பரக்கத் அலி, ஈமான் அமைப்பின் விழா குழு செயலாளர்  ஹமீது யாசீன், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 28 மார்ச், 2013

சமுதாயத்தை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியே: கோவா கவர்னர் பரத்வீர் வாஞ்சூ


 "சர்வதேச அளவில் சமுதாயத்தை மாற்றும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியாகும்,'' என, கோவா கவர்னர் பரத்வீர் வாஞ்சூ பேசினார்.கோவை, மதுக்கரையை அடுத்த நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கோவா கவர்னர் பரத்வீர் வாஞ்சூ பேசியதாவது:தமிழகம் கல்வி, கலாசாரம் மற்றும் பண்பாட்டில், மிகப்பெரிய அத்தியாயம் கொண்டதாகும். பல்வேறு துறைகளிலும் திறமையானவர்களை உருவாக்குவதில், நமது நாட்டில், தமிழகம் முன்னோடியாக உள்ளது. அதுபோல, இங்குள்ள கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலத்தவரையும் கவர்ந்துள்ளது.கல்வி என்பது அறிவுக்கான ஒரு முதலீடாகும். அதன்மூலம் சிறந்த பலன்களை அடையலாம்.

நமது நாட்டின் கல்வி முறை, குரு - சிஷ்யன் முறையை அடிப்படையாக கொண்டதாகும். இம்முறைதான், தற்போது வகுப்பறை நடைமுறையாக உள்ளது. மருத்துவம், அறிவியல் உள்பட பல்வேறு துறைகளிலும் பயில, சர்வதேச அளவில், மாணவர்கள், நம் நாட்டுக்கு வந்தனர். தொடர்ந்து ஆங்கிலேயர் காலத்தில், பாரம்பரிய முறை மாற்றம் பெற்றது. மேற்கத்திய கல்வி முறை, நம்மை ஆட்கொண்டுள்ளது.கல்வி முறைதான், ஒரு அரசின் வெற்றிக்கு காரணமாகிறது. இதற்கு, நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். இவர், நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, விவசாயம் சார்ந்த பொருளாதார மேம்பாட்டை, தொழில்சார்ந்த பொரு ளாதார மேம்பாட்டுக்கு மாற்றம் கொண்டு வர, பாடுபட்டார். அவரது காலத்தில்தான், ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., போன்றவை கொண்டு வரப்பட்டன.சர்வதேச அளவில், சமுதாயத்தை மாற்ற, கல்வி என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கருவியாகும். நமது அனைத்து விதமான கல்வி முறைகள் குறித்து, ஆராய்ந்து, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஆரம்ப கல்வி முறையிலேயே, இதனை கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து முதுகலை மற்றும் இளங்கலையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டச் சான்றிதழை வழங்கினார். பாரதியார் பல்கலை துணை வேந்தர் ஜேம்ஸ் பிச்சை பேசுகையில், ""கற்பதை என்றும் நிறுத்தக்கூடாது. தமிழக முதல்வரின் எண்ணப்பட்டி, வரும் பத்து ஆண்டுகளில், 20 சதவீதம் பேர் உயர்கல்வி கற்கும் நிலையை உருவாக்க பாடுபடவேண்டும்,'' என்றார்.முன்னதாக, கல்லூரி அறங்காவலர் லால்மோகன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் அஜீத்குமார் தலைமை வகித்தார்.

டுபாக்கூர் மனித உரிமை கழகங்கள் பற்றிய விபரங்கள் சேகரிப்பு : காவல்துறை நடவடிக்கை


காவல் துறை சார்பில், செயல்படும் மனித உரிமை கழகங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.தன்மானத்தை சீண்டும் வகையில், தனி மனிதனுக்கு ஏற்படும் அநீதி, கொடுமைகளை தட்டிக் கேட்டு, நீதி கிடைக்க செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் மனித உரிமை கழகங்கள். இந்நிலையில், "மனித உரிமை கழகம்' என்ற பெயரில்,  மாநிலத்தின் பல இடங்களில், ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

பல இடங்களில் உள்ள மனித உரிமை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை போன்று, கோஷ்டிகளாக பிரிந்து செயல்படுகின்றனர்.டுபாக்கூர் அமைப்புகள்இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் பலர், தங்கள் வாகனங்களில், ஒரு வி.ஐ.பி.,க்களை போன்று, வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்வது, பணம் பறிப்பது போன்றவை இவர்களின் தொழிலாகவே உள்ளது. இந்நிலையில், "மனித உரிமை கழகம்' என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, என்ற கோர்ட் உத்தரவை, மாநில அரசு பின்பற்ற துவங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட காவல் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நீலகிரி போலீஸ் ஜரூர்நீலகிரி மாவட்ட காவல் துறை, இந்த விவகாரத்தில் வேகம் காட்ட துவங்கியுள்ளது. மாவட்டத்தில் "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள், அதன் நிர்வாகிகள், அவர்களின் செயல்பாடு, அணுகுமுறை உட்பட விவரங்களை சேகரிக்கும் பணியில், மாவட்ட காவல் துறை ஈடுபட்டுள்ளது. தவிர, அரசு அலுவலகம், காவல் நிலையங்களுக்கு, "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் வரும் நிர்வாகிகள் மீது, வழக்குப்பதிவு செய்யவும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு, மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.காவல் துறையின் இந்த அதிரடியால், "மனித உரிமை கழகம்' என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், பணம் பறிப்பு உட்பட செயல்களில் ஈடுபடும் "டுபாக்கூர்' நபர்கள், கலக்கத்தில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் பணி வேலை வாய்ப்பகத்தில் பரிந்துரை பட்டியல்


சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள, 40 இளநிலை உதவியாளர் பணிக்கு, வேலை வாய்ப்பகம் மூலம் ஆட்கள் எடுக்கப்பட உள்ளனர். "பரிந்துரைப் பட்டிலை, ஏப்., 4ம் தேதிக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம்' என, வேலை வாய்ப்பகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில், காலி பணியிடங்கள், புதிய பணியிடங்கள் என, 3,187 இடங்கள் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இதன்படி, இளநிலை உதவியாளர் பணிக்கு, 40 பேர் எடுக்கப்பட உள்ளனர். சாந்தோம் வேலை வாய்ப்பகம் மூலம், பதிவு மூப்பு பட்டிலை மாநகராட்சி கோரிஉள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பக உதவி இயக்குனர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:இந்த பணிக்கு, ஒரு இளங்கலை பட்டப்படிப்பு பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில், பரிந்துரைக்க உள்ள உத்தேச பட்டியல், வேலை வாய்ப்பக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், இதர வகுப்பினர் - 17.4.1984, மிக பிற்படுத்தப்பட்டோர்-24.10.1985, ஆதிதிராவிடர் பொது பிரிவு-18.2.1985, ஆதிதிராவிடர் மகளிர்-6.12.1985, அருந்ததியர் -28.8.1990 வரை பதிவு செய்துள்ளோர், உத்தே பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.கல்வி தகுதியும், பதிவு மூப்பும் உள்ள சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் மட்டும், ஏப்., 4ம் தேதிக்குள், சாந்தோமில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். பணியிடங்களுக்கான இறுதி பட்டியல், ஏப்., 8ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

புதன், 27 மார்ச், 2013

பொள்ளாச்சி பகுதி கிராம மக்கள் கடும் அவதி: டீசல் விலை உயர்வால் அரசு பஸ்கள் "கட்'


பொள்ளாச்சியில் வசூல் குறைந்த கிராமங்களுக்கான, அரசு பஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கால்கடுக்க நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகத்துக்குட்பட்டு, மூன்று கிளைகள் உள்ளன. இதன்மூலம் பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு, 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, கோவை, பழநி, திருப்பூர் வழித்தடங்களுக்கும் பொள்ளாச்சியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் 60 சதவீத பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், காலை 10.00 மணிக்கு மேல் மாலை 3.00 மணி வரை கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ் சேவையை அரசு போக்குவரத்து கழகம் பாதியாக குறைத்துள்ளது. பல கிராமங்களில், அதிகாலையில் இயக்கப்படும் பஸ் சேவையை ரத்து செய்துள்ளதால், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழகத்துக்கு, பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பொள்ளாச்சி தாலுகாவில், விவசாயம் பிரதானமாக உள்ளதால், கிராமங்களில் இருந்து விவசாய கூலி வேலைக்கு மக்கள் அதிகளவில் வெளியூர்களுக்கு செல்கின்றனர்.

அதுபோல், பள்ளிகளுக்கும் மாணவர்கள் பஸ்சையே நம்பியுள்ளனர். தற்போது பல கிராமங்களில், காலை 6.00 மணிக்கு இயக்கப்படும் பஸ் போக்குவரத்தை அதிகாரிகள் வசூல் குறைவு காரணமாக ரத்து செய்துள்ளனர். இதனால், காலை 8.00 மணிக்கு முன் வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகின்றனர். அதுபோல், இரவு 8.00 மணிக்கு பின்னர், கூட்டம் குறைவாக இருப்பதால், இந்த பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசர காலத்துக்கு வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள், சொந்தமாக வாகனத்தை தயார் செய்து செல்ல வேண்டியுள்ளது.

இதனால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரத்து செய்த பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "டீசல் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் பஸ்களில், பகல் நேரத்தில், வசூல் குறைவாக உள்ளது. அதிகபட்சமாக, 20 பயணிகள் வரை மட்டுமே பஸ்சை பயன்படுத்துகின்றனர். இதனால், வசூல் குறைவாக உள்ள பகுதிகளில், ஓரிரு "டிரிப்'களை குறைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கேற்ப, சில கிராமங்களுக்கான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு வந்தால், ரத்து செய்த சேவை மீண்டும் துவங்கப்படும்,' என்றனர்.

கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு


சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

சென்னை பல்கலைக்கழகம் மாணவர் இலவச கல்விதிட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த ஏழை மாணவ–மாணவிகள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம். ஆதரவற்றவர்கள், விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகள், முதல் தலைமுறை பட்டப்படிப்பு படிக்க உள்ள மாணவர்கள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோர் வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சென்னை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். www.unom.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை குறிப்பிட்டுள்ள சான்றுகளுடன் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட உடன் 10 நாட்களுக்குள் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் உள்ளது.

 இந்த திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளின் இட பிரச்னையை ஆய்வு செய்ய வல்லுநர் குழு


தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச இட வசதியை ஏற்படுத்தாத தனியார் பள்ளிகள் பிரச்னை குறித்து, ஆய்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, மூன்று மாதங்களில், தமிழக அரசுக்கு, அறிக்கையை வழங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது

தனியார் பள்ளிகளை துவங்கவும், ஏற்கனவே உள்ள பள்ளிகள், தொடர் அங்கீகாரம் பெறவும், குறைந்தபட்ச இடவசதியை கொண்டிருக்க வேண்டும் என, தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையிலான குழு அறிக்கையின் அடிப்படையில், மாநகராட்சி பகுதியாக இருந்தால், ஆறு கிரவுண்டு இடமும், மாவட்ட தலைநகர பகுதியாக இருந்தால், எட்டு கிரவுண்டு இடமும், பள்ளிக்கு இருக்க வேண்டும். நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு இடமும், பேரூராட்சி பகுதியாக இருந்தால், ஒரு ஏக்கர் பரப்பளவும், ஊராட்சியாக இருந்தால், மூன்று ஏக்கர் பரப்பளவு இடமும் இருக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக நிலம் வாங்க முடியாமல், 1,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன. அதனால் முடிவு காண்பதில் இழுபறியானது. இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, வல்லுநர் குழு அமைக்கப்படும் என, கடந்த ஆண்டு பட்ஜெட்டில், அறிவிப்பு வெளியானது.

ஒரு ஆண்டுக்குப் பின், இப்போது தான், வல்லுநர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 5ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

அரசாணை விவரம்: குறைந்தபட்ச இட வசதியை, ஒரே இடத்தில் ஏற்படுத்தாமல், 858 பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கீழ் இயங்கி வருகின்றன என, அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் நிலம் வாங்குவதற்கு இயலாத நிலை இருப்பதாகவும், பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்ற நிலை, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையிலும் உள்ளன. இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்படக் கூடாது.

இதனால், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, இந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை, இயக்குனர் தெரிவித்து உள்ளார். இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து, குறைந்தபட்ச இட வசதியை நிர்ணயம் செய்வது குறித்து முடிவெடுக்க, வல்லுநர் குழுவை அமைக்கலாம் எனவும், இயக்குனர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், வல்லுநர் குழுவை அமைத்து, அரசு உத்தரவிடுகிறது. இக்குழு, ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள், அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் மாவட்ட சங்கங்களின் மாநில அமைப்பின் பொதுச்செயலர் இளங்கோவன் கூறியதாவது: கட்டாய கல்வி சட்டத்தில், ஒரு மாணவருக்கு, 10 சதுர அடி இடம் ஒதுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. நாங்கள், ஆறு அல்லது ஏழு சதுர அடி என்ற அளவில் நிர்ணயம் செய்து, இருக்கின்ற இட வசதிக்கு ஏற்ப, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டும் சேர்க்க அனுமதித்தால் போதும் என, தொடர்ந்து கேட்டு வந்தோம்.

தற்போது, இந்த பிரச்னையை ஆய்வு செய்ய, வல்லுநர் குழுவை அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. எங்களது கோரிக்கையை, வல்லுநர் குழு, அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

அரசின் நடவடிக்கையை, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கமும் வரவேற்றுள்ளது

செவ்வாய், 26 மார்ச், 2013

காலணி தொழில்நுட்ப துறை படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு


சர்வதேச அளவில் தோல் தொடர்பான பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது. தோல் தொழில்நுட்பத்தை படிக்க விரும்புபவர்கள், மத்திய அரசின் வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் Foot Wear Design & Development Institute -ஒருங்கிணைப்புடன் நொய்டா, சென்னை, கொல்கத்தா, ஜோத்பூர், ரோடக் ஆகிய இடங்களிலுள்ள முழு நேர பயிற்சி அளிக்கின்றது.

இந்த காலணி டிசைன் உற்பத்தி மேலாண்மை படிப்பில் முன்னேற விரும்புவர்களுக்கு இந்நிறுவனம் சிறப்பான முறையில் பாடங்களை கற்பித்து வருகின்றது. காலணி வடிவமைப்பு மேலாண்மை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்நிறுவனம் 9001:14001 ஐஎஸ்ஒ தர சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த படிப்புகளில் சேரவிரும்புவோர் ரூ.500 ஆக்ஸிஸ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகள் மற்றும் FDDIன் வளாகங்களில் செலுத்தி படிப்புகள் பற்றிய குறிப்பேட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

FDDI வளாகங்கள் Noida, Rae Bareli, Chennai, Rohtak, Chhindwara, kolkata. Jodhpur, Guna ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.

மே 20 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 14, 15, 16ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Footwear Design & Development  Institute, A-10/A, Sector - 24, Noida, Ph: 0120-4500152, 9310957007 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களை பெற www.fddiindia.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கன்னியாகுமரியில் ஆற்றுநீர் கடலில் வீணாகிறது : தடுப்பதற்கு திட்டங்கள் தேவை


குமரி மேற்கு மாவட்ட ஆறுகள் வழியாக வீணாக கடலில் கலக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.இயற்கை கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நீர் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 மற்றும் 2, முக்கடல், பொய்கை, புத்தன் அணை, மாம்பழத்துறையாறு போன்ற அணைகள் உள்ளன. இவற்றில் இருந்து மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், மழைக்காலங்களில் தேக்கப்படும் தண்ணீர், கோடை காலங்களில் எளிதில் வறண்டு விடுகிறது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. மேலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறைந்து வருவதும், மண் நிரம்புவதும், சானல்களின் ஷட்டர்கள் பழுதடைந்து, தண்ணீர் குறிப்பிட்ட இலக்கை சென்றடையாததும், நீர்பாசன மேம்பாட்டில் பல சிக்கல்களை மேலும் உருவாக்கியுள்ளன.

அண்மையில் வெயிலில் தாக்கம் மிகவும் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் கடுமையான வறட்சியும், குடிநீர் பற்றாக்குறையும் தலைகாட்டத் துவங்கியுள்ளன. மேலும், விவசாயப் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆண்டுதோறும் இயற்கை வழங்கிய ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருவது வாடிக்கையாக உள்ளது.குமரியின் தாமிரபரணியாறு தேங்காப்பட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆறு பாயும் பகுதிகளான கணபதியான்கடவு, கல்லுபாலத்தடி கடவு, பரக்காணி போன்ற பகுதிகள் ஏரிகள் போல காட்சியளிக்கின்றன. இந்த ஆறு மூலம் தேங்காப்பட்டணம் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரின் அளவு ஆண்டிற்கு ஐந்தாயிரத்து 200 மில்லியன் கன அடியாகும்.அதுபோல, மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் கடல் பகுதியில் கலக்கும் வள்ளியாறு வழியாக, ஆண்டிற்கு ஆயிரத்து 25 மில்லியன் கன அடியும், மணக்குடி கடலில் கலக்கும் பழையாற்றின் வழியாக, ஆண்டிற்கு நான்காயிரத்து 925 மில்லியன் கன அடியும் ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

இவ்வாறு, ஆண்டுதோறும் குமரி மேற்கு மாவட்ட மலைப்பகுதிகளில் இருந்து 11 ஆயிரத்து 150 மில்லியன் கன அடி ஆற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இந்த நீரை முழுமையாகப் பயன்படுத்தும் பட்சத்தில், மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறை நீங்குவதுடன், விவசாயம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, விவசாயம் செழித்தோங்க வழிவகை செய்யலாம்.எனவே, கடலில் கலக்கும் ஆற்றுநீரை முழுமையாகப் பயன்படுத்தி, மாவட்டத்தைச் செழிக்க வைக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி, அரசிடம் ஒப்புதல் பெற்று, தடுப்பணைகள், நீரேற்று நிலையங்கள் போன்ற பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, நீரை சேமிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் கோவை மக்கள்


மின்வெட்டு, வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிப்பு, அதிகரித்து வரும் லஞ்சம், தண்ணீர்ப் பிரச்னை ஆகியவற்றின் காரணமாக, கோவை மக்களிடம் அதிருப்தியும், கோபமும் அதிகரித்து வருவதால், லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது, ஆளும்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.தமிழகத்திலேயே மின்வெட்டால், அதிகபட்ச பாதிப்புக்குள்ளாகியிருப்பது கோவை மாவட்டம்தான். சென்னைக்கு அடுத்ததாக, அதிக தொழில் வளர்ச்சி பெற்ற இந்த மாவட்டத்தில் மின் வெட்டால் ஏற்படும் பாதிப்பையும், இழப்பையும் கணக்கிடவே முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

சென்னையில் 2 மணி நேரம் மட்டுமே மின் வெட்டை அமல் படுத்துவதைப்போல, கோவைக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை, அரசின் காதுகளை எட்டவேயில்லை; இதனால், மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை, முதல்வரிடம் உளவுத்துறை உட்பட யாரும் எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை.இந்த கோபம் ஒரு புறம் புகைந்து கொண்டிருக்க, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த இரு ஆண்டுகளில், கோவையில் நடந்த வளர்ச்சிப் பணிகள் என்ன என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழத் துவங்கியுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், அவிநாசி சாலை விரிவாக்கம் துவங்கி, திருச்சி, மேட்டுப்பாளையம் சாலைகள் விரிவாக்கம், பாலங்கள் திறப்பு, டைடல் பார்க், புதிய குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட், புதிய பூங்காக்கள், நடைபாதைகள் என ஏராளமான வளர்ச்சிப் பணிகள்நடந்தன.

இவற்றைத் தவிர்த்து, காந்திபுரத்தில் பல அடுக்கு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலைத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதற்கான அரசாணை மற்றும் அடுத்த கட்டப் பணிகள் தாமதமடைந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முந்தைய தேர்தல்களிலும், இந்த தேர்தலிலும் அ.தி.மு.க.,வை தொடர்ச்சியாக வெற்றி பெற வைத்ததற்காக, கோவைக்கென்று சில சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெ., நிறைவேற்றுவார் என்று கோவை மக்கள் எதிர்பார்த்தனர்; அதற்கேற்ப, காந்திபுரம் பாலத்துக்கு கூடுதல் நிதி, மேற்கு புறவழிச்சாலை, உக்கடம்-ஆத்துப்பாலம் என பல திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார்.
அவர், இந்த திட்டங்களை அறிவித்து இரு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், இந்த திட்டங்களிலும் எதுவுமே இன்னும் துவக்கப்படவே இல்லை; திட்ட அறிக்கை, மதிப்பீடு என்று நெடுஞ்சாலைத்துறையினர், பல காரணங்களை அடுக்கி வருகின்றனர்; ஆனால், எந்தப் பணியும் இப்போதைக்கு துவங்குவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை.

அதேபோல, ரயில்வே மேம்பாலங்கள், போத்தனூர்-கிணத்துக்கடவு அகல ரயில் பாதை, விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியும், கடந்த இரு ஆண்டுகளாக ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது.

இதனால், இரு ஆண்டுகளில் எந்த வளர்ச்சித் திட்டங்களுமே முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில், மாநகராட்சியில் அதிகரித்துள்ள லஞ்சமும், குடிநீர் வினியோகம், தூய்மைப் பணி போன்றவற்றில் காட்டப்படும் பாரபட்சமும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மாநகராட்சியில், கடந்த 2012-13 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களே நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் அதே திட்டங்கள் அறிவிக்கப்பட்டது, அதிருப்தியை கோபமாக்கியது. உச்சக்கட்டமாக, தமிழக அரசின் பட்ஜெட், இந்த கோபத்தை கொந்தளிப்பாக மாற்றியுள்ளது.சென்னைக்கு 4 பாலங்களுக்கு 272 கோடியும், மதுரையில் இரு பாலங்களுக்கு 130 கோடி ரூபாயும் அறிவித்து விட்டு, கோவைக்கென்று எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் விட்டதே இதற்குக் காரணம். இங்குள்ள அமைச்சர் உட்பட ஆளும்கட்சி மக்கள் பிரதிநிதிகள் யாருமே, கோவையின் தேவையை முதல்வரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த நேரத்திலும், மத்தியில் ஆட்சி கவிழும்; தேர்தல் வருமென்ற நிலையில், கோவையில் தற்போதுள்ள சூழல், ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதோடு, வரும் தேர்தல் பெரும் சவாலாக இருக்குமென்பதும் உறுதி.ஆறுதல் பரிசுஈழத்தமிழர், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்வது போன்ற பிரச்னைகளில் அரசின் நிலைப்பாடு, விவசாயிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் ஆறுதல் பரிசாகத் தெரிந்தாலும், இது பெரும்பான்மையினரின் உணர்வாக தேர்தலில் பிரதிபலிக்குமா என்பது சந்தேகமே. இதெல்லாம் போதாதென்று, பருவமழை பொய்த்து, அணைகள் எல்லாம் வறண்டு, தண்ணீர்ப் பிரச்னை இப்போதே தலை விரித்தாடத் துவங்கியிருப்பதால், எதிர்வரும் கோடையைச் சமாளிப்பதே, அரசுக்கு இன்னொரு சவாலாக இருக்கலாம்; இந்த ஆண்டிலும் மழை பொய்த்தால்...ஆளும்கட்சி பாடு பெரும் திண்டாட்டம்தான்.

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை


 தமிழகத்தில் உள்ள, கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் திறப்பு குறித்து, இதுவரை, எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக, மார்ச், 9ம் தேதி முதல் போராட்டத்தை துவங்கினர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கலைக் கல்லூரிகள் மார்ச், 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகள், 18ம் தேதியும் மூடப்பட்டன.
கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள், ஏப்ரல் மாதம் துவங்க உள்ள நிலையில், மூடப்பட்ட கல்லூரிகளைத் திறக்க, அரசு, கடந்த இரு நாட்களாக ஆலோசித்து வருகிறது. பொறியியல் கல்லூரிகளைத் திறக்க, சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் தலைமையில், நேற்று நடத்த கூட்டத்தில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பொறியியல் கல்லூரிகளைத் திறக்கும் தேதி முடிவு செய்யப்படவில்லை. ஏப்., 1ம் தேதிக்கு மேல், கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யலாம் என, ஆலோசிக்கப்பட்டது.

இதே போல், கலை, அறிவியல் கல்லூரிகளைத் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், உயர்கல்வித் துறை மூத்த அதிகாரிகள் தலைமையில் நடந்ததாகவும், அதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டங்கள் முடிவெடுக்காமல் முடிந்ததால், கல்லூரிகள் திறக்கும் தேதி, முடிவாகாமல் உள்ளது.

திங்கள், 25 மார்ச், 2013

தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் மாணவர்கள் அவதி: பொதுத்தேர்வு நேரத்தில் படிக்க முடியாமல் புலம்பல்


தேர்வு சமயத்தில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக, படிக்க முடியாததுடன், போதுமான தூக்கமின்றி, உடலளவிலும், மனதளவிலும், பள்ளி மாணவ,மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையால் தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயம் என அனைத்துதுறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்கள், படிக்க முடியாமல் தவிக்கின்றனர்; உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 1ல் துவங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வுகள், வரும் 27ல் நிறைவடைகின்றன. அதே தேதியில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத் தேர்வு துவங்குகிறது. தவிர, பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேர மின்வெட்டு அதிகரித்து வருகிறது.

இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு என, ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேலாக மின்வெட்டு நிலவுகிறது.
தொடர் மின்வெட்டால் பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவ, மாணவியர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கு படிக்க முடியாததுடன், தூக்கமும் வருவதில்லையென புலம்புகின்றனர்.
இதுகுறித்து, பள்ளி மாணவர்கள் கூறுகையில்,""இரவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்படுகிறது. பாடங்களை கண்விழித்தும் படிக்க முடிவதில்லை.

அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்கலாம் என்று நினைத்து தூங்கினால், உஷ்ணம், கொசுத் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் சரிவர தூங்க முடிவதில்லை.

தேர்வறையில் தூக்கம் தூக்கமாக வருகிறது. மூளையும் சோர்வடைவதால் சிந்தித்து தேர்வெழுதமுடிவில்லை. எதிர்வரும் தேர்வுகளை எதிர்கொள்வதை நினைத்தாலே பயமாக உள்ளது. இரவு நேர மின்வெட்டை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

கோவை, மின்வாரிய தலைமைப்பொறியாளர் தங்கவேலு கூறியதாவது:
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வழக்கம்போல் காற்றாலைகளின் மின் உற்பத்தி குறைவாகவே உள்ளது.

கடந்த ஜன., மாதத்தில் காற்றாலை உற்பத்தித்திறன் குறைந்தது 1,000 மெகாவாட்டாக இருந்தது தற்போது 15 மெகா வாட்டாக குறைந்துள்ளது; மின் தேவையும் அதிகரித்துள்ளது. மழையின்மையால் அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அனல் மின்சாரமும் கைகொடுக்கவில்லை.
இரவுநேர மின் பயன்பாட்டை குறைக்க கடைகள், ஓட்டல்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

தற்போது தேர்வு சமயம் என்பதால், கேரள மாநிலத்தில் இரவு 8.00 மணி முன்னதாக கடைகள், ஓட்டல்களை மூடிவிடுகின்றனர்.
இதனால், மின்தட்டுபாடு குறைகிறது. அதேபோல், இங்கும் மின்பயன்பாட்டை குறைத்து, தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆறு மணிநேர தூக்கம் அவசியம்
டாக்டர்கள் கூறுகையில்,"நாளொன்றுக்கு குறைந்தது ஆறு மணி நேரத் தூக்கம் தேவை என்ற நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் மாணவர்களுக்கு தூங்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. இதனால், சிந்திக்கும் திறன் குறைவதுடன், உடல் வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகும். தேர்வில் கவனம் சிதற வாய்ப்புள்ளது. குறிப்பாக சிந்தித்து எழுதும் கணிதத் தேர்வில் பாதிப்புகள் அதிகம் இருக்கும். எனவே, தேர்வு சமயத்தில், மாணவ,மாணவியருக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேர தூக்கம் தேவை,'' என்றனர்.

மத்தியில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. துணை போகாது : க.அன்பழகன் பேச்சு


சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டம் சுமார் 1½ மணி நேரம் மட்டுமே நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எதுவும் பேசவில்லை.

ஆனால், பொதுச்செயலாளர் க.அன்பழகன் சிறிது நேரம் பேசினார். அவர் தனது பேச்சை, கழகத்தின் நிரந்தர தலைவர் கலைஞர் அவர்களே, பொறுமை காக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களே என்று தொடங்கினார். அவர் மேலும் கூறியதாவது:–

வீரபாண்டி ஆறுமுகம் கோபம்
பொதுவாக எதிரிக்கு எதிரி நண்பன் என்பதற்காக சில நேரங்களில் பொறுத்து போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்லவன் என்பதற்காகவோ, நண்பன் என்பதற்காகவோ உறவு கொள்வதில்லை. ஒரு முறை கலைஞரும், நானும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் மிகவும் கோபமாக உள்ளே வந்தார்.என்ன நடக்கிறது இங்கே? என்று தொடங்கிய அவர், கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை செய்துகொண்டு இருக்கிறார்கள். நாம் கீழே உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். மேலே தயாளு அம்மாவிடம் விசாரணை செய்கிறார்கள். இவ்வளவு துணிச்சலையும் யார் கொடுத்தது?. மத்தியில் ஆட்சி என்றால் நாமும் சேர்ந்துதானே ஆட்சி. இனியும் கூட்டணியில் இருக்க வேண்டுமா?. வெளியே வந்துவிடுவோம். தேர்தலையும் தனியாக சந்திப்போம். இந்த அவமானத்தை தாங்கியது போதும் என்று அவர் கண்கலங்கி வருத்தப்பட்டு பேசினார்.

சில்லறை வணிகம்
சில்லறை வணிகத்தில் அந்நியநாட்டு முதலீடு என்பது நாம் எதிர்க்கும் ஒரு கொள்கை என்றாலும், ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாதே என்ற நோக்கத்தில்தான் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தோம்.ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் மனம் வருந்தி ஓட்டு போட்டோமே தவிர சில்லறை வணிகத்தில் அந்நியநாட்டு முதலீட்டுக்கு ஆதரவாக அல்ல. இப்படி பல சம்பவங்களில் நமக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் முரண்பாடு இருந்தாலும், ஆட்சி கவிழ்ந்துவிடக்கூடாதே என்பதால் ஆதரவு தெரிவித்து வந்தோம்.

இலங்கை தமிழர் பிரச்சினை
ஆனால், இப்போது இலங்கை தமிழர் பிரச்சினை என்பது நமது உயிரோடு கலந்தது. 1956–ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. குரல் கொடுத்து வந்தது. நமது போராட்டத்தின் உச்சக்கட்டம் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ததுதான். இலங்கை தமிழர் பிரச்சினைக்காகத்தான் கலைஞரும், நானும், மற்றவர்களும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம். பதவி பெரிதல்ல. ஆனால், அந்த பதவியை ராஜினாமா செய்வது சாதாரண விஷயம் அல்ல. இருமுறை ஆட்சியையே இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இழந்து இருக்கிறோம்.இப்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்காக வெளியே வந்தோமே தவிர, இந்த ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஒருபோதும் தி.மு.க. ஈடுபடாது. இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு மதவெறி கொண்ட ஆட்சி வருவதற்கு தி.மு.க. ஒருபோதும் துணையாக இருக்காது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது தி.மு.க.வின் நோக்கம் அல்ல.

மனம் உடைந்து..
இங்கே கலைஞர் உடலும், மனமும் உடைந்து அமர்ந்திருக்கிறார். உள்ளத்தால் நொந்து உட்கார்ந்து இருக்கிறார். அவரால் பேச முடியவில்லை. எனக்கும் இருமலும், சளியும் இருக்கிறது. ஆனால் உங்களை எல்லாம் பார்த்த உடன் எல்லாவற்றையும் மறந்து பேசுகிறேன். நான் கலைஞரிடம் கூறுவது, அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. மாமன் என்னடா.. மச்சான் என்னடா.. எவனாக இருந்தாலும் ஒதுக்கிவிடுங்கள். உங்களோடு லட்சோப லட்ச கழக தொண்டர்கள் இருக்கிறார்கள்.இவ்வாறு க.அன்பழகன் பேசினார்.

அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்


கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக, அரசாணை வெளியிடப்பட்டது. அதன் படி, அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் அனைத்து கட்டாய கட்டணங்களை செலுத்த தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, டியூசன், பதிவு, விளையாட்டு, நூலகம், இதழ்கள் போன்றவற்றிற்கு, கட்ட வேண்டிய எந்த கட்டணத்தையும் கட்டத்தேவையில்லை. இந்த அரசாணை, 2011 - 2012ம் கல்வி ஆண்டிலிருந்து, நடைமுறைப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, துடி மாணவர் இயக்கத்தின் செயலர் பாரதி பிரபு கூறியதாவது:அரசாணை வந்தவுடன், தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் நிகழும் என, நினைத்தோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இனி கல்வி கற்பதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என, மகிழ்ந்தோம்.ஆனால், அரசு தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என, கூறி, கல்லூரி நிர்வாகத்தினர் எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

மொத்த கட்டணத்தையும் செலுத்த, கல்லூரி நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர்கள், சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். பல மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

உரிமையைக் கோரிட உடன்பிறப்பே ஓரணி திரள்வோம்!


தாய்ச்சபை உம்மை அழைக்கிறது
தீன்குல மாணவக் கண்மணி வா!
உரிமையைக் கோரிட உடன்பிறப்பே
ஓரணி திரள்வோம் வாகுடன் வா!

மதியைக் கெடுக்கும் மதுஒழிக்க
மாவட்டத் தலைநகர் மீதினிலே
கவனம் ஈர்த்திடும் பேரணிக்கு
கண்ணே மணியே களிப்புடன் வா!

தேசிய தமிழக இடஒதுக்கீட்டை
துணிவுடன் கேட்போம் துடிப்பே வா!
பிறப் புரிமைதனை வென்றெடுக்க
பிறைக்கொடி ஏந்திய புயலே வா!

வன்சிறை வாடும் சோதரனின்
விடுதலை கோரிட வனப்பே வா!
எட்டுத் திக்கிலும் நம்கரங்கள்
ஏப்ரல் இரண்டில் இணைப்போம் வா!



---------கே.வி.டி.ஹபீப் முஹம்மது
தலைவர் ,காயிதே மில்லத் பேரவை -கத்தார்

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக் கோரி பாளை.யில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாளை.யில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை.யில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரதத்திற்கு மாநில பொது செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாநில உதவி பொதுசெயலாளர் தாயப்பன் வரவேற்றார். சி.எஸ்.ஐ., நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளி மேலாளர் வேதநாயகம் , இரட்சண்யசேனை பள்ளிகள் செயலாளர் ஆல்பர்ட் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.

போராட்டத்தில் நெல்லை முஸ்லிம் அனாதை நிலைய செயலாளர் செய்யது அகமது கபீர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொது செயலாளர் போத்திலிங்கம், சி.எம்.எஸ்., எவாஞ்செலிக்கல் பள்ளிகள் செயலாளர் டேவிட் ஸ்டீபன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் சிவஞானம், ஆரோக்கியராஜ், பாலசுந்தர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சுடலைமணி, தலைவர் ராஜ்குமார், மாநில செயலாளர் முருகேசன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் மனோகரன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பஸ்லுக் ஹக், இடைநிலை ஆசிரியர் சங்க பொது செயலாளர் இசக்கியப்பன், கைத்தொழில் ஆசிரியர் சங்க மாநில கவுரவ தலைவர் சுவாமிநாதன், டி.டி.டி.ஏ., துவக்கப்பள்ளி மேலாளர் சுவாமிதாஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி சாம்மாணிக்கராஜ் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

போராட்டத்தில் சங்க மாநில பொருளாளர் டேவிட் அய்யாத்துரை, மாநில துணை தலைவர்கள் கணேசன், ஜேபஸ் பொன்னையா, சண்முகநாதன், சண்முகவேல், மாநில துணை செயலாளர்கள் விவேகானந்தன், பத்பநாபன், கோவிந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள், மேலாளர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மூட்டா மாநில பொருளாளர் சுப்பாராஜ் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். சங்க மாவட்ட தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார். 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் தேர்வு முறைகேடு அதிகம்: கல்வியில் பின்தங்கிய நிலை காரணமா?


 பிளஸ் 2 தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 18 மாவட்டங்களில் இருந்து, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர். கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற, வட மாவட்டங்களில், தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்துள்ளன.

கடந்த 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணக்குப் பதிவியல், வணிகவியல், பொருளியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய தேர்வுகள் நடந்துள்ளன. நாளை, 25ம் தேதி, உயிர் வேதியியல் தேர்வும், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும் நடக்கின்றன.

வரும் 27ம் தேதி, புள்ளியியல் மற்றும் அரசியல் அறிவியல் தேர்வுகளுடன், பிளஸ் 2 தேர்வுகள், முடிவுக்கு வருகின்றன. கடந்த 18ம் தேதி வரையிலான தேர்வுகளில், "பிட்" வைத்திருந்தது, விடைத்தாள் துண்டுகளைப் பார்த்து, விடை எழுதியது, பக்கத்து மாணவரைப் பார்த்து எழுதியது, விடைத்தாள்களை பரிமாறியபடி, விடைகளை எழுதியது உள்ளிட்ட, பல்வேறு தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர்.

கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவள்ளூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் தான், தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்துள்ளன. திருப்பூர், கன்னியாகுமரி, தேனி, மதுரை உள்ளிட்ட, 14 மாவட்டங்கள், தேர்வு முறைகேடு பட்டியலில் இடம் பெறவில்லை.

தேர்வு முறைகேடுகளில், கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்கள் தான், அதிகம் இடம் பெற்றுள்ளன. அதிகபட்சமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், 130 மாணவர்கள், தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர், 27 மாணவர்களுடன், இரண்டாம் இடத்திலும்; விழுப்புரம், 22 பேருடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன. கல்வி தரத்திற்கு பெயர் பெற்ற சென்னை மாவட்டமும், 19 மாணவர்களுடன், நான்காம் இடத்தில் இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், 14 மாணவர்கள், "பிட்" அடித்ததால், ஐந்தாம் இடத்தில் உள்ளது. மிகக் குறைவாக, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு மாணவர் மட்டுமே, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பொது தேர்வுகளில், ஆண்டுதோறும் முதலிடத்தை வகிக்கும், விருதுநகர் மாவட்டத்திலும், இரு மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.

வட மாவட்டங்கள், தொடர்ந்து கல்வியில் பின் தங்கியிருப்பதை, இந்த தேர்வு முறைகேடுகள், எடுத்துக் காட்டுகின்றன. ஆண்டு முழுவதும் படித்த ஒரு பாடத்தில் இருந்து, தேர்ச்சிக்குரிய, 70 மதிப்பெண்களைக் கூட பெற முடியாது என்ற நம்பிக்கையின்மை ஏற்பட்டு, எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், மாணவர்கள், முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

பள்ளி கல்விக்காக, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை முன்னேற்றுவதற்கு, கல்வித்துறை, உருப்படியாக, எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்பதையே, முறைகேடு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

முந்தைய தி.மு.க., ஆட்சியில், வட மாவட்டங்களில், கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியில் எந்த திட்டங்களை செய்தனர், அதனால், என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்பது, அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு முறைகேடுகளை, வெறும் எண்ணிக்கையாக பார்க்காமல், இதன் பின்னணிக்கான காரணங்களை, முழுவதுமாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், மாணவர்களை மட்டும், மட்டம் தட்டக்கூடாது.

கற்பித்தலில், செயல்படுத்தப்படும் கல்வி திட்டங்களில், ஆசிரியர் செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வட மாவட்ட பள்ளிகளில், எப்போதுமே, ஆசிரியர் காலி பணியிடங்கள், அதிகம் இருப்பதும், தரம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம்.

கல்வியில் முன்னேறியுள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான், ஆசிரியர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். இதனால், இவர்களை, வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்ததும், சில ஆண்டுகளுக்குப்பின், மீண்டும், தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர்.

இதனால், தொடர்ந்து, வட மாவட்டங்களில், ஆசிரியர் பணியிடங்கள் காத்தாடுகின்றன. இந்நிலை மாற, வட மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும், அதிக எண்ணிக்கையில், ஆசிரியர் தேர்வுகளில், தேர்வு பெற வேண்டும். இதற்கு, முதலில், பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதுடன், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், உயர்கல்வி பெறுவதையும், அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டையும் செய்தால், கல்வியில், வட மாவட்டங்கள், வெகுவாக முன்னேறும். இந்த நிலை உருவானால், சமூக, பொருளாதார நிலையிலும், வட மாவட்டங்கள் முன்னேற்ற நிலையை அடையும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

கல்வி, வேலைவாய்ப்பு அளிக்க தனி இணையதள வசதி: யு.ஜி.சி.


கல்வித் துறைகளில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு வேலைவாய்ப்புகளை, இணையதளம் வழியாக பெறுவதற்கு, யு.ஜி.சி., ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென, தனி இணையதளத்தை துவக்கி உள்ளது.

இதில், வேலை எதிர்பார்ப்போர், வேலை தரும் கல்வி நிறுவனங்கள் என, இரு பிரிவினரும், பதிவு செய்து கொள்ள வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. "நெட், செட்" மற்றும் பி.எச்டி., முடித்தவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைகளில், வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, www.ugc.ac.in என்ற தனி இணையதளம் வழியாக, புது இணையதள வசதியை, யு.ஜி.சி., ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, மேற்படி கல்வி தகுதியைக் கொண்டவர்கள், தங்களைப் பற்றிய விவரங்களை, பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.தாங்கள் எதிர்பார்க்கும் வேலைகளை, அதில் குறிப்பிடலாம்.

அதேபோல், வேலைவாய்ப்புகளை அளிக்க விரும்பும் கல்வி நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை, இந்த இணையதளத்தில் வெளியிடலாம். இரு தரப்பினரையும், சந்திக்க வைப்பதன் மூலம், நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என, யு.ஜி.சி., நம்புகிறது.

கல்லூரிகளில், ஆசிரியர், முதல்வர் உள்ளிட்ட, பணிகளை எதிர்பார்த்து, இதுவரை, 27 ஆயிரத்து 276 பேர், பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கோடையின் தொடக்கமே சதத்தை தாண்டியது !


கோடை காலம் தொடங்கியதை அடுத்து மாநிலம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை லட்சத்தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது.

இதன் காரணமாக தென்தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்ததால் தமிழகத்தில் தற்போது மழை பெய்ய வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:

லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது வலுவிழந்து வருகிறது.

இருப்பினும் இதன் காரணமாக கேரளத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தைப் பொருத்தவரை வறண்ட வானிலையே காணப்படும் என்றனர்.

சனிக்கிழமை பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

திருச்சி - 103

கரூர் - 102

மதுரை, சேலம் - 101

தருமபுரி - 100

கோவை - 99

சென்னை - 97

வேலூர் - 95

கன்னியாகுமரி, கடலூர் - 92

தூத்துக்குடி - 91

நாகப்பட்டினம் - 89

குன்னூர் - 74

கொடைக்கானல் - 69

சனி, 23 மார்ச், 2013

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்


ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள் குறித்து மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்தார்.

தீர்மானம் வெற்றி
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வலுவுள்ளதாக்கும் விதத்தில் இந்தியா திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச தமிழ் அமைப்புகளும் குரல் கொடுத்தன.ஆனால் இந்தியா அப்படி திருத்தம் எதுவும் கொண்டுவராமலேயேதான், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இலங்கை தமிழர்களுக்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மத்திய அரசு செய்த துரோகம் என்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தவிர்த்த பிற தமிழக எம்.பி.க்கள் ஆவேசமாக விமர்சிக்க வைத்துள்ளது.

சல்மான் குர்ஷித் விளக்கம்
இந்த நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் நேற்று பேட்டி அளித்தார். அப்போது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:–ஜெனீவாவில் (அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்ய) இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிகள் திருப்தி அளிக்கிறது. இந்த தீர்மானத்தில், சுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில், ‘சர்வதேச சமுதாயம் திருப்தி அடையும் வகையில்’ என்ற வாசகங்கள் இந்தியாவால்தான் சேர்க்கப்பட்டன.

முயற்சிக்கப்பட்டது
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர் அதில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. மிகவும் வலுவான வார்த்தைகளுடன் தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு சீர்குலைக்கப்பட்டது. இந்தியாவுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது.தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அதில் மாற்றங்கள் செய்யவும், ஆதரவு திரட்டி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவும் முயற்சிப்பதுதான் சிறந்தது.

இலங்கை உறவு முக்கியம்
இலங்கையுடனான உறவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். இந்தியா இலங்கையுடன் இணைந்து செயல்பட்டுத்தான், அங்குள்ள தமிழர்கள் மறுவாழ்வு பெறுவதற்கும், அரசியல் உரிமைகள் பெறுவதற்கும் இந்தியா பாடுபட முடியும்.இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

கல்லூரியிலேயே தேர்வு கட்டணம் கட்ட அனுமதிக்க வேண்டும் மாணவர்கள் கோரிக்கை


திருநெல்வேலி மாவட்டம் சாத்தான்குளம் மனோ கல்லூரியில் இதுவரை கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி வந்த தேர்வு கட்டணம் பட்டமளிப்பு கட்டணம் ஆகியவற்றை வ்ங்கி மூலம் செலுத்த வேண்டும் என திடீரென கூறியதால் மாணவிகளுக்கு காலவிரயமும், பணவிரயமும் ஏற்படுகிறது. முன்பு போல் கல்லூரியிலேயே தேர்வு கட்டணம் கட்ட அனுமதிக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

சாத்தான்குளத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இது பெண்கள் மட்டுமே பயிலும் மகளிர் கல்லூரியாக செயல்படுகிறது. மாணவிகள் தங்கள் தேர்வுக் கட்டணம் மற்றும் அரியர்ஸ் பாடங்களுக்கான கட்டணம் ஆகியவற்றை கல்லூரி அலுவலகத்திலேயே செலுத்தி வந்தனர். எல்லா கல்லூரிகளிலுமே இதுதான் நடைமுறையாக உள்ளது.

இந்த ஆண்டு திடீரென அனைத்து கட்டணங்களும் "பதிவாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்" என்ற பெயரில் வரைவோலையாக செலுத்த வேண்டும் என கூறிவிட்டனர். இதனால் மாணவிகள் கல்லூரியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.350 வரைவோலை எடுக்க ரூ.31 டிடி கமிஷன் செலுத்தவும் வேண்டியுள்ளது. இதில் தேர்வுக் கட்டணம், அரியர்ஸ் தேர்வு கட்டணம், பட்டம் பெறுவதற்கான கட்டணம் என தனித்தனியாக டிடி எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு ரூ.93 கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது.

மேலும் தற்போது கல்லூரி, இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை போராட்டத்திற்காக காலவரையறையின்றி மூடப்பட்டதாலும் மாணவிகள் தேர்வு கட்டணம் செலுத்த தினசரி வந்து செல்கின்றனர். மேலும் அதற்குரிய படிவம் பல்கலைக்கழகத்திடம் இருந்து வரவில்லை என திருப்பி அனுப்பப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர்.

எனவே முன்புபோல் மாணவிகளிடம் கட்டணங்களை கல்லூரியிலேயே வசூல் செய்து மொத்த தேர்வு கட்டணத்தையும் ஒரே வரைவோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ பல்கலைக்கழகத்தில் செலுத்த கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரம் உயராத பள்ளி கூடம் கல்வியை கைவிடும் மாணவர்கள்!


திருக்கோவிலூர் அருகே முருக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால், இப்பகுதி மாணவர்கள் சிலர் 9ம் வகுப்பை தொடர முடியாமல் படிப்பை கைவிடும் அவலம் தொடர்கிறது.

திருக்கோவிலூர் அருகே முகையூர் ஒன்றியம் முருக்கம்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, 1960ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளி 2004ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 258 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

இப்பள்ளியில் 8-ம் வகுப்பை முடித்த மாணவ, மாணவிகள், 9-ம் வகுப்பைத் தொடர சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள மணலூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட தச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. நெடுந்தொலைவு மற்றும் போதிய போக்குவரத்து வசதியின்மை காரணமாக சில மாணவ, மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்க இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இக்கிராம மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து இக்கிராம ஊராட்சித் தலைவர் ஏ.கருணாகரனிடம் கேட்டபோது, இப்பள்ளியை தரம் உயர்த்த ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு முன்மொழிவுகள் முறையாக அனுப்பி வைக்கப்படுகிறது. சென்ற 15-ம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை நேரில் சந்தித்து முன்மொழிவுகள் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு முறையாக மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதிய இடவசதி இருந்தும் இப்பள்ளியை தரம் உயர்த்தாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

எனவே, மாணவ, மாணவிகள் கல்வியை இடைவிடாது தொடரும் வகையில், இப்பள்ளியை தரம் உயர்த்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகுதி நேர பொறியியல் படிப்பு: ஏப்ரல் 1 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

விண்ணப்பப் படிவங்களை சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலும், கோவையில் அரசு பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தைப் பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணமாக பிற இனத்தவர்களிடம் ரூ. 300-ம், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் எஸ்.சி.ஏ. பிரிவினரிடம் ரூ. 150-ம் வசூலிக்கப்படும். இந்த விண்ணப்பக் கட்டணத்தை, "செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கை, கோவை'' என்ற பெயரில் வரைவோலையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களைப் பெற விரும்புபவர்கள் வரைவோலையுடன், சுய விலாசமிட்ட அஞ்சல் உறையில் ரூ. 50 அஞ்சல் தலையை ஒட்டி, "செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பகுதி நேர இளநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன.

வெள்ளி, 22 மார்ச், 2013

ஏப்ரல் - 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் கோரிக்கை பேரணி ஏன் ?


* கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஓதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்;

தமிழ்நாட்டில் 3.5ரூ இடஓதுக்கீட்டை உயர்த்தி தர தமிழக அரசை வலியுறுத்தியும் !

* இந்தியாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் !

* நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் !

2013 ஏப்ரல் 2 செவ்வாய்க்கிழமை அனைத்து மாவட்டத் தலைநகரங்களில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெறும் .

முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு : 
121 கோடி மக்கள் வாழும் நம் இந்தியத் திருநாட்டில் முஸ்லிம்கள் 13.4 சதவீதம் என அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்தல், தனி இடஓதுக்கீடு என்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு 1906ல், முஸ்லிம் லீக் துவக்கப்பட்டு, அது வாதாடி போராடி பெற்றுத்தந்த சலுகைகள் அனைத்தும் 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து 45 நாட்களுக்குள் ரத்து செய்யப்பட்டன. இந்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்ட அந்த பதற்றமான காலகட்டத்தில்தான் 1948 மார்ச் 10 அன்று துணிச்சலான முடிவெடுத்து தலைமைப் பொறுப் பேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வழிநடத்தினார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்.

முஸ்லிம்களுக்கான தனி இடஓதுக்கீட்டை வலியுறுத்தி 1948 நவம்பர் 8 அன்றும், பிற்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு இடமளிக்க வலியுறுத்தி அதே நவம்பர் 30ம் தேதியும் இந்திய அரசியல் நிர்ணய சபையில் அவர் செய்த வாதம் சமுதாயத்தால் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கது. 1967 தேர்தலில் தி.மு.க- முஸ்லிம் லீக் கூட்டணி வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானார். அவர் மறைவுக்குப்பின் கலைஞர் முதல்வரானதும் 1969 நவம்பர் 13ம் தேதி சட்டநாதன் தலைமையில் பிற்பட்டோர் நலக்குழுவை அமைத்தார். அக்குழுவின் பரிந்துரையில் தான் தமிழ்நாட்டில் 105 சாதி பிரிவுகள் பிற்பட்டவகுப்புகளாக அடையாளம் காணப்பட்டன. அதில் முஸ்லிம்களில் லெப்பை,மாப்பிள்ளை,தூதேகுலா என மூன்றும் பிற்பட்டவைகளாக குறிப்பிடப்பட்டன.

1971 ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் வாதாடி உர்து பேசும் முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கச் செய்தனர். தமிழ், உர்தூ பேசுகின்ற மரைக்காயர், ராவுத்தரை உள்ளடக்கியது தான் ‘லெப்பை’ என்ற உத்தரவு 1977 ல் முஸ்லிம் லீகால் பெற்றுத் தரப்பட்டது. 1999 மார்ச் 9,10 இரு தினங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொன்விழாவை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் சிராஜுல்மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் அவர்கள் இட ஓதுக்கீட்டை வலியுறுத்தி உரத்து குரல் எழுப்ப, அந்த மேடையிலேயே கலைஞர், ‘உங்களுக்கு நான் ஒரு உறுதி மொழி தருகிறேன் ; முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு சம்பந்தமாக நல்ல முடிவை அறிவிப்பேன்’ என உறுதியளித்தார். அந்த உறுதி மொழியின்படி 2007 செப்டம்பர் 13 அன்று முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து ஆணைபிறப்பித்தார் கலைஞர். அந்த ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என 2010 டிசம்பர் 11 அன்று சென்னை தாம்பரத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. தான் மீண்டும் முதல்வரானால் நிச்சயம் இதை பரிசீலிப்பேன் என அம்மாநாடு மேடையிலேயே அறிவித்தார் கலைஞர்.

அத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று 2011 மே16ல் ஜெயலலிதா அம்மையார் முதல்வர் ஆனார். தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றிய அவர் தமிழ்நாட்டில் ‘தனது அரசு அமைந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும்’ என உறுதியளித்தார்.

எனவே கல்வி - வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கைதூக்கிவிட தமிழ்நாட்டில் அமலில் உள்ள 3.5 சதவீத தனி இடஓதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வேண்டியது அவசியமாகும்.

சச்சார், மிஸ்ரா ஆணையங்கள் : 
2004 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றது. அதன் தேசிய தலைவர் இ.அஹமது சாகிப் வெளியுறவுத் துறை இணை அமைச்சரானார். இக்கூட்டணி அரசுக்கு குறைந்த பட்ச செயல் திட்டங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமர்ப்பித்தது. அவை ஏற்கப்பட்டு அதன்விளைவாக சச்சார், மிஸ்ரா ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

இந்திய முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலை குறித்த ஆய்வினை மேற்கொண்டு அறிக்கை தர நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் 2005 மார்ச் 9 அன்று குழு அமைக்கப்பட்டு 2006 நவம்பர் 17ல் அறிக்கை பெறப்பட்டு நவம்பர் 30ல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. இந்த அறிக்கையால் தான் இந்திய முஸ்லிம்களின் கல்வி பொருளாதார சமூகநிலை எவ்வளவு படுபாதாளத்தில் இருக்கிறது என்ற உண்மை வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது.

இதை போன்று மொழி மற்றும் மத சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா தலைமையில் 2005 மார்ச் 15 அன்று அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 2007 மே 22 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்தது.

அரசுப் பணிகளின் எல்லாமட்டங்களிலும் சிறுபான்மையினருக்கு 15ரூ இடஓதுக்கீடு அளிக்க வேண்டும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் மற்ற சிறுபான்மையினருக்கு 5 சதவீதம் பிரித்தளிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்தது.

ஆனால் 2011 டிசம்பர் 22ல் மத்திய அரசு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள்,பார்ஸிகள் உள்ளடக்கிய சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத தனி ஓதுக்கீட்டை வழங்குவதாகவும், இந்த ஒதுக்கீடு பிற்படுத்த பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கிட்டிலிருந்து உள் ஒதுக்கீடாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

முஸ்லிம்களை ஓரளவு கூட திருப்தி படுத்தாத இந்த அறிவிப்பு கூட நிலைத்து நிற்கவில்லை. ஆந்திர உயர்நீதிமன்றம் 2012 மே 28ல் இதற்கு தடைவிதித்து தீர்ப்பளித்தது. இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 1980 டிசம்பர் 31ல் தாக்கல் செய்யப்பட்ட மண்டலகுழு அறிக்கை நாட்டில் 3734 சாதிப்பிரிவுகளை பிற்பட்டவையாக கண்டு அதில் முஸ்லிம்களில் 82 சமூக பிரிவுகளை பட்டியலிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

தேசிய சிறுபான்மை ஆணையம் இந்தியாவில் முஸ்லிம்கள் 13.4%,கிறிஸ்தவர்கள் 2.3% சீக்கியர்கள் 1.9%, பௌத்தர்கள் 0.8% பார்ஸிகள் 0.4% சிறுபான்மையினர்கள் என சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த நாட்டில் பெரும்பான்மையினராக (80.5%) வாழும் இந்துக்களுக்கு அடுத்து அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே! அதாவது சிறுபான்மையினரில் பெரும்பான்மை. ஆனால் இவர்கள் கல்வி - வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிக பின்தங்கியுள்ளனர்.

28 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ள இந்தியாவில் கேரளா, கர்நாடகா , ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களிலும், வட இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. எனவே இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்த வழிகாட்டுவதோடு மிஸ்ரா ஆணைய பரிந்துரையை ஏற்று கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஓதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் : 
அனைத்து குற்றச்செயல்களுக்கும் காரணமாக இருக்கும் மது இன்று தாராளமயமாக்கப் பட்டுவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பட்டி தொட்டி, சந்து பொந்துகளெங்கும் தாறுமாறாக மதுக்கடைகள் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடைபெறுகிறது. ‘பார்’களில் மதுவிற்பனை கட்டுப்பாடின்றி நடைபெறுவதும், இரவு நேரங்களில் கூட திறந்திருப்பதும் பல ஒழுக்கக் கேடுகளுக்கு வழிவகுத்துவிட்ட தோடு, மாணவர்களும் இளைஞர்களும் சீரழிவதற்கு காரணமாக அமைந்துவிட்டன. பெண்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவருவது இந்திய பண்பாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்த பேராபத்தை தடுப்பதும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் இன்று அனைவர் மீதும் கடமையாக அமைந்து விட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை 1948 மார்ச் 10ல் அது துவக்கப்பட்ட அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றே `` மதுவையும், மதுபான உற்பத்தியையும் தடைசெய்ய வேண்டு’’ மென்பது! அதற்கு முன்பே மதராஸ் மாகாண சட்டசபையில் எதிர்கட்சி தவைராக காயிதே மில்லத் இருந்தபோது 1947 மார்ச் 6 அன்று மதுவை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி செய்த வாதம் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படக் கூடியது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்ட போது 1971 மே 21 அன்று இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம், மதுவிலக்கு ரத்து மசோதா தாக்கலான போது இ.யூ.முஸ்லிம் லீக் கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது, அதை எதிர்த்து செய்யப்பட்ட தீவிர பிரச்சாரம், 1985 ஜுன் 5ல் மதுவிலக்கு திருத்த மசோதா தாக்கலான போது சிராஜுல்மில்லத் ஆ.கா.அ.அப்துஸ்ஸமத் சட்டப்பேரவையில் ஆற்றிய உரைஅனைத்துமே வரலாற்று ஆவணங்கள்.

இன்று ஒரு அரசு மக்களின் நலத்திட்டங்களுக்கு மதுவிற்பனை வருவாயை நம்பியிருப்பதும், பண்டிகை காலங்களில் ‘இத்தனை கோடி ரூபாய்களுக்கு’ மதுவிற்பனை செய்ய வேண்டுமென கட்டாயப் படுத்துவம், வயதுவித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் மது வாங்கலாம் குடிக்கலாம் என்பதை கண்டு கொள்ளாமலிருப்பதும் அதிர்ச்சியைத் தருகின்றன. எனவே இளைய தலைமுறையை சீரழிப்பதோடு, குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டுவரும் மதுவை அறவே ஒழிக்க நாடு முழுவதும் பூரணமதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக நம் தமிழக்கத்தில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

நீண்டகால சிறைவாசிகள் விடுதலை : இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை தரம் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழு, ‘முஸ்லிம்கள் தங்களின் அடையாளங்களைக் கொண்டே தனிமைப்படுத்தப் படுகிறார்கள்; அவர்கள் தேசவிரோதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், பாகிஸ்தான் உளவாளிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்’ என தமது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களையும் பட்டியலிட்டது.

2012 ஜனவரி 15,16 ல் பெங்களூருவில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரிதிநிதிகள் மாநாட்டில் தலைமை உரையாற்றிய தேசிய தலைவர் இ.அஹமது சாகிப், இந்தியாவின் பல்வேறு மாநில சிறைகளில் எண்ணற்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பல்லாண்டுகாலமாக அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு பல மடங்கு அதிகமாக இந்த சிறைவாசிகளின் எண்ணிக்கை உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்ற அபாய அறிவிப்பை வெளியிட்டார்.

இது பற்றி ஆய்வு நடத்திய டாடாநிறுவன சமூகவியல் ஆய்வு குழு, எந்த குற்றப்பின்ணணியும் இல்லாத இவர்கள் அப்பாவிகள், வக்கீல் வைத்து வாதாக் கூட வசதியற்றவர்கள், 18 வயது முதல் 30 வயது வரையிலான முஸ்லிம் இளைஞர்களே இதில் அதிகம், பல மாநிலங்களின் காவல் துறை ஒருதலை பட்சமாக முஸ்லிம்களுக்கு விரோதமாக செயல்படுகிறது என பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது.

2012 டிசம்பர் 2 அன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில், நீதிமன்ற விசாரணைக்கு கூட உட்படுத்தப் படாமல் ஆண்டுக் கணக்கில் சிறையில் முஸ்லிம் இளைஞர்களை அடைத்து வைத்திருப்பதில் மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இவர்கள் விடுவிக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதோடு, இப்படி அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அனைத்துக்கட்சி தலைவர்கள், சிறுபான்மை,மனித உரிமை ஆணையங்கள் என அனைவருக்கும் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும், 08-02-2013 அன்று அனுப்பியுள்ள தாக்கீதில், ‘ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து மூன்று மாதங்களுக்கொரு முறை ஆய்வு செய்து இந்த சிறைவாசிகளை விடுவிக்கவோ அல்லது சொந்த ஜமீனில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு இன்னமும் நடைமுறை படுத்தப்படாதது அநீதியாகும் . இது தேச அவமானமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அண்மையில் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை நீண்டகால விசாரணை சிறைவாசிகள் இல்லை. ஆனால் நீண்ட கால தண்டனை சிறைவாசிகளில் முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் அவ்வப்போது விடுவிக்கப்படுவது வழக்கம். எந்த ஒரு குற்றத்துக்கும் தண்டனை பெற்று சிறையிலிருப்பவர்களை மன்னிக்கவோ தண்டனையை குறைக்கவோ மாநில ஆளுனருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 161 அதிகாரமளிக்கிறது. தமிழ்நாட்டில் முன்பு பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் பிறந்த நாட்களை யொட்டி சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர். அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு சிறைவாசம் கழித்த, அதிலும் 60 வயதானால் 5 ஆண்டு சிறைவாசம் கழித்த 1405 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்படவில்லை.

விசேச தினங்களில் விடுவிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள் என்று 20.7.1987 ல் 1762ம் எண் அரசாணை இருப்பதாக இதற்கு காரணம் சொல்லப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தூக்கு தண்டனை பெற்ற நக்ஸலைட் கைதிகளும், மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதியற்றவர்களும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் விநாயக் கோட்சே விடுதலை கோரி தொடர்ந்த வழக்கில் 1964 ல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "ஆயுள் தண்டனை என்றால் ஆயுட்காலம் முழுவதும் சிறைதான்" என் விளக்கம் சொன்னது. ஆனால் 1965ம் ஆண்டிலேயே மராட்டிய அரசு அவரை விடுதலை செய்தது.

2012 டிசம்பர் 11 அன்று சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தலைமை உரையாற்றிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் அவர்கள், "முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள், அவர்கள் நன்னடத்தைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பேற்றுக் கொள்ளும், நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்றார். சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். எனவே நீண்டகால விசாரணை சிறைவாசிகளையும், 12 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த தண்டனை சிறைவாசிகளையும் சாதி - மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வலியுறுத்துகிறோம்.

மேற்கண்ட முப்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 2013 ஏப்ரல் 2 செவ்வாய்கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் மாபெரும் கோரிக்கை பேரணிகளில் பங்கேற்க அலைகடலென அணிதிரண்டு வாரீர்

ஒன்றிணைத்து குரல் கொடுப்போம்!  உரிமைகளை வென்றெடுப்போம் !

-----காயல் மஹபூப்