மகாராஷ்டிரா ஸ்டேட் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட்(MAHAGENCO) என்ற மகாஜென்கோ நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தின் மின்சார உற்பத்தியில் பிரசித்தி பெற்றது. எம்.எஸ்.இ.பி., என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம் தற்போது இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்வது, பங்கிடுவது போன்ற மின்சாரம் தொடர்பான தலையாய பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னீசியன் கிரேடு 3 பிரிவில் உள்ள 360 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
மகாஜென்கோ(MAHAGENCO) நிறுவனத்தின் மேற்கண்ட டெக்னீ சியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.10.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும் 33 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரீசியன், வயர்மேன், மெக்கானிகல், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம், வெல்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் ஆகிய ஏதாவது பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மற்றவை
மகாராஷ்டிரா ஸ்டேட் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெடின்(MAHAGENCO) டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/ கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை செலுத்திய பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு வரும் 08.12.2012 அன்று ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள்: 20.12.2012. இணையதள முகவரி: www.mahagenco.in/AdvTechIIIFinal1nov2012001.shtm\
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக