Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 16 நவம்பர், 2012

அஸ்ஸாமில் தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறை

முஸ்லிம்களுக்கு எதிராக, அசாமில், பழங்குடியினர் நடத்தும் தாக்குதலின் தொடர்ச்சியாக, நேற்றும் ஒருவர் கொல்லப்பட்டார்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன் நடந்த கலவரத்தில், 90 பேர் இறந்த நிலையில், கடந்த வாரம் முதல், மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில், இதுவரை, ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கோக்ராஜ்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், முஸ்லிம்  பெண் ஒருவர், பழங்குடியின தீவிரவாத அமைப்பினரால், துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், நேற்று ஒருவர், கத்தியால் குத்தப்பட்டார். அருகில் உள்ள, கோசைகான் மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர் உடல், நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த, இரு மாவட்டங்களிலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக