மருத்துவ பதிவேடு அறிவியல், பல்வேறு மருத்துவம் சார் சான்றிதழ் படிப்புகள், செவிலியர் உதவியாளர் பட்டய படிப்பு மற்றும் கண் மருத்துவ பட்டய படிப்பு ஆகியவற்றில் சேர, இன்று முதல், இம்மாதம், 24ம் தேதி வரை, சென்னை மருத்துவக் கல்லூரியில், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்ப கட்டணம், 200 ரூபாயை, ஏதேனும் ஒரு தேசியமய வங்கியில், சென்னையில் மாற்றத்தக்க வகையில், "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai 10" என்ற பெயரில், டி.டி.,யாக எடுக்க வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக