Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 16 நவம்பர், 2012

தங்க முட்டையிடும் வாத்தை சிதைத்து விட்டார்கள்: ஸ்பெக்ட்ரம் ஏலம் பற்றி கபில்சிபல்


தங்க முட்டையிடும் வாத்தை, பரபரப்பிற்காக சிதைத்து விட்டார்கள் என மத்திய அமைச்சர் கபில் சிபல் வருத்தத்துடன் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு மத்திய அரசுக்கு வருவாய் வந்தது. சுமார் ரூ. 40 ஆயிரம்கோடி வருமானம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் 4ல் ஒரு பங்கு மட்டுமே வருமானம் வந்துள்ளதால் தற்போது மத்திய அரசு தற்போது சி.ஏ.ஜி., மற்றும் சுப்ரீம் கோர்ட்டை குற்றம் சாட்டத்துவங்கியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி., தெரிவித்திருந்தது. அதே போல், 122 லைசன்ஸ்களை ரத்து செய்து விட்டு, புதிதாக ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கபில் சிபல் மற்றும் மனீஷ் திவாரி ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், நீண்ட காலத்திற்கு தொலைத்தொடர்பு துறை குறித்த கதையை கூறிக்கொண்டிருக்க முடியாது. கொள்கைகளை அரசிடம் விட்டு விடுவதே நல்லது. தங்க முட்டையிடும் வாத்து போன்றிருந்த தொலைத்தொடர்புத்துறையை பரபரப்பிற்காக சிதைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

சிதம்பரம் கூறுகையில், ‘2ஜி முறைகேட்டால் ரூ.1.76 லேட்சம் கோடி இழப்பு என்று கூறுவது தவறான கருத்து. 2ஜி ஏலம் தோல்வியை நாங்கள் கொண்டாடவில்லை. சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் சரிசெய்வோம். நடப்பு ஆண்டில் பொருளாதார சூழ்நிலை மேம்படும். 

பாராளுமன்ற மழைக்கால கூட்டம் சரியாக நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேணடும். அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விதியின் கீழ் விவாதிப்பது என தெரியவில்லை’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக