Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 31 அக்டோபர், 2012

ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு அறிவித்துள்ள மருத்துவப் பணிகள்


இந்தியாவின் பழமைமிக்க துறையில் ஒன்றாகவும், இன்றைய இந்தியாவின் அத்தியாவசியத் துறைகளில் ஒன்றாகவும் உள்ள இந்திய ரயில்வே துறையில் உள்ள காலி இடங்களை ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு எனப்படும் ஆர்.ஆர்.பீ., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகள் மூலமாக தேர்வு செய்து வருகிறது.

மிகப் பிரம்மாண்டமான இந்திய ரயில்வே நவீனமயமாக்கலிலும் தனித்துவம் பெறுகிறது. இந்திய ரயில்வேயில் உள்ள பாரா மெடிக்கல் பணிகள் பலவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்
இந்திய ரயில்வேயில் ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 406 இடங்களும்,
ஹெல்த் அண்டு மலேரியா இன்ஸ்பெக்டர் பிரிவில் 129 இடங்களும், பார்மஸிஸ்ட் பிரிவில் 187 இடங்களும்,
இ.சி.ஜி., டெக்னீசியன் பிரிவில் 7 இடங்களும்,
எக்ஸ்ரே டெக்னீசியன்/ரேடியோகிராபர் பிரிவில் 22 இடங்களும்,
கிரேடு 2 லேப் டெக்னீசியன் பிரிவில் 25 காலி இடங்களும்,
லேப் சூப்பரிண்டண்ட் பிரிவில் 13 இடங்களும்,
கார்டியாலஜி டெக்னீசியன் பிரிவில் 2 இடங்களும்,
ஸ்பீச் தெரபிஸ்ட் பிரிவில் ஒரு இடமும்,
பிஸியோதெரபிஸ்ட் பிரிவில் 7 இடங்களும்,
எக்ஸ்டென்சன் எஜூகேடர் பிரிவில் 8 இடங்களும்,
டயட்டீசியன், ஆப்தால்மிக் ஆப்டீசியன், கிளினிகல் சைகாலஜிஸ்ட் பிரிவு லேப் சூப்பரிண்டண்ட் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு இடமும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்
ஆர்.ஆர்.பீ.,யின் பாராமெடிக்கல் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து குறைந்த பட்ச வயதும் அதிக பட்ச வயதும் மாறுபடுகிறது. அதே போல் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதியும் மாறுபடுகிறது. பிரிவு வாரியான தகுதியைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும். இந்த விபரங்கள் இந்த மாதம் 4ஆம் தேதியிட்ட இந்து நாளிதழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றவை
ரயில்வே ரெக்ரூடெண்ட் போர்டின் மருத்துவம் சார்ந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கும் மண்டலம் சார்ந்த ஆர்.ஆர்.பீ., அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று தேவைகளை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 12.11.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்:12.11.2012. இணையதள முகவரி www.rrbchennai.net

செவ்வாய், 30 அக்டோபர், 2012

கதை அல்ல நிஜம் :4 மொழிகள் பேசும் 10 வயது ரிஸ்வான்


குப்பை கூழங்கள் நிறைந்த புனேவின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஜான்முகமதுவின் இரண்டு மகன்களின் ஒருவன் ரிஷ்வான் சேக். அவன் சிறுவயதிலேயே 1 - 100 வரையுள்ள அனைத்து வாய்ப்பாடுகளையும் சரளமாக கூறியுள்ளான். அவன் 5 வயதாக இருக்கும்போதே சிவில் சர்வீஸ் பரீட்சைக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறான். பிறகு பொது அறிவு புத்தகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான போட்டித் தேர்வு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, அவன் அனைத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.

அவனது திறமையைப் பாராட்டி ஜெர்மன் நிறுவனம் ஒன்று ஒரு பன்னாட்டு கல்வி நிறுவனம் ஒன்றில் 5 வருடத்திற்கு அவனை சேர்த்துவிட்டது. பல்வேறு அவமானங்களுக்கிடையே பள்ளியில் முதலாவது மாணவனாக திகழ்ந்தான்.  பின்னர் உலக பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அந்த நிறுவனம் அவனுக்கு அளித்த உதவியை நிறுத்திவிட்டது. 10 வயதாகும் இந்த இளம் அறிவு ஜீவியான ரிஷ்வான் சேக்குக்கு ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளும் நன்றாக தெரியும்.

காய்கறிகள் விற்பனை செய்து வந்த அவனது தந்தையின் கால் விபத்தில் முறிந்துவிட்டது. வீட்டு வேலை பார்க்கும் அவனது தாயாரின் சம்பளத்தில் அவன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறான். வாழ்க்கையைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் ரிஷ்வான் சேக், அப்துல் கலாமைப்போல் ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறான்.

திங்கள், 29 அக்டோபர், 2012

நானோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்


கோழிக்கோடு  பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., நனோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி படிப்பிற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் எம்.எஸ்சி., நனோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, இயற்பியல், அப்ளைடு கெமிஸ்ட்ரி அல்லது பாலிமர் கெமிஸ்ட்சி ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500ம், எஸ்.சி, எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.250ம் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

தகுதியான மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

நவம்பர் 10 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது.

மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.universityofcalicut.info/notification/MtechNanoscience19.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

அரவணைப்பார் யாருமில்லாமல் மியான்மார் முஸ்லிம்கள் தவிப்பு!


மியான்மர் நாட்டில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான  பயங்கர மோதல் ஏற்பட்டு நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இடையில் அமைதி நிலவி வந்தது. இந்த நிலையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாக ரக்கைன் பிராந்தியத்தில் கலவரம் நடந்து வருகிறது. இதில் இதுவரை 82 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடான வங்காள தேசத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே மியான்மரில் இருந்து ஓடி வந்த பல லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனவே மேற்கொண்டு அகதிகளை அனுமதிக்காமல் வங்காள தேச படைகள் அவர்களை விரட்டி அடிக்கின்றன. இதனால் அவர்களால் வங்காள தேசத்துக்கும் செல்ல முடியாமல் , சொந்த பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் அங்குள்ள தீவு பகுதிகளிலும், மலை காடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் இப்படி தஞ்சம் அடைந்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பட்டினி கிடக்கிறார்கள். காடுகளில் கிடைக்கும் உணவு மட்டுமே அவர்கள் பசியாற்றுகிறது.

அகதிகள் தங்கி இருக்கும் பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் சென்று பார்த்தனர். அவர்கள் இந்த அகதிகளுக்கு உடனடியாக உணவு சப்ளை செய்ய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர். எனவே அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

   உலக மக்களின் அரவணைப்பை எதிர்பார்த்து அம்மக்கள் ஏங்கி காத்துக் கிடக்கின்றனர் .

நியூசிலாந்து -கல்வி கற்க எளிய நடைமுறை, குறைந்த கட்டணம்!


எளிதான குடியேற்ற நடைமுறைகள் மற்றும் குறைந்த கல்வி கட்டணங்கள் ஆகியவை, நியூசிலாந்து நாட்டை வெளிநாட்டு மாணவர்கள் விரும்புவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன.

இங்கே படிக்கவரும் சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பிற்கு, பல சிறந்த விதிமுறைகளை இந்நாடு வகுத்துள்ளது. இந்நாட்டின் கல்வி அமைப்பானது, 100க்கும் மேற்பட்ட பாடங்களை வழங்கி வருகிறது மற்றும் வணிகம், மானுடவியல், மேலாண்மை, மருத்துவம், ஐடி, தூய அறிவியல் போன்ற துறைகளில், சர்வதேச நிலையிலான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகம், கேன்டர்பரி பல்கலைக்கழகம், லின்கன் பல்கலைக்கழகம், வெய்கடோ பல்கலைக்கழகம் போன்றவை, இந்திய மாணவர்கள் மத்தியில் பிரபலமானவை.

கல்வி உதவித்தொகைகள்

படிப்பில் சிறப்பான செயல்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்கள், நியூசிலாந்து அரசாங்கம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி அமைப்புகள் போன்றவை வழங்கும் பலவிதமான நிதியுதவிகளைப் பெறலாம். அந்நாட்டின் பல பல்கலைகள், 70 முதல் 100 உதவித்தொகைகள் வரை வழங்குகின்றன.

தர உத்திரவாதம்

உலகின் அனைத்து தொழில்துறை நாடுகளிலும், 15 வயது மாணவர்களின் சாதனைகள் தொடர்பாக, 3 வருடங்களுக்கு 1 முறை நடத்தப்படும் The Programme for International Student Assessment(PISA) என்ற சர்வேயானது, நியூசிலாந்து நாட்டின் பள்ளி அமைப்பிற்கு நற்சான்றிதழ் அளிக்கிறது. Times Higher Education Supplement Top 500 மற்றும் Shanghai Jiao Tong Top 500 போன்ற சர்வேக்களிலும், நியூசிலாந்து பல்கலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும், Newzealand Qualifications Authority(NZQA) என்ற அமைப்பானது, அந்நாட்டின் தேசிய பாடத்திட்டங்கள் மற்றும் தகுதிகளை மேம்படுத்தி, தர நிர்ணயம் செய்கிறது.

விசா விசாரணைகள்

மொத்தம் 3 மாதங்கள் வரை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளை மேற்கொள்ள விசா பெற வேண்டியதில்லை. Newzealand Qualifications Authority இந்த முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற சூழலில் ஒருவர், விசிட்டர் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேசமயம், படிக்கும் காலம் 3 மாதங்களுக்கு மேல் என்றால், மாணவர்கள் அங்கிருக்கும் காலத்தில், தேவைப்படும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

விசா வழிகாட்டுதல்கள்

* பல்கலையிடமிருந்து அனுமதி கடிதம், செல்லத்தக்க பாஸ்போர்ட், கட்டணம் செலுத்தியதற்கான சான்று மற்றும் போதுமான நிதி ஆதாரங்கள் ஆகியவற்றுக்கான சான்றுகளுடன், பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

* மருத்துவ மற்றும் தற்காலிக நுழைவு எக்ஸ்-ரே சான்றிதழை சமர்ப்பிக்கவும்.

* உங்கள் நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச்சீட்டிற்கான ஆதாரம் அல்லது அந்த பயணச் சீட்டை வாங்குவதற்கான நிதி ஆதாரம் ஆகியவற்றுக்கான சான்றுகளை காட்ட வேண்டும்.

* நியூசிலாந்திலிருந்து நீங்கள் திரும்பிவரும் தேதிக்குப் பிறகு, உங்களின் பாஸ்போர்ட் 3 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்குமா? என்பதை உறுதிசெய்து கொள்க.

அமெரிக்க படத்திற்கு எதிராக ஐநா சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் --- சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்


புனித ஹஜ்யாத்திரை நிகழ்வை முன்னிட்டு மக்காவில் நடந்த உலக முஸ்லிம் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மன்னர் அப்துல்லா பேசியதாவது ,முஹம்மது நபியின் வாழ்கையை கொச்சை படுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க படத்திற்கு எதிராக  ஐநா சபையில் கண்டன தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும்.இஸ்லாத்தையும் ,இறைத்தூதர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் .

     அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இன்னொசென்ஸ் ஆப் முஸ்லிம் என்ற படம் உலக முஸ்லிம்கள் அமெரிக்காவை எதிர்ப்பதற்கும் ,அமெரிக்க உணவுப் பொருட்களை  , அவர்களின் கல்விநிலையங்களை புறக்கணிப்பதற்கும் ,தூதரகங்கள் தாக்கப்படுவதற்கும் காரணமாயிற்று .

     சவூதி அரபிய அரசு அந்த படத்தை நீக்குமாறு கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் இருந்ததால் youtube மற்றும் google மீது நடவடிக்கை மேற்கொண்டோம் .அவர்கள் தன நிலையை மாற்றாவிட்டால் ,சவூதி அரசின் நடவடிக்கை அவர்கள் மீது தொடரும் .

         முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில்,நாடுகளில் உள்ள அமைப்புகளுக்கு மத்தியிலும்  கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கபட்டு ,ஒற்றுமைக்கு வழிகோலவேண்டும்.பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல்களையும் ,தீவிரவாதத்தையும் ஒழிக்கலாம் என்று மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் பேசினார் .

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

யுஜிசி: சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை


யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவானது சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து வழங்குகிறது.

2012-13ம் கல்வியாண்டில், முழுநேர எம்.பில் மற்றும் பி.எச்டி., படிப்புகளை மேற்கொள்வதற்காக  756 பேரை தேர்வு செய்து இந்த உதவித்தொகை வழங்க உள்ளது. சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் மௌலான ஆசாத் உதவித்தொகையை பெற்று பயனடையலாம்.

மேலும் இந்த உதவித்தொகையை பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கும் முறை, கடைசி தேதி ஆகிய தகவல்களுக்கு http://www.ugc.ac.in/pdfnews/4864554_MANF-2012-13-DETAILS-UPLOADING.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

CAT - காமன் அட்மிஷன் டெஸ்ட்


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (IIM) கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் தேர்வுதான் காமன் அட்மிஷன் டெஸ்ட், CAT தேர்வு என்று பலராலும் அறியப்படுவது.

இந்தியா முழுவதும் உள்ள ஐஐஎம்களில் பல்வேறு பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் இந்த கேட் தேர்வின் முடிவை, பல முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களும் தங்களது மாணவ சேர்க்கைக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்கின்றன.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை 50 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவமும், தகவல் புத்தகமும் ரூ.1,400க்கு கிடைக்கும். (எஸ்.சி., எஸ்.டி. மாணவராக இருப்பின் ரூ.700 மட்டும்). விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக எடுத்து நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.


கேட் தேர்வு ஆன்லைன் தேர்வாக மட்டுமே நடத்தப்படுகிறது. டேட்டா இன்டர்பிரிடேஷன் அன்ட் லாஜிகல் ரீசனிங், குவான்டிடேட்டிவ் அபிலிடி, வெர்பல் அபிலிடி மற்றும் காம்பிரிஹென்சன் ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். சரியான பதிலை தேர்வு செய்யும் வகையிலான கேள்விகள் கேட்கப்படும் இந்த தேர்வுக்கு இரண்டரை மணி நேரம் ஒதுக்கப்படும். மாணவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். தவறான பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண் உண்டு.

தேர்வு மையங்கள்

இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரூ, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கோவை, டெல்லி, கார்கோன், குவகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், ஜாம்ஷெட்புர், கொல்கட்டா, கோஷிக்கோடு, லக்னோ, மும்பை, நாக்பூர், நொய்டா, பாட்னா, புனே, வாரணாசி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

வியாழன், 25 அக்டோபர், 2012

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்........ !


     வாழ்வு ,வணக்கம் ,வழிபாடு ,மரணம் அனைத்தும் இந்த உலகத்தை படைத்து பாதுகாக்கின்ற ஒரே  இறைவனுக்காக  மட்டுமே என்று உறுதி ஏற்று கொண்டாடும் தியாகத் திருநாள் இன்று , உலகம் நேர்மையின் பக்கம் பயணிப்பதற்கும் ,உலகம் அமைதியாக இருப்பதற்கும் நம் பணிகள் தொடர சபதம் ஏற்ப்போம் !
அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள் !
ஈத் முபாரக் ....!



புதன், 24 அக்டோபர், 2012

மனித குலத்திற்கான மாநபியின் அரபா பிரகடனம் !

1417 ஆண்டுகளுக்கு முன்
 ஹிஜ்ரி 10-ஆம்; ஆண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின்
இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக மதீனாவிலிருந்து புனித மக்காவை நோக்கிப்புறப்பட்டபோது ஆயிரக்கணக்கான நல்லறத்தோழர்களும் அவர்களோடு பயணமாகினர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை அணுகிய போது, அரபு நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும், ஏன் வெளிநாடுகளிலிருந்தும் கூட ஆயிரமாயிரம் ஹாஜிகள் பெருமானார்(ஸல்)அவர்களின் திருக்கூட்டத்துடன் வந்து இணைந்தனர்.அவர்கள் ஒன்றேகால் இலட்சத்தையும் தாண்டிவிட்டனர்.

அரபாத் பெருவெளியில் திரண்டது இந்த மனித வெள்ளம்! எங்கு நோக்கினும் மனிதக்கூட்டந்தான்! இருபத்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் பெருமானாரைப் பேசவும் விடாமல் விரட்டியடித்த அதே மக்கள் இன்று மக்காவின் அரபாத் பெருவெளியில் குழுமினர்.

இந்த இருபத்து மூன்றாண்டுகளிலே எப்படிப்பட்ட அற்புதம் நடந்துவிட்டது! என்பதை எண்ணிப்பார்க்கவே பெரும் அதிசயமாக உள்ளது.

பெருமானார்(ஸல்)அவர்களுக்கு வாழ்வே இல்லையெனத் துரத்தியடித்த அதே மக்காநகரம் இன்று அவர்களின் ஒரு சொல்லுக்காகக் காத்துக்கிடந்தது!

பெருமானாரைக் கொலைசெய்வதையே தங்கள் இலட்சியமெனக் கொண்டிருந்தவர்கள், இன்று அவர்களது உயிர்த் காக்கும் தோழர்களாய், அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்வதே தங்களின் பாக்கியம் என நினைப்போராய்ச் சுற்றி நின்றனர்!!
பெருமானாரை இரத்தக்காயத்துடன் விரட்டியடித்த தாயிப் நகர மக்கள், இன்று அவர்களது ஆதரவாளர்களிலே முன்னணி வீரர்கள்!

பெருமானார் அவர்களைத் தூற்றுவதையும், தீங்கிழைப்பதையும், தொழிலாகக் கொண்டிருந்தோர், பெருமானாரின் புகழ்பாடுவதை பெருமையாக எண்ணினர். இன்று!

சுருங்கச்சொன்னால், ஒரே அணியில் மாபெரும் சக்தியாக எதிர்த்து நின்ற அந்த அரபு நாடு இன்று அவர்களது சுட்டுவிரலிலே அசைந்தாடியது. இதுதான் இறைவன் பேரருள் !

பெருமானார்(ஸல்) அவர்கள் மேடையிலே ஏறிநின்றார்கள்.சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மக்களுக்கு மேற்கொண்ட பிரமாண்டமான அந்த மக்கள் வெள்ளத்தின் கண்களும் காதுகளும் கூர்மையாயின. எங்கும் நிசப்தம்! ஊசி விழுந்தால்கூட கேட்கத்தக்க அமைதி!

மனித குலத்திற்கு அழகிய முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய பெருமானார்
அங்கு கூடிய இருந்த மக்களை நோக்கி உரையாற்ற துவங்கினார்கள் ...,
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’ ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

பிரிவின் முன்னறிவிப்பு
( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும்.(இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில்தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

குற்றவாளியே தண்டிக்கப்படவேண்டும் 
( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல., வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ, பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

அராஜகம் செய்யாதீர்கள்!
( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட)கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)
                                                                            
                                                                                    வட்டி ஒழிப்பு 
( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது.அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்…

பெண் உரிமை 
மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு. அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

சகோதரத்துவம் 
மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள!

பிறர் உடைமைகள் புனிதமானவை 
ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன்… அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன! இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

நேரான பாதை 
மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றிவாருங்கள்.
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திறகுச் செல்வீர்கள்.

மறுமைக்கு அஞ்சுதல் 
மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது 
மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல.வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தைவிடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

இஸ்லாம் முழுமை படுத்தப்பட்டது  
( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா?இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?’நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்!இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,’ அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!
இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள். மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்… ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர். (ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது,இப்னு ஜரீர்)

உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கை பிரகடனம் செய்த மனிதப் புனிதர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வழி பற்றி நடந்தால் , அவர்களின் நெறி பற்றி நடந்தால் உலகம் அமைதி பெரும் என்பதில் எள்ளின் முனை அளவுகூட சந்தேகம் இல்லை .அந்த பெருமானாரின் வழியை பின்பற்றவும் , அதனை உலக மாந்தருக்கெல்லாம் பரப்பவும் ,இந்த ஈகைத் திருநாளில் சபதம் ஏற்ப்போம் !

செவ்வாய், 23 அக்டோபர், 2012

வடசென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவர் மரணம் ..!

ஜனாப் .ரப்பானி அப்துல் குத்தூஸ் சாஹிபு ...................

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்ட வரலாற்றில் முக்கியமானவர் ;ஏனென்றால் ,சென்னையில் முஸ்லிம் லீக்கின் மூலம் பல்வேறு பதவிகளை அனுபவித்தவர்கள் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது அவர்களை விட்டு ,கட்சியை விட்டு ஓடிய கால கட்டத்தில் , முஸ்லிம் லீக்கின் கொடியை சென்னை வீதிகளில் தூக்கிப் பிடித்த மனிதர் அவர் .

மணிச்சுடருக்காக கடைசி காலம் வரை தன்னால் இயன்றவரை பாடுபட்டவர் ,பணியாற்றியவர் . சிராஜுல் மில்லத் மற்றும் முனீருல் மில்லத் ஆகியோரின் அன்பையும் ,முஸ்லிம் லீக்கின் அடிமட்ட தொண்டன் வரையிலானோரின் மதிப்பை பெற்றவர் ,வல்ல அல்லா அவரின் ,நற்செயல்களை ஏற்றுக்கொண்டு ,பிழைகளை பொருத்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!    -- ஆசிரியர் 


நெல்லை மாவட்டத்தில் சேதமடைந்த பஸ்கள் இயக்கம் பயணிகளுக்கு ஆபத்து


நெல்லை யில் அரசு மற்றும் தனியார் மூலம் இயக்கப்படும் பஸ் கள் ஓட்டை உடைசலாக காணப்படுகின்றன. இத னால் பயணிகளின் உயி ருக்கு பாதுகாப்பற்ற சூழ் நிலை நிலவுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 கோட்டங்கள் உள்ளன. இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான பஸ்கள் பல் வேறு பகுதிகளுக்கு இயக் கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் பராமரிப்பு இல்லாமல் பழு தடைந்த நிலையில் உள் ளன. இதனால் பொதுமக் கள் தினமும் அவஸ்தை பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.

பொதுவாக புதிதாக இயக்கப்படும் ஒரு பஸ் அதிகபட்சம் 5 லட்சம் கிமீ தூரம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். பின்னர் அந்த பஸ்சின் இன்ஜினை மறு சீரமைப்பு செய்து அதில் தேய்மானம் அடைந்த உதிரி பாகங்களை மாற்ற வேண்டும். ஆனால் நெல்லை கோட்டத்தில் அதிகமான பஸ்கள் 12 லட்சம் கி.மீ. தாண்டியும் கிராமபுறங்களுக்கு இயக்கப் பட்டு வருகின்றன. இதில் மேலப்பாளையம், கோபா லசமுத்திரம், மேலச்செவல் போன்ற பகுதிகளுக்கும் பழைய பஸ்கள் இயக்கப்ப டுகின்றன.
இதற்கு காரணம் 1997ம் ஆண்டுக்கு பிறகு போக்குவ ரத்து கழகத்தில் தொழில் நுட்ப பணியாளர்கள் பற் றாக்குறை ஆகும். இதனால் பஸ்கள் பராமரிப்பு பணி மோசமானது. இந்நிலையில் நெல்லை கோட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 263 புதிய பஸ்கள் தற்போது பல பகுதிகளில் இயக்கப் பட்டு வருகின்றன. ஆனால் கிராமப்புறங்களுக்கு பழைய பஸ்கள் இயக்கப்படு வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதேபோல் நெல்லை மாநகர பகுதியில் இயக்கப்ப டும் தனியார் பஸ்கள் பல ஓட்டை உடைசலாக உள் ளன. இந்த பஸ்கள் வருமா னத்தை மட்டுமே குறிக்கோ ளாக கொண்டு இயக்கப்படு கின்றன. படிக்கட்டுகள் உடைந்தும், பஸ்சின் பின் பக்க கண்ணாடி இல்லாம லும் பஸ்களை இயக்கும் நிலை நீடித்து வருகிறது. மினி பஸ்கள் பல பராமரிப் பின்றி பொதுமக்களையும், இரு சக்கர வாகன ஓட்டிக ளையும் மிரட்டும் வகையில் இயக்கப்படுகின்றன.
சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அள வுக்கு அதிகமாக பொருட் களை ஏற்றிச்சென்றால் போக்குவரத்து போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் படிவரை பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை அவர்கள் கண்டுகொள்வ தில்லை. தற்போது வண் ணார்பேட்டை வணிக நிறு வனங்களின் கூடாரமாக மாறிவருகிறது. இதனால் பயணிகளை ஏற்றி இறக்க அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் முண்டியடித்து செல்லும் நிலை தொடர்கிறது.

இதனை தவிர்க்க போக் குவரத்து போலீசார் கண் காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து போக்குவ ரத்து விதிகளை மீறி இயக் கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக நல ஆர்வலர் கள் தெரிவித்துள்ளனர்.

வேலைக்காக மும்பைக்கு அழைத்து செல்லப்பட்ட 17 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

கடலூர் மாவட்டத்திலிருந்து வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட 17 பழங்குடி இன சிறுவர், சிறுமியர்கள் மும்பையில் மீட்கப்பட்டனர்.பழங்குடி இருளர் மக்கள் கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மரியநாதன், சின்னத்தம்பி, கோவிந்தன், ராஜா ஆகியோர் கடலூர் சங்கொலிக்குப்பம் பகுதியில் இருளர் மக்களிடம் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.மும்பையில் கவரிங் நகை செய்யும் வேலை. பிள்ளைகளை அனுப்புங்கள். மாத சம்பளம் 4,500 உங்கள் பெயருக்கு அனுப்பி விடுகிறோம். முன் பணமாக 5 ஆயிரம் தருகிறோம் என்றனர். ஆசை வார்த்தையை நம்பிய இருளர் மக்கள் தங்கள் 17 பிள்ளைகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மும்பைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மும்பை மலாடு என்ற பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கவரிங் நகைகள் செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 3 மாதங்கள் கழிந்த நிலையில் சம்பளம் வரவில் லை, பிள்ளைகளுடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் டி.எஸ்.பேட்டையை சேர்ந்த கண்ணப்பன், சுப்பிரமணியம், ஆகியோருக்கு மும்பை ஏஜன்டுகள் போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் பிள்ளைகளை காணவில்லை எனக்கூறி தொடர்பை துண்டித்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் மூலம் கடந்த 17ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து குழந்தைகளை மீட்டு தருமாறு மனு அளித்தனர். குழந்தைகளை மீட்க வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது. அப்போது மும்பையில் காணவில்லை எனக்கூறப்பட்ட 3 சிறுவர்களும் டி.எஸ்.பேட்டைக்கு வந்தனர். அவர்களிடமிருந்து போன் நம்பர்களை பெற்ற தனிக்குழுவினர் மும்பையில் சிறுவர்கள் வேலை செய்து வந்த கம்பெனிகளை தொடர்பு கொண்டனர். உடனே அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள். இல்லை என்றால் சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த 14 சிறுவர், சிறுமிகள் கடந்த 20ம் தேதி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் 21ம் தேதி வேலூர் காட்பாடி வந்து அங்கிருந்து நேற்று காலை கடலூர் வந்து சேர்ந்தனர்.

சுற்றுச்சூழலியல் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்


இயற்கை சமநிலையை பாதுகாக்க, உலக நாடுகள் சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பற்றிய படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது படிப்பாக மட்டும் பார்க்கப்படாமல் சமூக சேவையாகவும் பார்க்கப்படுகிறது. அதனால் சுற்றுச்சூழலில் உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் இத்துறையில் பணிபுரிய விரும்புகின்றனர். சுற்றுச்சூழலியல் துறையில் இளநிலை, முதுநிலை மற்றம் டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன.

தகுதிகள்:
சுற்றுச்சூழல் பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர், பிளஸ் 2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். அறிவியல் அறிவு, ஆராய்ச்சியில் ஆர்வம் மற்றும் தகவல் தொடர்பு திறன் இத்துறைக்கு இன்றியமையாதவை.

சுற்றுச்சூழலியல் பட்டப்படிப்புகள்:
* பி.எஸ்சி., சுற்றுச்சூழலியல் அறிவியல்
* எம்.எஸ்சி., சுற்றுச்சூழலியல் அறிவியல்
* பி.இ., சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்
* எம்.டெக்., சுற்றுச்சூழல்

இன்ஜினியரிங்:
* எம்.டெக்., சுற்றுச்சூழலியல் அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்
* எம்.டெக்., எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
* டிப்ளமோ - சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலியல் அறிவியல் போன்ற படிப்புகள் இந்த துறையில் காணப்படுகின்றன.


கல்வி நிறுவனங்கள்:
இந்தியாவில் சுற்றுச்சூழலியல் கல்வி நிறுவனங்கள்.
* விவசாய பல்கலைக்கழகம், கோவை
* ‘ஸ்கூல் ஆப் என்விரான்மென்டல் சயின்ஸ்’, டில்லி
* எஸ்.என்.டி.டி., பெண்கள் பல்கலைக்கழகம், மும்பை
* டில்லி பல்கலைக்கழகம், டில்லி
* பி.இ.எஸ்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், மாண்டியா
* எல்.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஆமதாபாத்

வேலைவாய்ப்புகள்:

சுற்றுச்சூழலியல், ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களில் இத்துறையினருக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுற்றுச்சூழலியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. சுகாதார அமைப்புகள், இயற்கை சார்ந்த சமூக அமைப்புகள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

தகவல் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த துறையில் தனியார் நிறுவனங்களில் துவக்கத்தில் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இயற்கையை காப்பாற்றும் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் மனநிறைவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திங்கள், 22 அக்டோபர், 2012

ஜெம்மாலஜி (Gemology) துறை வேலை வாய்ப்புகள்


ரத்தினக் கற்கள், வைரங்கள், தங்க நகைத்தயாரிப்பு மற்றும் நகை வடிவமைப்பு போன்ற துறைகளை தொழில்நுட்ப ரீதியாக படிப்பது "ஜெம் மாலஜி'.
இன்றைய நிலையில் தொ ழில் நுட்பம் நன்கு வளர்ந் துள்ளதால், கணினி அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
விலையுயர்ந்த கற்களின் அமைப்பு மற்றும் பண மதிப்பு அடிப்படையில், அவற்றை அடையாளப்படுத்தி, தரப் படுத்தி மற்றும் வகைப் படுத்துவது ஒரு ஜெம்மால ஜிஸ்டின் பணியாகும். மேலும் அவை சேதமாகாமல் தடுக்கும் வழிகளையும் அவர்கள் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். விலையுயர்ந்த கற்கள்(ஜெம்ஸ்) மற்றும் தங்க நகை தொழி லானது, இந்தியாவில் அதிக பணம் புரளும் தொழில்களில் ஒன்றாகும். இந்தியாவின் வைரத் தொழில்துறையானது, உலகளவில் புகழ்பெற்ற ஒன்று.
மதிப்புத் தரக்கூடியதாகவும், ஏற்றுமதிப் பொருளாகவும், அழகுப் பொருளாகவும் இருப் பதால் வைரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நமது குணாதிசயத்திலும், அதிர்ஷ்டத்திலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பொரு ளாக விலையுயர்ந்த கற்கள் இன்றைய நிலையில் மதிக்கப் படுகின்றன.
மேலும், தங்கம் மற்றும் வைரங்கள் சேர்க்கப்பட்டு, புதிய புதிய டிசைன்கள் அவ்வப்போது அறிமுகப் படுத்தப்படுவதால், இத்துறை யில் நிபுணர் களுக்கான தேவை என்றும் உண்டு.
தேவைப்படும் பண்புகள்: சிறந்த கிரகிக்கும் திறன், கற்பனை மற்றும் படைப் பாக்கத் திறன், வண்ணப் பொருத்தம் பற்றிய அறிவு, அழகுணர்ச்சி, பாரம்பரிய வடிவமைப்புகளைப் பற்றிய அறிவு, கடின உழைப்புடன் சிறந்த தகவல்தொடர்புத் திறன் போன்றவை அவசியம். இவற் றுடன் மக்களின் ரசனைகள் மற்றும் மாறும் சூழலைக் கருத்தில்கொண்டு செயல்படு பவர்களுக்கு உகந்த துறை இது.
ஒருவர் இத்துறையில் வடிவமைப்பாளர், மேலாளர், உற்பத்தியாளர், ஆராய்ச்சியா ளர், தொழில்நுட்ப மதிப்பீட் டாளர் அல்லது இத்துறை சார்ந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் போன்ற பலவிதப் பணிகளில், தனக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்யலாம். ஒரு மாதம் சான்றிதழ் படிப்பு முதல் டிப்ளமோ, ஓர் ஆண்டு அட்வான்ஸ்ட் படிப்பு என பல்வேறு நிலைகளில் துறை சார்ந்த படிப்புகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்:

Arch Academy of Design, Jaipur
Delhi Gems and Jewellery Institute, New Delhi
Gemcraft Jewellery Institute, New Delhi
Gemmological Institute of India, Mumbai
Indian Institute of Gemmolgy, New Delhi
Indian Institute of Gems and Jewellery, New Delhi
Indian Institute of Jewellery, Mumbai
National Institute of Jewellery Design & Technology, New Delhi
St. Xavier's College, Mumbai
Shingar Institute & Kolkatta.

பரந்து விரிந்த வேதியல்துறையும் அதன் வேலைவாய்ப்புகளும் !


அறிவியலின் ஒரு துறையான வேதியியல், உயிர்பொருள் சார்பில்லாதது (Inorganic), உயிர்பொருள் சார்ந்தது (organic) மற்றும் பவுதீகம் தொடர்பானது (Physical) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலங்களில் இத்துறையில் நவீன வளர்ச்சி ஏற்பட்டு, பயோகெமிஸ்ட்ரி(உயிர் பொருட்களிலுள்ள அடிப்படை கூறுகளை ஆராய்தல்), நியூரோகெமிஸ்ட்ரி(நரம்பியல் அமைப்பின் ரசாயனம் செயல்பாடு பற்றி ஆராய்தல்) போன்ற துறைகள் உருவாகியுள்ளன.
ரசாயன தொழில்நுட்பம்: தொழில்நுட்பம் என்பது பொறியியலின் பயன்பாடு. பல்வேறு துறைகள் மற்றும் தொழிற்சாலைகளில், செயல்பாடுகள், நடைமுறைகள், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், கட்டுப்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. ரசாயன ஆய்வாளர்கள் பொதுவில் ரசாயன தொழில்நுட்ப நிபுணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதேசமயம், ஆல்கஹால் தொழில்நுட்ப நிபுணர், செராமிக் தொழில்நுட்ப நிபுணர், பைபர் தொழில்நுட்ப நிபுணர், சணல் தொழில்நுட்ப நிபுணர், உணவு தொழில்நுட்ப நிபுணர், எரிபொருள் தொழில்நுட்ப நிபுணர், கண்ணாடி தொழில்நுட்ப நிபுணர், லெதர் தொழில்நுட்ப நிபுணர், மர தொழில்நுட்ப நிபுணர் என்று துறைவாரியாகவும் அழைக்கப்படுகிறார்கள்.
ரசாயன பொறியியல் என்பதிலிருந்து, ரசாயன தொழில்நுட்பம் என்பது அதிகம் மாறுபட்ட ஒன்றாகும். தொழில்நுட்பம் என்பது, மேம்பாடு மற்றும் உற்பத்தி நோக்கத்திற்கான செயல்பாட்டு இயக்கம் தொடர்பானதாகும். பொறியியல் என்பது வடிவமைப்பு, கட்டுமானம், நிறுவுதல் மற்றும் பிளான்டுகளின் இயக்கம் மற்றும் ரசாயன பொருட்களை தயாரிப்பதற்கான உபகரணங்கள் தொடர்பானது.

பணியின் தன்மை: பெரியளவிலான ரசாயனம் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்கான செயல்முறைகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துவது ரசாயன தொழில்நுட்ப நிபுணரின் பணி. கச்சாப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பரிந்துரைக்கப்பட்ட வகையில் வாங்கப்பட்டுள்ளதா மற்றும் தயாரிப்பு பணிகள் முறையாக கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது இவரின் முக்கியப் பணி. குறைந்த விலையில் பொருட்கள் வாங்குவதை மேற்பார்வையிடுவதும் இவரின் பணி. இதைத்தவிர, புதிய கச்சாப் பொருட்களை கண்டுபிடித்தல், இறக்குமதி செய்யப்படும் கச்சாப் பொருட்களுக்கு மாற்றாக உள்ளூரிலேயே புதிய கச்சாப் பொருளை கண்டுபிடித்தல், கச்சாப் பொருட்கள் மற்றும் முடிவுப் பொருட்களின் தரத்தை மதிப்பீடு செய்தல் போன்றவையும் முக்கிய பணிகள்.
ஒரு தொழில்நுட்ப நிபுணரின் பணியானது, ஆராய்ச்சி-உற்பத்தி-நிர்வாகம் என்று பரந்த அளவில் வியாபித்துள்ளது. தயாரிப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு, விற்பனை, தொழிலாளர் நலம் ஆகிய பல துறைகளையும் கவனிப்பதால், முழு நிறுவன செயல்பாட்டிற்கும் அவர் பொறுப்பாகிறார்.
மேலும், இவரது பணியில், ஜூனியர் தொழில்நுட்ப நிபுணர்கள், ஆராய்ச்சி பணியாளர்கள், இயக்குபவர்கள், மெக்கானிக்குகள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் ஆகியோர் துணையாக இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்திற்குள்ளேயே பலவிதங்களில் வேதியியல் தொழில்நுட்ப வல்லுனர் பணியாற்றுகிறார். வெளியே செல்லும் பணி இவருக்கு இல்லை. தூசு படிந்த, அழுக்கான, சூடான, பொருட்கள் அடைத்து வைக்கப்பட்ட, நாற்றமடிக்கும், ஈரமான என்பது போன்ற பலவித அசவுகரிய சூழல்களிலும் அவர் பணிபுரிய வேண்டியதிருக்கும். மேலும், ஆசிட், பலவித ரசாயனங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் அவர் கையாள வேண்டியிருக்கும்.

இப்பணிக்கான தகுதிகள்: ஒருவர் ரசாயன தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிய, பி.டெக்/பி.டெக்ஸ்ட்/பி.எஸ்சி(டெக்) ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் தொழில்நுட்பம் படித்திருக்க வேண்டும். இத்தகைய படிப்புகளில் சேர, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை படித்திருக்க வேண்டும். மேலும் இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது, மெரிட் அடிப்படையிலும், போட்டித் தேர்வுகளின் அடிப்படையிலும் நடைபெறுகிறது.
சில கல்வி நிறுவனங்கள்,(சில பாலிடெக்னிக்குகள் உட்பட), டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், செராமிக் தொழில்நுட்பம், இனாமல்(உலோகத்திற்கு அழகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பளபளப்பான பொருள்) தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்ட் தொழில்நுட்பம், லெதர் தொழில்நுட்பம், லெட்டர் ப்ரெஸ் பிரின்டிங், பிரின்டிங் தொழில்நுட்பம் ஆகிய பலவித துறைகளில் 2 வருடங்கள் முதல் 4 வருடங்கள் வரையிலான படிப்புகளை வழங்குகின்றன. கான்பூரிலுள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட், 1 வருட சுகர் டெக்னாலஜி படிப்பை நடத்துகிறது. மேலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ நிலைகளில் உயர்தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்புகள்: ரசாயன தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான வேலைவாய்ப்பை பல தொழில் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆசிட், ஆல்கலீஸ், உப்பு, கொழுப்பு, சோப்பு, எண்ணெய், காய்கறி எண்ணெய், களிமண், கண்ணாடி, மருந்துகள், பூச்சிக்கொல்லி, வெடிபொருட்கள், மெழுகு, பசை, எரிசாராயம், வர்ணங்கள், பூச்சுகள், சாயம், பெட்ரோலிய பொருட்கள், ரப்பர், ரேயான், பேப்பர் உள்ளிட்ட பல பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு உண்டு. அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள பலவித ஆராய்ச்சி ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு உண்டு.
இத்துறையில், தயாரிப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பாகவே பலருக்கு பணிகள் கிடைத்தாலும், சிலருக்கு சந்தை ஆராய்ச்சி, பிளான்ட் வடிவமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சோதனை, கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியப் பணி, விற்பனை மற்றும் சேவைப் பணி, டெக்னிக்கல் ரைட்டிங் மற்றும் ஜர்னலிசம் போன்ற துறைகளிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

ரசாயன பொறியாளர்: ரசாயனங்கள், பெட்ரோலிய எரிபொருட்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்கள், பாலிமர்கள், சிமென்ட் மற்றும் சுண்ணாம்பு, தாதுக்கள் மற்றும் உலோகங்கள், பேப்பர்கள் மற்றும் பலகைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றின் உற்பத்தி செயல்பாட்டை வடிவமைத்தல் மற்றும் இயக்கம் ஆகியவற்றுக்கு ரசாயன பொறியாளர் பொறுப்புடையவர். மேலும் இவர்கள், தண்ணீர் அல்லது கழிவுகளை கையாளுதல், சூழல் விதிமுறை போன்ற பிரிவுகளில் பணியாற்றலாம் அல்லது உலோகவியல் அறிஞராக பணியாற்றலாம்.
புதிய மற்றும் திறன்வாய்ந்த செயல்பாடு, உபகரணங்களை பாதுகாப்பாகவும், சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு நேராதவாறும் பயன்படுத்தல், தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டை ஆய்வுசெய்து, அதை இன்னும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் எப்படி மாற்றலாம் என்பன உள்ளிட்ட பலதரப்பட்ட விஷயங்களிலும் ரசாயன பொறியாளர் பணியாற்றுவார்.

தேவைப்படும் பண்புகள்: அடையாளப்படுத்தும், பகுப்பாய்வு செய்யும், பிரச்னைகளை தீர்க்கும் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் வேண்டும். மேலும் நல்ல படைப்பு திறனும், நடைமுறை தேவைகளை புரிந்து செயல்படும் திறனும், மேற்பார்வையாளர் இல்லாமல் பணியாற்றும் தன்மையும் இருக்க வேண்டும்.

அனலிடிகல் கெமிஸ்ட்: பாலில் உள்ள நச்சுத்தன்மை, ஸ்டீலில் உள்ள மாங்கனீஸ் அளவு, சாக்லேட் தயாரிக்க உதவும் கச்சாப் பொருட்களை சோதனையிடுதல், பெயின்ட் தயாரிக்க உதவும் கரிமத்தின் தூய்மையை சோதனை செய்வது போன்ற பல பணிகள் இவருக்கு உள்ளது.
இதற்கு தேவையான பண்புகள்: நல்ல தொழில்நுட்ப திறன், வேதியியல் பாடத்தில் தீவிர ஆர்வம், ஒருங்கிணைக்கும் திறன் போன்றவை சில முக்கிய தகுதிகளாகும்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சேவையுடன் சம்பாதிக்க ஆகாயவியல் துறை (Aerospace)


பொறியியல் பாடங்களில் வித்தியாசமானதும் மாணவர்களுக்குப் புதிய பாதையைக் காட்டும் துறையுமான ஆகாயவியல் (Aerospace) பாடத்தை கன்னியாகுமாரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைகழகம் கற்றுத் தருகிறது. இது நான்காண்டு படிப்பாகும். 2009-ம் ஆண்டு இந்தத் துறை தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆகாயவியல் துறையின் உட்பிரிவுகளான விமானப் பகுதிகளை வடிவமைத்தல், பிரித்தல், பரிசோதித்தல்,, விண்வெளிக் கலன்களைக் கட்டுதல், ஏவுதல் மற்றும் விண்வெளி சார்ந்த பணிகளைத் தெரியப்படுத்தி, அதில் வல்லுநர்களாக்குவதே பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்கிறார் பல்கலை வேந்தர் ஏ.பி.மஜீத்கான். இத்துறையில் மிகவும் புகழ்பெற்ற பேராசிரியர்கள் பல்கலைகழக மாணவர்களுக்கு ஆகாயவியல் சார்ந்த அனைத்து உட்பிரிவுகளின் நுணுக்கங்களையும் தெளிவாகக் கற்றுக்கொடுக்கின்றனர்.

இங்கு அனைத்துப் புதிய தொழில்நுட்பங்களுடனும் கல்வி கற்றுத் தரப்படுகிறது. பயிற்சிக்குத் தேவையான நவீன உபகரணங்கள் அடங்கிய பரிசோதனைக் கூடம், மற்றும் புஷ்பக், செஸ்னா, லியர்ஜெட் ஆகிய விமானங்கள் மாணவர்களின் பயிற்சிக்காக வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் விமானத்தில் பறப்பது,பறத்தலைக் கட்டுப்படுத்துவது போன்றவையும் கற்றுத் தரப்படுகிறது.

இத்துறையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறும் பட்டதாரிகள் விமானக் கட்டுமானம், விமானம் ஓட்டுதல், வடிவமைத்தல், விமானப் போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் ஐ.எஸ்.ஆர்.ஓ. போன்ற பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புப் பெற்றிடப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், எதிர்காலத்தில் உலக அரங்கில் இந்தியா தனித்திறமையுடன் விளங்க இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டு, தென் தமிழகத்தில் 8-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு பயிலுகின்ற மாணவர்களை நுழைவுப் பரீட்சை அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அவர்களில் 500 பேருக்கு ஆண்டுதோ

றும் 15 நாள்கள் அறிவியல் ஆய்வுக்கூடங்களில் பயிற்சியளிக்கிறது. அவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக இப்பல்கலைக்கழகம் இதைக் கடந்த 11 ஆண்டுகளாக செய்து வருகிறது.

சனி, 20 அக்டோபர், 2012

இளைய சமுதாயமே ! நம் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம் !


                  தன் வரலாற்றை அறியாத சமுதாயம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.எனவே , சமுதாயம் ,சமுதாயம் என்று நாள் தோறும் சாலை மறியல் ,ஆர்ப்பாட்டம்  , மக்களிடம் வசூல் போன்றவற்றில் தீவிரமாக உள்ள நாம் ,நம் சமுதாயத் தலைவர்கள் நம் சமுதாயம் முன்னேற செய்த பணிகள் என்ன என்பதனை சிந்தித்து பார்க்க கடமை பட்டுள்ளோம் .

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ,தமிழகத்தை பொருத்தவரை முஸ்லிம் சமுதாயத்திற்கென்று இருந்த ஒரே கல்லூரி 1919 - ஆண்டு வாணியம்பாடியில் ஆரம்பிக்கப் பட்ட இஸ்லாமியக் கல்லூரி ஒன்று மட்டும் ஆகும் .

     இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு , அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை ,அதன் தனித்துவத்தை அகற்றுவதற்கு  அன்றைய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தபோதும் , சென்னையில் முஹம்மதன் கல்லூரியின் பெயரை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்த போதும் கடுமையாக  எதிர்த்து போராடிய நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத்தும் அவர் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சமுதாயத் தளபதிகளும் ,சமுதாயத்தின் நிலை குறித்தும் , தங்களுக்கென்று கல்வி நிலையங்கள் வேண்டும் என்று சிந்தித்து அதனை செயல் படுத்தியும் காட்டினார்கள் . அசைத்து பார்க்க நினைத்த ஆட்சியாளர்களை , அதிரவைத்தது  நம் சமுதாயத் தலைவர்களின் செயல்பாடுகள்.

     ஆம் ,ஆட்சியாளர்களின் செயல்பாடுகளையும் , கல்வியில் நம் சமுதாயத்தின் நிலையையும் ஆலோசித்து , நமக்கென்று நாமே கல்லூரிகளை உருவாக்க முடிவு செய்தார்கள் .

   முடிவு செய்த மாத்திரத்தில் , காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் , சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது , M .M.பீர் முஹம்மது சாஹிபு போன்ற நாவன்மை மிக்க  தன் போர்படை தளபதிகளை அழைத்துக் கொண்டு ,சிங்கப்பூர் , மலேசியா  , பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று நம் சமுதாய பெரு மக்களை சந்தித்து , பள்ளிவாசல்கள் தோறும் சென்று சென்று இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் கல்வி நிலை உயர வேண்டும் என்பதனை எடுத்துக்கூறி , மடிப்பிச்சை ஏந்தி வசூல் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபாயை கொண்டுவந்து , அன்று பணக்காரர்கள் கூடும் ஜாலி கிளப் இருந்த இன்றைய சென்னை ராயபேட்டையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள் .

      அவ்வாறு வாங்கப் பட்ட இடத்தில்தான் 1951 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான்  இன்று சென்னையில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் "புதுக்கல்லூரி"ஆகும் .  அப்படி உருவாக்கிய அந்த கல்லூரியின் ,ஒவ்வொரு வளர்ச்சியிலும் காயிதே மில்லத் (ரஹ் ) கண்ணும் கருத்துமாக இருந்தார்கள் . அதனை தொடர்ந்து வந்த சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது சாகிபு அவர்கள் 14 ஆண்டுகள் அந்தக் கல்லூரியின் தலைவராக இருந்து அந்தக் கல்லூரியை படிப் படியாக உயரச் செய்தார்கள் .

     இன்றைக்கும் அந்தக் கல்லூரி இன்றைய சமுதாயத்தை பார்த்து கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளது , அதனை இன்றைய இளைய சமுதாயம் மறந்து விடுகின்றது . வீதி தோறும் உணர்ச்சிகளை தூண்டி , வசூல் செய்கின்றீர்களே, என்னை உருவாக்கி ,என்னை வளரச் செய்த தலைவர்கள் போன்று , உங்களால் ஒரு கல்வி நிலையத்தை உருவாக்க முடியவில்லையா ? என்று கேள்வி எழுப்பிக்  கொண்டுள்ளது .

இன்ஷாஅல்லாஹ் ,கேள்விகள் தொடரும்................

   

நமக்கு நாமே மின்சாரம் ! வழிகாட்டுகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்


செப்டம்பர் 24 முதல் மார்ச் 21 வரை பகல் நேரம் குறைந்து இரவு நேரம் அதிகமாக இருக்கும் என்கிறது அறிவியல். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் இருண்டுதான் கிடக்கிறது. இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்று கொதித்தெழுந்து, அதற்கா கவே ஆட்சியை மாற்றினோம் என்று சொன்ன மக்கள் 16 மணி நேரத்தைத் தாண்டிக் கொண்டி ருக்கும் மின்வெட்டைக் கண்டு மிரண்டுபோய் இருக்கிறார்கள். தொழில் நகரங்களெல்லாம் மின் விடுமுறை விடுவதென்று தீர்மானித் தால் வாரத்தின் 6 நாட்கள் விடுமுறை விட்டாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளன. மிக்சி, கிரைண்டர், பேன், லேப்டாப் என மின்சாரத்தில் இயங்கும் பொருட்களெல்லாம் இலவசமாகத் தருவதாகச் சொன்ன அரசு, இவற்றை இயக்க மின்சாரம் தராததால், வாங்கிய மிக்சி,கிரைண்டரை மூலையில் கிடத்தி விட்டு, மூலையில் கிடந்த ஆட்டுக் கல்லை எடுத்து அம்மிகொத்தித் தயார்செய்து வைத்திருக்கிறார்கள்.

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தனது விற்பனையை விரிவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் ஓம்சக்தி ஆட்டுக்கல் விற்பனையாளர்.

செய்முறைத் தேர்வு நேரத்தில் மின் துண்டிக்கப்படாததால், தங்கள் மதிப்பெண்களைக் குறித்துக் கவலைப்பட்ட மாணவ, மாணவியர் தேர்வுக்குப் படிப்பதற்கே விளக்குகளற்று விழிபிதுங்கி நிற்கின்றனர். இன்வெர்ட்டர்களில் மின்சாரத்தைச் சேமித்துப் பயன்படுத்தி வந்தவர்கள்; சேமிப்பதற்கும் மின்சாரம் இல்லாததால் வீணாக்கிப்போன பேட்டரிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெருகும் மின் தேவையை எப்படி நிறைவு செய்வது என்ற திட்டமிடல் இல்லாமல் 2001-_06 அ.தி.மு.க. அரசு செயல்பட்டதன் காரணமாக, 2006ல் அமைந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தின் மின் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.

2008க்குப் பிறகு மின் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக எழுந்த நேரத்தில், பிற மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கி, தற்காலிகமாகப் பிரச்சினையைக் - குறைத்த கலைஞர், நிரந்தரத் தீர்வுக்காக புதிய மின் திட்டங்களை தொடங்கினார். அவை 2013ல் பயன்தரத் தொடங்கும் என்ற நிலையில் மீண்டும் 2011ல் வந்தது அதிமுக அரசு! தி.மு.க.வின் மின்திட்டங்களை மனதில் வைத்து 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் தருவேன் என்று சொன்ன ஜெயலலிதா அரசு, அந்தத் திட்டங்களையும் காலத்தே முடித்து பயனுக்குக் கொண்டுவரத் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் வழக்கம்போல் மின்வெட்டில் தவிக்கின்றன. மாற்று மின்சக்தியை முன்னிறுத்த வேண்டிய அரசு அதனைப் பெரிதும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது. கொஞ்ச காலமே சூரிய ஒளி இருக்கும் அய்ரோப்பிய நாடுகளே அதனை மின் ஆற்ற லாக மாற்றி தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும்போது, தினமும் வெய்யில் கொளுத்தும் இந்தியாவில் அதற்கான முன்னெ டுப்புகள் பரந்த அளவில் செய்யப் படவில்லை. கழிவுகள் குவிந்து கிடக்கும் இந்நாட்டில் அவற்றிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பமோ ஆராய்ச்சிகளோ அதிகளவில் செய்யப்பட்டுள்ளனவா?

பெருகிவரும் மின் தேவை, குவிந்துவரும் குப்பைகள், கழிவுகள் இவற்றை ஒருசேர சிந்திக்கும் அறிவியலாளர்கள் நம்மிடம் இல்லையா? அந்தப் பொறுப்பு அரசுக்கு இல்லையா? இக்கேள்விக்கு விடை தருகிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். கழிவுப் பொருள் மேலாண்மை, மாற்று மின்சாரத் தயாரிப்பு இரண்டையும் திறம்பட நிர்வகிக் கிறது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம். காய்கறிக் கழிவுகளையும், திரவக் கழிவு களையும் பல்லுயிரி வளர்ப்புக்கு உணவாக்கியும், மண்புழு உரமாக மாற்றியும் ஏற்கெனவே பயன் படுத்தி வந்தது.

சாண எரிவாயு தயாரிக்கும் முறையையும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திவந்தது. கடந்த 2011 ஜூலை 27 அன்று நடைபெற்ற பசுமைத் தொழில் நுட்பத்திற்கான பன்னாட்டு மாநாட்டில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில், பல் வகைக் கழிவுகளையும் எரிவாயு வாக மாற்றி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும், பயோ மீதேனேசன் பிரிவைத் தொடங்கி வைத்தார் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவரும் அறிவியலாளரூமான டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம். உயிர் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி பல படிநிலைகளில் நடைபெறுகிறது. மாட்டுச் சாணம், மனித திடக் கழிவு, காய்கறிக் கழிவுகள், வீணான உணவுப் பொருட்கள், சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுப் பொருட்களும் இதற்கு உள்ளீடாகப் பயன்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இதன் மூலம் 500 கனமீட்டர் எரிவாயு தயாரிக்கப்படுகிறது .

இந்த எரிவாயுவைக் கொண்டு ஒரு மணிநேரத்திற்கு 60 கிலோவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. இது எரிவாயு தயாரிக்க மட்டுமே பயன்படுவதில்லை; கூடுதலாக இதன் எஞ்சிய பொருள் மண்ணை வளப்படுத்தும்  (Soil conditioner) பொருளாகவும் பயன்படுகிறது. இந்த கலவைக் கலன் 18. மீட்டர் விட்டமும், 5.7 மீட்டர் உயரமும் கொண்டது. ஒரு நாளைக்கு திடக்கழிவு - 2 டன், காய்கறிக் கழிவு - 4 டன்; சாணம் - 3.5 டன், உணவுக்கழிவு - 0.5 டன் என மொத்தம் 10 டன் மூலப் பொருட்கள் இந்த திட்டத்துக்குத் தேவை. மனித திடக் கழிவுக்கென்று ஒரு குழாயும், பிற கழிவுப் பொருட்களுக்கென ஒரு குழாயுமாக இரண்டு குழாய்கள் இந்த டைஜஸ்டருக்கு உள்ளீடு குழாய்களாகும்.

சரிசெய்யப்பட்ட கழிவுகள் வெளிவர ஒரு குழாய் என இதன் அமைப்பு இருக்கும். உணவுக் கழிவும், காய்கறிக்கழிவும் பொடியாக்கப்பட்டு கலவைக் கலனுக்குள் அனுப்பப்படும். செங்குத்தான உந்தித்தள்ளியின் மூலம் இது கலவைக் கலனைச் சென்றடையும். இதே கலவைக் கலனுக்குள் மாட்டுச்சாணமும் கலக்கப்படுகிறது. இந்த கலவையிலிருந்து எரிவாயு வெளியாக 42 நாட்கள் ஆகும். அவ்வாயு வெளியேறிவிடாமல் இருக்க, டைஜஸ்டர் தார்ப்பாய் கொண்டு பராமரிக்கபட்டுள்ளது .

கழிவு நுரை படிந்துவிடாமல் இருக்க மீண்டும் மீண்டும் அது சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இதன் பிறகு பெறப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்பைடு ஆகிய வாயுக்கள் பலூனில் சேகரிக்கப்படுகின்றன. இது மின் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. வாயு சேகரிக்கப்படுவதைன் அளக்கவும், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யப்படும் கழிவுகளைச் சோதிக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அழுத்தமானி, வாயு அளக்கும் கருவி, அமிலக் காரக் குறியீட்டைக் குறிக்கும் கருவி ஆகியனவும் பயன்படுத்தப்படுகின்றன.

வாயு தயாரிக்கப்பட்டது போக எஞ்சிய கழிவுகள் மண்புழு உரமாகத் தயாரிக்கப் பயன்படுத்தபடுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்கள் முறைப்படி பயன்படுத்தப்பட்டு பயனுள்ள மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது மட்டுமே அல்லாமல், பல்கலைக் கழகத்தின் வெளியரங்குகளில், சாலைகளில் வைக்கப்பட்டி ருக்கும் மின் விளக்குகள் சூரிய வெப்பத்தினால் இயங்குமாறு வைக்கப்பட்டுள்ளன. அதற்காக சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யும் கருவி ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு உருவாகும் 500 கன மீட்டர் கழிவைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 60 கிலோ வாட் மின்சாரம், அதாவது ஒரு நாளைக்கு 480 யூனிட் மின்சாரம் தயாராகிறது.

இவ்வாறு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு ரூ.5.21; அரசு வழங்கும் மின்சாரத்திற்கான கட்டணம் ரூ.7.75. இம்முறையினால் பல்கலைக் கழகம் தனக்குத் தேவையான மின்சாரத்தில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக நிறைவு செய்யப் படுகிறது. மாற்று முறையில் மின்சாரம் தயாரிக்க வேண்டியது அவசர அவசியமாகும். இதற்கான உதவித் தொகைகளை மக்களுக்கு அரசு வழங்குமேயானால், நிச்சயமாக மக்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள்.

சூரிய ஒளி மின்சாரமும், இதர மாற்று மின்சாரங்களும் நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் பயனளிக்கக் கூடியனவாக இருக்கும். எதற்கும் வழிகாட்டும் பெரியார், இதோ மின் பற்றாக்குறை தீரவும் வழிகாட்டுகிறார். அவர் வழியில் நடைபோட்டால் நாடு நலம்பெறும்; வளம் பெறும்.


தமிழகத்தில் ஆசிரியர்கள் ஆர்பாட்டம் அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் ரெங்கராஜன் கூறினார். இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் மாதம் தோறும் 8,170 ரூபாய் குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமையின்படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தகுதி தேர்வு பிரச்னையால் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் சுமார் 3 லட்சம் பேருக்கு பாதிப்புகள் ஏற்படும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். பழைய முறையிலான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாத தவணை தொகை 150 ரூபாய் பிடித்தம் செய்ய்பபடுகிறது. இந்த தொகையை குறைக்க வேண்டும். கல்வித் துறை அலுவலகங்களில் சுமார் 2,534 காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விளக்க சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 18ம் தேதிக்குள் இக்கூட்டங்கள் நடத்தி முடிக்கப்படும். தொடர்ந்து நவம்பர் மாதம் 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியும், வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி அனைத்து பகுதிகளிலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். கோரிக்கைகளுக்காக பிற ஆசிரிய சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு மாநில பொது செயலாளர் கூறினார்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி !


மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இளைஞர் நலப்படிப்பியல் துறை சார்பில் 2013-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு சிறப்பு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இப்பயிற்சிக்கு அனைத்து வகுப்புகளையும் சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேரவிரும்பும் மாணவ, மாணவியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.mkuniversity.org மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பெயர், கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ் மற்றும் வருமான வரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்து, அவ்விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும், சுயவிலாசமிட்ட ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய 2 அஞ்சல் உறைகளையும் இணைத்து, முனைவர் பொ.பா.செல்லத்துரை, பேராசிரியர் மற்றும் தலைவர், ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வு சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை-21 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.10.12. அக்டோபர் 31-ம் தேதி முனைவர் முவ அரங்கில் நுழைவுத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.


வியாழன், 18 அக்டோபர், 2012

சினிமா பாணியில் தொலைந்து போன கிராமம் ,20 ஆண்டுகளுக்குப் பிறகு நிஜத்தில் கண்டுபிடிக்கப்பட்டது


 சினிமா பாணியில் பொன்னேரி அருகே தொலைந்து போன ஒரு கிராமம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அனுப்பம்பட்டு ஊராட்சி வரைபடத்தில் இருந்த சின்னஞ்சிறு கிராமம். இதன் மொத்த பரப்பளவே 1 1/2 ஏக்கர்தான். கிராமத்தை சுற்றி அரண்போல் வயல்வெளியும், அனுப்பம்பட்டு ஏரியும் காட்சியளித்தது. நீரலைகள் ததும்ப பசுஞ்சோலைக்குள் ஒரு நந்தவனமாய் வேலப் பாக்கம் வியக்க வைத்தது. 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தார்கள்.

விவசாயத்தையே நம்பி வாழ்ந்த அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. வண்டிப்பாட்டையை சாலையாக பயன்படுத்தி வந்தார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள், துள்ளி விளையாடிய பூமி-சாதியை மறந்து பல இனத்தவர்கள் கூடி வாழ்ந்த அதிசய கிராமம் ஆக்கிரமிப்பாளர்களின் கண்களை உறுத்தியது. அதிகார வர்க்கத்தினர் விரட்டுயடித்ததால் ஊரை காலி செய்து அனைத்து குடும்பங்களும் வெளியேறியது.

வேலப்பாக்கம் கிராமமும் அந்த கிராமத்துக்கு செல்லும் 600 மீட்டர் நீளமும் 30 அடி அகலமும் கொண்ட வண்டிபாட்டையும் தனியார் சிலரது சொத்துக்களாக மாறியது. வேலப்பாக்கம் என்ற கிராமமே இருந்த சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை பதிவேடுகளில் மட்டும் அழிக்க முடியாத எழுத்துக்களாய் வேலப்பாக்கம் இருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள்? என்ற எந்த விபரமும் பதிவேடுகளில் இல்லை.

இந்த நிலையில் மகாத் மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த திருவள்ளூர் கலெக்டர் ஆசிஷ்சாட்டர்ஜி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். எங்கெங்கு அரசு நிலங்கள் உள்ளது என்பதை கண்டறிந்து பணிகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி லதா, ஊராட்சி தலைவர் (பொறுப்பு) சுந்தரராஜன் மூலம் நிலங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பையும் மீறி பதிவேடு கள் மூலம் வேலப்பாக்கம் கிராமம் இருந்த தகவல்களை திரட்டி அதிகாரிகள் நிலத்தை மீட்டனர். தொலைந்து போன வேலப்பாக்கம் மீட்கப் பட்டதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் 50 குடும்பங்களை குடியமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வேலப்பாக்கம் என்ற பெயர் பலகையுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் அந்த பகுதிக்கு சாலைப்பணிகள் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட கிராமம் மீண்டும் உயிர்பெற்று எழுந்துள்ளதை அந்த பகுதி மக்கள் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கிறார்கள்.

புதன், 17 அக்டோபர், 2012

எய்ட்சை தடுக்கும் பசுவின் பால் !


  உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி., எய்ட்சை பசுவின் பால் அருந்தினால் தடுக்கலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மார்டிட் கிராம்ஸ்கி இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். அவர் சோதனையின்படி, கருவுற்றிருந்த பசு ஒன்றில், எச்.ஐ.வி., புரோட்டீன்களை (ஆன்டிஜென்ஸ்) உட்செலுத்தி, அந்த பசு கன்று ஈன்ற பின் தந்த முதல் பாலை (கொலாஸ்டிரம்) சோதனை செய்து பார்த்தில், எச்.ஐ.வி.,யை தடுக்கக்கூடிய ஏராளமான எதிர் உயிரிகள் (ஆன்டிபாடீஸ்) இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

தற்போது விஞ்ஞானிகள் இந்த முறை எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தனது சோதனை குறித்து மார்டிட் கிராம்ஸ்கி கூறுகையில், எச்.ஐ.வி., வைரசின் மேற்பரப்பில், எதிர் உயிரிகள் நிறைந்த புரோட்டீன் (ஆன்டிபாடீஸ்) ஒட்டிக்கொள்ளும். இதனால் எச்.ஐ.வி., வைரசால், மனித செல்களில் ஒட்டிக்கொள்ள இயலாது. இதன் மூலம் மனிதர்களுக்கு எச்.ஐ.வி., பரவுவது தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி., வைரசின் மேற்பரப்பில் பூட்டில் சாவியைப் போல எதிர் உயிரி புரோட்டீன் இணைவதால், எச்.ஐ.வி., வைரசால் வேறு எந்த செல்லுடன் இணைய முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. 

இதில் ஒரு கவலை தரத்தக்க விஷயம் என்னவென்றால் இம்முறை செயல்பாட்டிற்கு வர இன்னும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது தான்.

செவ்வாய், 16 அக்டோபர், 2012

சுற்றுலா கைடு - ஒரு சுவாரஸ்யமும் பயனும் நிறைந்த தொழில்


சுற்றுலா கைடு என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த தொழிலாகும். ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நாட்டைப் பற்றிய ஒரு சிறந்த மதிப்பீட்டை, சுற்றுலாப் பயணிகளிடம் உருவாக்கும் ஒரு மாபெரும் பணியை கைடு மேற்கொள்கிறார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, நலன், திருப்தி மற்றும் சந்தோஷம் போன்றவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். நல்ல தகவல்தொடர்பு திறன், வெளிநாட்டு மொழியில் புலமை மற்றும் பிறரிடம் சகஜமாக பேசிப் பழகும் பாங்கு போன்றவை ஒரு வெற்றிகரமான சுற்றுலா கைடுக்கு தேவையான பண்புகள்.

லைசன்ஸ் அளிக்கப்பட்ட கைடுகளின் வகைகள்

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், போதுமான தகுதிகளை அடைந்த கைடுகளுக்கு, பிராந்திய அடிப்படையில் லைசன்ஸ்களை வழங்குகிறது. மொத்தம் 5 பிராந்தியங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவை, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவையே. மாநில அளவிலான லைசன்ஸ், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. இதற்கான விபரங்கள், அந்தந்த மாநில சுற்றுலாத் துறைகளின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.

பிராந்திய நிலையிலான கைடுகளில்(Regional level guides - RLG) 4 பிரிவினர் உள்ளனர்


1. பொது

முழுநேர அடிப்படையில், தங்களுக்கான பிராந்தியங்களில் இவர்கள் பணிபுரியலாம். இவர்கள், ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்களாக, பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், தங்களின் பள்ளி படிப்பிலும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

2. பொது - மொழி அடிப்படையிலான

பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், கொரியன், ரஷ்யன், ஜப்பானீஸ், தாய், அராபிக், ஹங்கேரியன், போலிஷ், ஹீப்ரூ மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் புலமைப்பெற்றவர்கள் இந்தப் பிரிவுக்குள் வருவார்கள். இவர்கள், அவ்வப்போது, சுற்றுலா அமைச்சகத்தால் அடையாளம் காணப்படுவார்கள்.

இவர்கள், ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை கட்டாயம் முடித்திருக்க வேண்டும் மற்றும் ஆங்கிலம் தவிர்த்த, மேற்கூறிய மொழிகள் ஒன்றில் புலமை பெற்றிருக்க வேண்டும்.


3. நிபுணத்துவ கைடுகள்

சுற்றுலா, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாச்சாரம் மற்றும் வனம் - வனவிலங்குகள் போன்ற சுற்றுலா தொடர்பான துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், சிறப்பு பிரிவில் அடங்குவார்கள். நிபுணத்துவ கைடுகள் என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்கள், ஆங்கிலத்தில் புலமைப் பெற்றிருக்க வேண்டும்.



4. நிபுணத்துவம் - மொழி அடிப்படையிலான
சுற்றுலா தொடர்பான, இந்திய வரலாறு, கட்டடக்கலை, கலாச்சாரம், தொல்லியல் துறை, வனம் - வனவிலங்கு மற்றும் சுற்றுலா ஆகியவை தொடர்பான படிப்புகளில் முனைவர் பட்டம் அல்லது சிறப்பு படிப்பை முடித்தவர்கள் இப்பிரிவில் அடங்குவார்கள்.
வெளிநாட்டு மொழியில், படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் போன்ற அம்சங்களோடு, நல்ல புலமைத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதிகள் மற்றும் பணியிடங்கள்
மேற்கூறிய சுற்றுலா கைடுகள் பிரிவுகளில் ஒருவர் தேர்வு பெற்றிட, முதல் மீடியா விளம்பரம் கொடுக்கப்படும் தேதி பிரகாரம், 20 வயதுடையவராக இருத்தல் வேண்டும். பல்வேறு நாடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் அதற்கு தேவைப்படும் கைடு பணிநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில், சுற்றுலா கைடுகளின் தேவை அளவிடப்படும். இந்தப் பணியானது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் நடத்தப்படும்.
தேர்வாதல்
கைடுகளை தேர்வு செய்யும் செயல்பாடானது, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம்(IITTM) அல்லது சுற்றுலா அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு ஏதேனும் அமைப்பைக் கொண்டு நடத்தப்பெறும். ஒருவர் தேர்வு பெற்றவுடன், அவருக்கு IITTM -ல் பயிற்சியளிக்கப்படும்.பிராந்திய வாரியாக, பயிற்சிக்காக, எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு கொடுக்கப்படும் விளம்பரங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 3 மணிநேரம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலமாக, பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் ஒருவரின் பொது நுண்ணறிவுத் திறன் மற்றும் தகுதி பரிசோதிக்கப்படும்.மொத்தம் 300 மதிப்பெண்களில், குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும்.பயிற்சிக்காக அறிவிக்கப்பட்ட இடங்கள், நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படும்.
பயிற்சி மற்றும் லைசன்ஸ் பெறுதல்
குவாலியர், புவனேஷ்வர், டெல்லி, கோவா மற்றும் நெல்லூர் போன்ற இடங்களில் அமைந்துள்ள IITTM -ன் வளாகங்களில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய ஆர்கியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் இடங்களில் களப் பயிற்சி மற்றும் வகுப்பறை பயிற்சிகள் இத்திட்டத்தில் இடம்பெறும்.
பொது மற்றும் பொது(மொழி அடிப்படையிலான) வகையினருக்கு 26 வாரங்களும், நிபுணத்துவம் மற்றும் நிபுணத்துவம்(மொழி அடிப்படையிலான) வகையினருக்கு 13 வாரங்களும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்த அனைவரும், இன்னொரு பெரிய படிநிலையைக் கடக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் Viva voce போன்ற அம்சங்களைக் கொண்ட அடுத்தக்கட்ட தேர்வானது, ஒருவரின் வழிகாட்டும் திறன், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் இடங்களைப் பற்றிய அறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் வெளிநாட்டு மொழியில் அவரின் புலமை(தேவையான இடங்களில்) போன்றவை இவைகளின் மூலம் அளவிடப்படும்.
இந்த இறுதித் தேர்வை ஒருவர் எழுத, வகுப்பறை மற்றும் களப்பயிற்சியில், குறைந்தது 80% வருகைப்பதிவை பெற்றிருக்க வேண்டும். அனைத்தையும் வெற்றிகரமாக முடித்தப்பின்னர், இந்திய அரசின், பிராந்திய இந்திய சுற்றுலா அலுவலகத்தால், பிராந்திய நிலையிலான கைடு லைசன்ஸ் வழங்கப்படும்.
இந்த லைசன்ஸ் 3 வருடங்களுக்கு செல்லும். பின்னர், Refresher courses முடித்து இதை புதுப்பித்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டு மொழியில் புலமை
கைடு படிப்பை வெற்றிகரமாக முடிக்க, இந்தப் புலமையானது அவசியமான ஒன்று. ஆங்கிலத்தில் தடுமாற்றம் உள்ளவர்கள், பிரட்டிஷ் கவுன்சில் நடத்தும் மொழித்திறன் படிப்புகளில் பங்கேற்று, தங்களின் மொழியறிவை வளர்த்துக் கொள்ளலாம். மேலும், பிற வெளிநாட்டு மொழிகளைப் படிக்க, தனியார் நிறுவனங்களை அணுகலாம்.
அவை, இதுதொடர்பான பயிற்சிகளை வழங்குகின்றன. வெளிநாட்டு மொழிகளைப் படிப்பவர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் நடத்தும் மொழி படிப்புகளில் சேர்ந்து பயிற்சி பெறுவதே சிறந்தது. ஏனெனில், இதன் மதிப்பு அதிகம்.
சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும்
அதிகளவிலான வாய்ப்புகள் இதுபோன்ற ஆபரேட்டர்களிடமிருந்தே வருகின்றன. Cox and kings, Thomas cook, Le passage to India tours and travels, Kuoni travels, Abercrombie, Kent India and SITA tour and travels போன்றவை, முன்னணி சுற்றுலா ஆபரேட்டர் நிறுவனங்களாகும்.இவை பெரும்பாலும், சர்வதேச விமானங்கள் அதிகம் வரும் மும்பை மற்றும் டெல்லியை அடிப்படையாக கொண்டவை.
சம்பளம்
சுற்றுலா தொழில் துறையில் நல்ல அறிமுகம் பெற்ற ஒருவர் லைசன்ஸ் பெற்ற கைடு, வருடத்திற்கு ரூ.4 முதல் ரூ.7 லட்சம் வரை சம்பாதிக்கிறார். மேலும், வருவாயானது, ஒருவர் எந்த மொழியில் புலமை பெற்றிருக்கிறார் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
ஆங்கிலம் மட்டுமே நன்கு அறிந்த ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.2,500 பெறுகிறார். ஆங்கிலம் தவிர்த்த பிற வெளிநாட்டு மொழிகளில் பணிபுரியும் ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.3,000 வரை பெறுகிறார்.
முக்கிய அறிவுரை
சுற்றுலா ஆபரேட்டர்களின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கையாளும்போது, கவனமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், இவர்கள் உங்களைப் பற்றி தரும் Feedback -கள்தான், உங்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை அதிகரித்து, அதிக வருமானத்திற்கு வழிவகுக்கும்.




ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ரோபோடிக்ஸ் துறை படிப்புகள்


பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, வீடு அல்லது காரை, ரோபோட்டுகளை வைத்து சுத்தம் செய்யலாம் என்ற சிந்தனையானது, வெறும் பகட்டும், ஆடம்பரமும் நிறைந்தது என்று சொல்லி ஒதுக்கப்பட்டது. இன்றைய நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ரோபோடிக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மனித வளத்திற்கு பஞ்சம் நிலவும் இன்றைய காலகட்டத்தில், பலவிதமான வேலைகளை செய்வதற்கு, ரோபோட்டுகளைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக உள்ளது. மேற்கூறிய நாடுகளில், எதிர்வரும் குறுகிய காலத்தில், பலவிதமான வேலைகளுக்கு, மக்கள், ரோபோட்டுகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு, விலை மலிவான மற்றும் பலவிதமான வேலைகளை செய்யும் ரோபோட்டுகளை அதிகளவில் தயாரிப்பதற்கான சூழல் உருவாகும் என்றால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ரோபோட்களின் பயன்பாடு

இன்றைய விஞ்ஞான யுகத்தில், ரோபோட்களின் பயன்பாடு என்பது விரிவடைந்த ஒன்றாக விளங்குகிறது. வீட்டுப் பயன்பாடுகள் முதற்கொண்டு, பலவிதமான தொழிற்சாலை பயன்பாடுகள் வரை, ரோபோட்கள் தேவை இருக்கிறது. தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள், பளுவான பொருட்களை கையாளுதல், வீட்டு வேலைகள், மனிதன் செய்ய வேண்டிய சில கடினமாக வேலைகள் போன்ற பல பணிகளுக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.

பரந்துவிரிந்த துறை

ரோபோடிக்ஸ் என்பது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எம்பெட்டெட் சிஸ்டம், கணிப்பொறி அறிவியல் மற்றும் காக்னிடிவ் அறிவியல் போன்ற பல துறைகளில் சம்பந்தப்பட்டுள்ளது.

ரோபோடிக்ஸ் தொழில்துறையில், பொறியியல் செயல்பாட்டின் பல கட்டங்களில் பல நிலைகள் உள்ளன. சில பொறியாளர்கள், சிக்கல்களை, ரோபோடிக்ஸ் எவ்வாறு தீர்க்கிறது மற்றும் செயல்பாட்டை இன்னும் சிறப்புள்ளதாக மாற்றும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள். வேறு சிலர், தற்போது இருக்கும் பொறியியல் கோட்பாடுகளை, ரோபோட்களை மேம்படுத்துவதில் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் இதன் மேம்பாடுகள்

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில்(SERC) கட்டுப்பாட்டின் கீழ், ரோபோடிக்ஸ் துறை தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகிறது.

பல பல்கலைகள், தேசிய ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த பல நிபுணர்களின் உதவியோடு மட்டும் அல்லாமல், பலவிதமான பிரிவுகளில், Programme advisory committee ன் உதவியையும் SERC பெறுகிறது.

இந்தியாவில் பின்பற்றப்படும் தராளமய பொருளாதார கொள்கைகளால், நம் நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் பலவிதமான ஆட்டோமொபைல் கம்பெனிகளில், ரோபோடிக்ஸ் பயன்பாடு முக்கிய இடம் வகிக்கிறது.


இந்தியாவில் பயிற்சி வாய்ப்புகள்

ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில், சில பல்கலைகள், பட்டப் படிப்பை வழங்குகின்றன. இது highly interdisciplinary படிப்பாகும். அதேசமயம், இத்துறையில் நுழைய வேறு பல வாய்ப்புகளும் உள்ளன. இப்போதுவரை, இளநிலை பட்டப்படிப்பு அளவில், ரோபோடிக்ஸ் படிப்பிற்கு, இந்தியாவில் மிகவும் குறைந்த வாய்ப்புகளே உள்ளன.

அதேசமயம், ஒரு சில கல்வி நிறுவனங்கள், M.Tech மற்றும் MS நிலையில் இத்துறை சார்ந்த சிறப்பு படிப்புகளை வழங்குகின்றன. Artificial Intelligence என்பது ரோபோடிக்ஸ் துறையுடன் மிகவும் நெருங்கியவை. பல கல்வி நிறுவனங்கள், Artificial Intelligence மற்றும் ரோபோடிக்ஸ் துறையில், முதுநிலைப் படிப்புகளை வழங்குகின்றன.

நம் நாட்டைப் பொறுத்தவரை, பாரம்பரிய படிப்புகளில் ஒன்றான, Theory of machines & control போன்ற படிப்பைக்கூட சிறப்பாக கற்றுத்தரும் அளவிற்கு தகுந்த ஆசிரியர்கள் பல பொறியியல் கல்லூரிகளில் இல்லை. இந்த நிலையில், ரோபோடிக்ஸ் துறையில், சிறப்பு பி.டெக் படிப்பை வழங்குவதென்பது இப்போதைக்கு பயன்தராத ஒரு விஷயம் என்று சில கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இளநிலைப் படிப்பு

இளநிலை அளவில் ஒருவரின் படிப்புத் தேர்வு என்பது தனிப்பட்ட ஆர்வத்தைப் பொறுத்தது. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய துறைகளில் பி.டெக் படிப்பதானது, ஒருவரின் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். முடிவாக, சிறப்பு படிப்பும் தேவை.

தற்போதைய நிலையில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு பயிற்சியளிக்கலாம். தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை கொணர்வது அவசியம். இதன்மூலம், மெக்கானிக்கல் பொறியாளர்கள், எலக்ட்ரானிக்ஸ் துறையில் திணற அவசியமில்லை. அதேசமயம், மெக்கட்ரானிக்ஸ் துறையில் வழங்கப்படும் பி.டெக் படிப்பானது, ரோபோடிக்ஸ் துறையுடன் ஓரளவு நெருங்கி வரும் ஒன்றாக திகழ்கிறது.

இந்தியாவிலுள்ள வேலை வாய்ப்புகள்

ரோபோடிக் தொடர்பான வேலை வாய்ப்புகள் இந்தியாவில் ஓரளவுக்கு விரிவடைந்துள்ளது. ரோபோடிக்ஸ் துறையில் சிறப்பு(specialisation) படிப்பை முடித்தவர்கள், மெக்கானிக்கல் தொடர்புகள், சென்சார் - ஆக்சுவேடர் இன்டக்ரேஷன்ஸ், மென்பொருள் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் ஆகியவற்றின் அடிப்படையில், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமாக, ஆட்டோமேஷன் பயன்படுத்தப்படும் இடங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

இந்தியாவிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவனங்கள்

Precision automation robotics India limited(PARI)
ABB
Kuka robotics and DiFACTO Robotics and Automation

போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRDO), பலவிதமான சூழல்களையும், சிக்கல்களையும் கையாள, பல்வேறு விதமான ரோபோட்களை வைத்துள்ளது. DRDO, நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் ரோபோட்களை கட்டமைக்க, Centre for artificial intelligence and robotics போன்ற நிறுவனங்களை அமைத்துள்ளது.

வரும் காலங்களில், வர்த்தகம், வீட்டு உபயோகம், பாதுகாப்பு, போக்குவரத்து, விநியோகம், மெக்கானிக்கல் உள்ளிட்ட மனித வாழ்வின் பல முக்கிய அம்சங்களில், ரோபோட்களின் பங்களிப்பு அதிகரித்துவிடும்.

இத்துறையில், அதிகளவு வேலைவாய்ப்புகள் இருந்தாலும், பயிற்சிகள் குறைவாகவே உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இது தொடர்பான படிப்புகள் குறைவாகவே வழங்கப்படுகின்றன. ஒரு பல்துறை அம்சமாக இருக்கும் ரோபோடிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் அல்லது கணிப்பொறி அறிவியல் துறைகளைப்போல், முதுநிலைப் பட்ட அளவில் ஒரு சிறப்பு படிப்பாக உள்ளது.

இந்தப் படிப்பில் ஆர்வமுள்ள ஒருவர், இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள், இப்படிப்பை வழங்கும் வரை காத்திருக்கலாம். மற்றபடி, இதுதொடர்பான சிறப்பு படிப்புகளுக்கு தற்போதைக்கு, வெளிநாடுகளுக்கு செல்லலாம்.


ரோபோடிக்ஸ் பொறியாளரின் பணிகள்

* ரோபோட் வடிவமைப்பு.

* பல்துறைகளில் ரோபோடிக் பயன்பாடுகள் பற்றி ஆராய்தல்.

* ரோபோட் அமைப்புகளின் பயன்பாடு மற்றும் வடிவமைப்பில், பொறியாளர்களுக்கு உதவுதல்.

* ரோபோட் தயாரிப்பில் பயன்படக்கூடிய எலக்ட்ரானிக் உட்கூறுகளை ஆராய்தல்.

* ரோபோட்களை உருவாக்கிய பின்னர், குறைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சோதித்தல்.

* தேவைப்படும் இடங்களில், ரோபோட்களை அல்லது ரோபோட் அமைப்புகளை நிறுவுதல்.

* ரோபோட் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுதல்.

* பயனாளிகளுக்கு உதவுதல்

உள்ளிட்ட பலவிதமான பணிகள் உள்ளன.

ரோபோடிக் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

* IITs - Chennai, Delhi, Kanpur, Guwahathi, Powai, Roorki and Kharagpur.

* PSG College of Technology - Coimbatore.

* SRM institute of science and technology - Kanchipuram.

* International Institute of information technology - Hyderabad.

* The university of Hyderabad.

* University college of engineering under Osmania university - Hyderabad

* M.S. University - Baroda

* The institute of technology under the Banaras Hindu university - Varanasi

* The Birla institute of technology and Science - Pilani

* Sri sathya sai institute of higher learning - Prasanthi nilayam.