கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., நனோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி படிப்பிற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் எம்.எஸ்சி., நனோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, இயற்பியல், அப்ளைடு கெமிஸ்ட்ரி அல்லது பாலிமர் கெமிஸ்ட்சி ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500ம், எஸ்.சி, எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.250ம் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
தகுதியான மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
நவம்பர் 10 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.universityofcalicut.info/notification/MtechNanoscience19.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக