Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 20 ஜூன், 2012

நெல்லை மாநகராட்சிக்கு IUML கோரிக்கை


                                                                                            

மேலப்பாளையம் 29வது வார்டு விரிவாக்கப்பகுதியில் குடிநீர் பிரச்னை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேயரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேலப்பாளையம் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து தலைவர் நாகூர்கனி, செயலாளர் முகைதீன் அப்துல்காதர், பொருளாள் அப்துல்ஜப்பார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் 29வது வார்டு காயிதே மில்லத் நகர், அமுதா நகர் விரிவாக்கப்பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இப்பகுதியில் குடிநீர் இணைப்பு அதிகமாக உள்ளதால் குடிநீர் சீராக வருவதில்லை. குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டியும் இல்லை. மின் கம்பங்களில் மின் குழல் விளக்குகள் அமைத்து தரவேண்டும். துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமித்து துப்புரவு பணிகளை விரைவாக செய்யவேண்டும். அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக