முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் ஓட்டல் திறக்கப்பட்டது.புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ள காரையார், பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவிகளை பார்வையிட தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு புலிகள் காப்பகம் பாபநாசம் சூழல் மேம்பாட்டு திட்டம் சார்பில் மைலார் காணிக்குடியிருப்பு இயற்கை மகளிர் சுயஉதவி குழு சார்பில் காரையாரில் ஓட்டல் நடத்தப்படுகிறது.ஓட்டலை அம்பை., புலிகள் காப்பக துணை இயக்குநர் வெங்கடேஷ் திறந்து வைத்தார். முண்டந்துறை வனச்சரகர் செல்வின் லால், பாபநாசம் சூழல் சரக உதவி வன உயிரின காப்பாளர் இளங்கோ, காணிக்குடியிருப்பு ஊர் தலைவர் தட்சிண மூர்த்திகாணி, செயலாளர் கணேசமூர்த்தி, அகஸ்தியர் காணிக்குடியிருப்பு சேர்மன் தமிழரசி, ஊக்குநர் சீதா உட்பட வனத்துறையினர், காணியின மக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக