பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர்மொய்தீன் தெரிவித்தார்.
இதுகுறித்து, விருதுநகரில் அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ய, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தால், மக்கள் மத்தியில் கண்டிப்பாக மரியாதை கிடைக்கும்.
சேது சமுத்திரத் திட்டம் முடங்கியுள்ளதால் தமிழகத்தின் தென் பகுதியில் தொழில்கள் முடங்கி உள்ளன.
வருகிற செப்டம்பர் 8-ம் தேதி கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில், கட்சியின் அகில இந்திய தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.
சிறுபான்மையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும்.
கலாம் என்றால் அராபியில் வேதத்தின் அடியார் என்று பொருள் உண்டு. அதேபோல, தமிழில் கலகம் என்றும் பொருள் இருக்கலாம்.
இதுவரையில், அப்துல்கலாம் கலகம் எதுவும் விளைவிக்கவில்லை.
கருணாநிதி அப்துல்கலாம் மீது மிகவும் அன்பு கொண்டவர். அவர்தான், கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராகக் கொண்டு வர முயற்சி செய்தார் என்றார் அவர்.
கட்சியின் மாநிலச் செயலர் பஷீர், நெல்லை மாவட்டச் செயலாளர் கே.எம்.நிஜாமுகைதீன், விருதுநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எ. இப்ராஜூம் ஷா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
நன்றி :தினமணி (ஜூன் 20 ,2012 ) ௦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக