தமிழகத்தில் 529 பேரூராட்சிகள் உள்ளன. சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் வரி, கடை லைசென்ஸ் சலான், பிளான் ரசீதுகள், பில்கள், வவுச்சர்கள் என அனைத்திற்கும் கம்ப்யூட்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பேரூராட்சிகளில் இருந்து இயக்குனர் அலுவலகத்திற்கு, இ-மெயில் தகவல்கள் பரிமாறப்படுகின்றன. அனைத்து பேரூராட்சிகளிலும், ஆன்லைனில் ரசீது போடும் முறை அமலில் உள்ளது. அனைத்து பணிகளுமே கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் மட்டும் நியமிக்கப்படவில்லை.
அனைத்து பணியாளர்களுமே தற்காலிக பணியிடத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக மிகவும் குறைந்த அளவு சம்பளமே வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கேட்டு அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. இதனால் மிகவும் சிரமமான வாழ்க்கை சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாடு பேரூராட்சி செயல்அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் அனைத்து பணியாளர் சங்க மாநிலபொதுச் செயலாளர் மகேஸ்வரன் கூறியதாவது: கம்ப்யூட்டர் பணியாளர்கள் இல்லாவிட்டால், பேரூராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்து விடும். எனவே அவர்களை பணிநிரந்தரம் செய்து, சம்பளம் வழங்க வேண்டும். செயல் அலுவலர்களும் கம்ப்யூட்டர் இல்லாமல் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செயல்அலுவலர்களுக்கு கட்டாயம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க வேண்டும். இதன் மூலம் அரசுடன் தகவல்களை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியும். பேரூராட்சி நிர்வாகம் எளிதாகும்,என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக