இந்த நிலையில் ,இந்தியாவில் தங்கிய சில முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம்களுக்கு தனியாக அரசியல் அமைப்பு தேவையில்லை , தனிப்பட்ட சிவில் சட்டங்கள் கூட தேவையில்லை என்று முழங்கத் தலைப்பட்டனர் .
தாங்கள் பிறந்த மண்ணை ,தாங்கள் ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திர தாய் மண்ணை விட்டு போகாத முஸ்லிம்கள் ,முஸ்லிம்களாக வாழ்வதற்கு கேள்விக்குறி எழுப்பப்பட்டது .
அந்த கொடூரமான நிலையில் , அல்லாவை மட்டுமே நம்பி 1948 -ஆம் ஆண்டு மார்ச் -10 -ஆம் நாள் இந்தியாவிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கூட்டம் இன்றைய சென்னை ராஜாஜி ஹாலில் நடந்தது . அந்த கூட்டத்திற்கு ராஜாஜி ஹாலை வழங்கிய அன்றைய ஆட்சியாளர்கள் கூட , முஸ்லிம்கள் தங்கள் வாழ் உரிமையை கேட்பதற்கு தலைப்பட மாட்டார்கள் இந்த கூட்டத்தோடு ,முஸ்லிம்கள் கூடுவது முடிந்துவிடும் என்று எண்ணிதான் கொடுத்தார்கள் .
ஆட்சியாளர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ,அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வண்ணம் சில முஸ்லிம் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் நடந்து கொண்டனர் . இந்தநிலையில் அந்த கூட்டத்தில் ,ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் , இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் தன் மானத்தோடு ,தங்கள் மார்க்கத்தை
கடைபிடித்து வாழ்வார்கள் ,அதனில் எந்த மனித ஆட்சியாளர்களும் தலையிட அனுமதிக்க மாட்டோம் ; இந்தியாவில் இஸ்லாமியர்கள் ,இஸ்லாமியர்களாக வாழ "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"தொடரும்; இந்தியாவில் ஒரு உண்மையான முஸ்லிம் இருக்கும் வரை ,உலகின் இறுதிநாள் வரை இன்ஷாஅல்லாஹ் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிலைக்கும், அல்லாஹு அக்பர் ! முஸ்லிம் லீக் ,ஜிந்தாபாத் !
என்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள் வீர முழக்கமிட்டார்கள்!
இந்தியாவில் முஸ்லிம்கள் பிறந்ததிலிருந்து , இறக்கும் வரை இஸ்லாமிய சட்டதிட்டங்களின் அடிப்படையில் வாழ்வதற்கு உரிமை முழக்கமிட்டு ,அந்த உரிமைகளை நம் சமுதாயத் தந்தை காயிதே மில்லத் (ரஹ் ) அவர்கள் நிலைநாட்டிய பெருநாள் ,திருநாள் ,உரிமைகள் மீட்டப்பட்ட நாள் ,1948 ,மார்ச் -10 ஆம் நாள் !
இந்தியாவில் இஸ்லாமியக் குழந்தை பிறந்த பின் செய்யப்படும் விசயங்களிலிருந்து ,அவன் இறந்த பின் அடக்கம் செய்யப்படும் விஷயங்கள் வரை உரிமைகளை பெற்றுத் தந்த பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !
இந்தியாவில் ஆலிம்களை அரசு ஊழியர்களாக்கிய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !
டெல்லி, அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின், முஸ்லிம் சமுதாய உரிமையை நிலைநிறுத்திய பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !
இந்தியாவில் முஸ்லிம்களின் உண்மை நிலையை உலகறியச் செய்த ராஜேந்திர சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் அமைய காரணமான பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !
சென்னை புதுக்கல்லூரியிலிருந்து நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிவரை உருவாக காரணமான பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திட வித்தான பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !
உலமாக்கள் நல வாரியம் பெற்றுத் தந்த பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் !
இந்திய பெருநாட்டில் சமூக நல்லிணக்கம் நிலைபெற்று , மதச்சார்பற்ற ஜனநாயகம் நிலைபெற்று ,அனைத்து சமூகமும் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதோடு ,சிறுபான்மை முஸ்லிம் சமுதாயமும் கல்வி ,வேலைவாய்பு ,ஆட்சி அதிகாரத்தில் சம உரிமை பெற்று வாழ ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வலுப்பெறச் செய்வோம் என்று முஸ்லிம்கள் உரிமை நிலைநாட்டப்பட்ட இன்று மார்ச் -10 ஆம் நாளில் சூழுரைப்போம் !
அல்லாஹு அக்பர் ! முஸ்லிம் லீக் ,ஜிந்தாபாத் !
---------அபு ஆஸிமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக